‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.01.09) செய்திகள்

 சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் மோர்ணிங் லீடர்தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளிவந்த மோர்ணிங் லீடரின் அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
மகிந்த ராஜபக்ச அரசாங்கம்காலவரையறைஎன்ற பொறிக்குள் சிக்கியுள்ளது. இப்போது அது மீண்டும் ஒரு கால எல்லையை அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக கிளிநொச்சியை கைப்பற்றப்போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்யப் போவதாகவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆனால், பொருளாதார தளம்பல் அரசாங்கம் நடத்தும் புலிகளுக்கு எதிரான போரில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. முக்கியமான உற்பத்தி நிறுவனங்கள் பல வீழ்ச்சியடையும் கட்டத்தை அடைந்துவிட்டன. தனியார் வங்கிகளும் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளன.
வைப்பில் இடப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் பெருமளவில் மீள எடுத்து வருவதும், கடன் மற்றும் கடன் அட்டைகளுக்கான மீள செலுத்தும் தொகைகளை வாடிக்கையாளர்கள் செலுத்த தவறுவதும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு தகர்ந்து போகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையும் இந்த வருடத்தில் 41.1 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மகிந்த தலைமையில் கூடிய அவசர கூட்டத்தில் நிதி நெருக்கடிகளை சமாளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நிதி நெருக்கடி அடுத்த சில மாதங்களில் அரசின் கைகளை மீறிவிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வன்னியில் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை பாகிஸ்தானின் ஆயுத உதவியில் தங்கியுள்ளது. பாகிஸ்தான் வன்னி நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்களையும் ஏனைய படைத்துறை உபகரணங்களையும் வழங்கி வருகின்றது.
அரசாங்கத்துக்கு தேவையான ஏனைய உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. கிளிநொச்சி நகர் வீழ்ச்சி கண்டாலும் தொடர்ந்து போராடுவோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
ஆனால், உலகம் பாரிய பொருளாதார அழுத்தங்களை சந்திக்கும் போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மறைந்து போகலாம்.
அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் இல்லை. அது விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு முயற்சித்து வருகின்றது. ஆனால், தடை செய்தாலோ அல்லது செய்யா விட்டாலோ போர் தொடரும் என்பது நிச்சயம். ஆனால் போர் தொடரும் சந்தர்ப்பத்தில் மகிந்தவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் அதிக நிதி தேவை.
சுயாதீன ஊடகங்களில் பல, அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு உட்படுவதால் புதிய வருடத்தில் சிறிலங்கா மக்கள் முற்று முழுதாகவே பேச்சு உரிமைகளை இழந்தவர்களாகி விடுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை காவல்நிலையத்திற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக்குழு ஒருவர் கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு 8.30மணியளவில் ஓட்டமாவடி நகர் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் இவர்களை கைதுசெய்ததாக வாழைச்சேனை காவல்துறையிர் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி ஜி.எஸ்.வீதியை சேர்ந்த 30 அகவையுடை உமர்லெப்பை அமீர் 32 அகவையுடைய ஜமால்தீன் முகம்மது றிஸ்விஓட்டமாவடி,பிரைந்திரசேனை,பன்சல வீதியை சேர்ந்த 38 அகவையுடைய முகம்மது அணி முகம்மது கணி ஆகியோரே ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இவர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி-01,தோட்டாக்கள்(164),மகசீன்கள்-02,கைக்குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையி்னர் தெரிவித்தனர்.
இவர்கள் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை,கொள்ளை மற்றும் கடத்தல்களுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாங்கள் சகல வகையான மோதல்களுக்கும் யுத்தங்களுக்கும் பழக்கப்பட்டவர்கள். எமது மக்களின் உதவியுடன் அவர்களது அபிலாஷைகளை நிறை˜வற்றும் வரை போராட்டத்தைத் தொடருவோம்என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
அசோசியேட்டட் பிரெஸ் செய்திச் சேவைக்கு மின் அஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் உடனடி இராணுவ தோல்வியொன்றை எதிர்நோக்குகின்றனர் என்று தாம் கருதவில்லையெனவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்களைப் பாதுகாக்கவும் எமது படையணியின் பலத்தை தொடர்ந்து பேணவும் நாங்கள் பல தந்திரோபாய பின் வாங்கல்களை மேற்கொண்டோம்என நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரமும் இடமும் சரியாக அமையும்போது இழந்த நிலங்களை மீட்போம் என அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் புதிய சசமாதானப் பேச்சுக்கள் குறித்த நம்பிக்கையை இழக்க வில்லையென்றும் நடேசன் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எப்போதும் சமாதான பேச்சுக்கு தயாராகவுள்ளோம். அரசே எப்போதும் இராணுவத் தீர்வை வலியுறுத்துகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தங்களது தாயகப் பகுதிகளை இழக்க மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் போராட்டம் தொடருமெனக் கருத்து தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைத்தையும் இழந்தும் அமைதியையும் இழந்து அகதிகளாக்கப்பட்டு அல்லற்படும் எமது மக்களின் வாழ்வில் விடிவுபிறக்க புதுவருடம் நம்பிக்கை தரட்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனிதத்துவத்திற்கு உரிய மதிப்பு இழக்கப்பட்டு மனிதம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட நிலையில், பிறக்கும் இப்புத்தாண்டு மக்கள் வாழ்வில் இருள் அகற்றி ஒளி கொடுக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதுடன், புதிய யுகமொன்றை உருவாக்க நாம் அனைவரும் ஐக்கியப்பட்டு கைகோர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” – இவ்வாறு பிரதமர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!
எமது தேசம் வெற்றியின் நுழைவாயிலில் நிற்கும் இவ்வேளையில் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நாம் எல்லோரும் ஐக்கியப்படுவது எம் எல்லோருடையதும் பொறுப்பும் கடமையுமாகும்
!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திஸநாயகத்தை உடன் விடுவிக்கக் கோரி இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
5 ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புகளுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டத
!!!!!!!!!!!!!!!!!!!
 
