இரணைமடு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளனர் -பாதுகாப்பு அமைச்சகம்

இரணைமடு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்தி: கிளிநொச்சி படைநடவடிக்கையில் உள்ள 57வது படைப்பிரிவினர் கடந்த சிலநாட்களாக கடும் தாக்குதல்களை நடத்தி இன்று(ஜன:01) காலை இரணமடு சந்தியை கைபற்றியதாக வன்னிக் களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ரிரிஈபயங்கரவாதிகள் இப்பகுதியை தக்க வைத்துக்கொள்ள பெரும் எதிதாக்குதல்களில் ஈடுபட்டுவந்தனர். இச்சந்தி கிளிநொச்சிக்கு 6 கி.மீ.தெற்காக ஏ-9 பாதைக்கு அன்மையில் அமைந்துள்ளது. இத்தாக்குதல்களை விமானப்படையினரின் உதவியுடன் 574 பிரிகேட் படையினர் கைபற்றியுள்ளனர்.

கிளிநொச்சி களமுனையில் பரந்தனுக்கு அடுத்ததாக இரணமடு சந்தியை எல்ரிரிஈயினர் பிடியில் இருந்து படையினர் விடிவித்துள்ளதால் கிளிநொச்சி நகரம் எவ்வேளையிலும் படையினரால் கைபற்றப் படலாம் என பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரவு: http://www.vidivu.lk/tm.asp?fname=20090101_04

Leave a Reply

Your email address will not be published.