வவுனியாவில் இராணுவ வாகனத்தில் தவறுதலாக வெடித்த குண்டில் 11 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது காயமடைந்த படையினர் வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறத
!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் பாதுகாப்பு செயலரும் இராணுவ தளபதியும் போர் முறைப்பற்றிய உரிய அனுபவத்தை கொண்டில்லாதவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அரசாங்கம், தமது அரசியல் நலனுக்கான இராணுவ வீரர்களை பலிகொடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச வானொலி ஒன்றுக்கு தகவல் அளித்துள்ள அவர், இராணுவத்தினரின் இழப்புகளை மறைக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தினார். இதன் ஒரு கட்டமாக அவசரக்கால சட்டநீடிப்பு விவாதத்தின் போது பிரதமமந்திரி படையினரின் இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிடுவதை தவிர்த்து வருவதாகவும் மங்கல சமரவீர சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக இருக்கவில்லை. அதிலுள்ள சில அம்சங்கள் தொடர்பாகவே எதிர்ப்புகளை வெளியிட்டு வந்ததாக மங்கல சமரவீர குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு மத்தியில் அவரின் அரசாங்கம் இனப்பிரச்சினைதீர்வு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்ததாகவும் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
2009 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என இலங்கையின் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
பரந்தனை கைப்பற்றுவதன்; மூலம் தமிழீழ வி;டுததலைப்புலிகளின் முகமாலை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கான விநியோகப்பாதை துண்டிக்கப்படும் என இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பரந்தனை நோக்கி பிரிகேடியர் சாவெந்திரா தலைமையிலான படைப்பிரிவினரே தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவத்தளபதி, சரத்பொன்சேகா, குறிப்பிட்டுள்ளார். பரந்தனை கைப்பற்றியதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கடல்மார்க்கமான விநியோகப்பாதைகளே எஞ்சியுள்ளதாக அவர் தெரிவி;த்துள்ளார்.

பரந்தன் சந்தி, 9 பிரதான பாதை ஆணையிறவு மற்றும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகியவற்றை பொறுத்தவரையில் முக்கிய இடங்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளை நோக்கி ஏழு முனைகளில் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பரந்தனை இராணுவம் முற்று முழுதாக கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரும், சிலிங்கோ குழும நிறுவனத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல மற்றும் அவரது பாரியார் ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை பிரதான நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்தத் தடையுத்தரவை விதித்துள்ளார்.

அத்துடன் சிலிங்கோ குழும நிறுவனத்தின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் 12 பேர் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் 570 கோடி ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனைவிட அதிகமான தொகை வைப்புச் செய்யப்பட்டிருக்கலாம் என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எரிபொருள் மற்றும் எரிவாயு விலையை மிகவும் சொற்பளவில் குறைத்து மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருனாதிலக்கா தெரிவித்துள்ளார். மக்களுக்கு சலுகை வழங்குவதாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏமாற்று வித்தையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை இரண்டு ரூபாவினாலும், டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

உலக சந்தை விலைகளுடன் ஒப்பீடு செய்யும் போது இவை மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளாக கருத முடியாது எனவும், இவை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணமாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலையை குறைந்தபட்சம் 700 ரூபாவினால் குறைத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த வெளிநாட்டு ராஜதந்திரிகளும் தலைவர்களும் முன்னின்று செயற்படவேண்டும் என யாழ்ப்பாண ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு புதுவரூட செய்தியிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிக்ட், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் உடனடியாக யுத்தத்தை நிறுத்த சமாதானத்தை ஏற்படுத்துமாறு கோரியபோதும் இலங்கையில் யுத்தம் தொடர்வதாக ஆயர் தமது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் வன்னிப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆயர் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மக்களை பாரியளவில் பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் புதுவருடத்தில் வெற்றிக்கண்காட்சியை காட்டமுற்படுகின்ற நிலையில், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் 2009 ஆம் ஆண்டில் மக்களின் வாழ்க்கையில், யுத்தபயமின்றி வாழவேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார்
!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணம் வமாராச்சியில் நேற்று இரண்டு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. நேற்று காலையும் மாலையும் இரண்டு இரண்டு சடலங்களும் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வெளிச்சவீட்டுப்பகுதியில் ஒரு சடலமும், சக்கோட்டை திக்கம் பகுதியில் மற்றும் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ளன. இந்தநிலையில் விசாரணைகளை நடத்திய பருத்தித்துறை நீதவான் சடலங்களை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை
!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று புதன்கிழமை 19 லொறிகளில் 76 ஆயிரம் கிடுகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.பரந்தாமன் தெரிவித்தார்.
வவுனியா களஞ்சியத்தில் இருந்து இராணுவத்தினரின் சோதனைக்குப் பின்னர் கிடுகுகள் லொறிகளில் ஏற்றப்பட்டு காலை 9.30 மணியளவில் லொறிகள் புறப்பட்டன.
கரிஸ்தாஸ் நிறுவனம் வழங்கிய 42 ஆயிரம் கிடுகுகள் 10 லொறியில் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரச அதிபரினால் கொள்முதல் செய்யப்பட்ட 34 ஆயிரம் கிடுகுகள் 9 லொறியிலும் அனுப்பிவைக்கப்பட்டது.
வன்னிப் பிரதேசத்தில் மழை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் போதிய இருப்பிடவசதியின்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு விநியோகம் செய்யவே கிடுகுகள் அனுப்பி வைக்கப்படுகின்றது. ஏற்கனவே 90 ஆயிரம் கிடுகுகள் வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கடந்த வாரம் வவுனியா வந்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் மேலும் ஒரு இலட்சம் கிடுகுகளை வன்னிக்கு அனுப்பிவைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபரைக் கேட்டிருந்தார
!!!!!!!!!!!!!!!!!!!
india
தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

மும்பை, ஹைதராபாத், சென்னை, லக்னோ, புனே ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் உட்பட 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், காலை நேரத்தில் ஓரளவு பனி மூட்டம் குறைந்ததால், புதுடெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 35 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ல் பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல் இரு‌ந்து இய‌ங்கு‌ம் ச‌க்‌திகளு‌க்கு‌த் தொட‌ர்பு உ‌ள்ளது எ‌ன்பத‌ற்கு‌‌த் தேவையான ஆதார‌ங்க‌ள் எ‌த்தனை கொடு‌த்தாலு‌ம், அவை அனை‌த்தையு‌ம் அ‌ந்நா‌ட்டு அரசு தொட‌ர்‌ந்து மறு‌த்து வரு‌வத ந‌ல்லத‌ல்ல எ‌ன்று இ‌ந்‌தியா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌ச் ச‌ண்டிக‌ரி‌ல் New;Wசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அயலுறவு இணை அமை‌ச்‌ச‌ர் ஆன‌ந்‌த் ச‌ர்மா, “நா‌‌ம் போதுமான ஆதார‌ங்களை‌க் கொடு‌த்து‌ள்ளோ‌ம். இ‌ந்‌தியா ம‌ட்டும‌ல்ல, அமெ‌ரி‌க்கா, ‌பி‌ரி‌ட்ட‌ன் உ‌ள்‌ளி‌ட்ட அய‌ல்நாடுக‌ளி‌ன் புலனா‌ய்வு அமை‌ப்பு‌க்களு‌ம் ஆதார‌ங்களை‌த் த‌ந்து‌ள்ளன.

ஆனா‌ல் அவ‌ற்றை பா‌கி‌ஸ்தா‌ன் தொட‌ர்‌ந்து ம‌று‌த்து வருவது கவலை‌க்கு‌ரியவிடயமாகு‌ம். ச‌ர்வதேச‌ச் சமூக‌த்‌தி‌ன் ஒழு‌ங்க‌ி‌ற்கு அமைய‌ச் செய‌ல்பட‌ப் பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பது அ‌ந்நா‌ட்டி‌ற்கும‌ட்டும‌ல்ல, இ‌ந்த ம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லத‌ல்லஎ‌ன்று கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!

 njhiyfhl;rp தொடர்களில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய டிவி தொடர் நடிகை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாறுவேடத்தில் போலீசார் சென்றபோது மாசிலாமணி (வயது 35) என்ற விபச்சார புரோக்கர் சிக்கினார். அவர் கைது செய்யப்பட்டார்.

அங்கு அடைத்து வைத்திருந்த ராதிகா, மீனா ஆகிய 2 பெண்களையும் மீட்டு மைலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அங்கு இருந்த கோலங்கள், சூரியவம்சம் ஆகிய njhiyfhl;rpnjhlh;fspy; போலீஸ் அதிகாரி வேடத்திலும், 3 நாட்கள் என்ற புதுமையான njhiyfhl;rpnjhlh;upy;பேயாக வரும் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் வேலூரைச் சேர்ந்த கௌரி (வயது 28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.