‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (31.12.08) செய்திகள்

சிறிலங்கா விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை 8.00 மணியளவில் பரந்தன்முல்லைத்தீவு வீதியில் முருகானந்தா பாடசாலை அருகில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு குடும்பம் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று தருமபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தருமபுரம் வைத்தியசாலை வன்னிப் பகுதியின் முக்கிய பல இடங்களைச் சூழவுள்ளதால் அவ்வைத்தியசாலை வன்னியின் பிரதான மருத்துவமனையாக விளங்குவதாக தருமபுரம் வைத்தியசாலை மேற்பார்வையாளர் டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்கு இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பலியான பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
காயமடைந்தவர்களின் விபரம்
.நிர்மலன் (வயது 15)
எஸ்.ராகுலன் (வயது 21)
செல்வராஜா குலேந்திரன் (வயது 33)
கே. ஜெயசிறி வயது 38
சோமசுந்தரம் சந்திரகுமார் (வயது 43)
அன்னக்கொடி சந்திரமேரி (வயது 45)
வெள்ளைச்சாமி அன்னக்கொடி (வயது 49)
எஸ்.பாலசுந்தரம் (வயது 51)
பழனியப்பன் சுப்பிரமணியம் (வயது 52)
சந்திரபோஸ் (வயது 52)
ரஞசிதமலர் (வயது 58)
சரவணபவானந்தன் (வயது 62)
இவர்கள் அனைவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பெப்ரவரி 7 ஆம் நாளுக்குப் பிடிக்கப் போவதாக சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து மங்கள சமரவீர நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பெப்ரவரி 7 ஆம் நாளுக்குள் பிடித்து விடுவோம் என்று கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதேபோல் மகிந்த அரசு, கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறியது. தற்போது வடமத்திய மாகாண சபை நடைபெறும் தேர்தல் நாளான பெப்ரவரி 7 ஆம் நாளுக்குள் பிரபாகரனையும் பிடிப்போம் என்று கூறுகிறது.
போர் இழப்புக்கள் பற்றி சிங்கள கிராம மக்கள் நன்கு அறிவர். ஏனெனில் அவர்கள்தான் கொல்லப்பட்ட படையினரின் உடலங்களைப் பெற்று வருகின்றனர்.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்று ஊடகத் துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றிரவு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு “படையினரின் வெற்றி ஆண்டு என்று பெயரிட்டுள்ள ஜனாதிபதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்காவிடின் புலிகளை தடை செய்ய நேரிடும் என்றும் தெரிவித்துள்ள நிலையில், புது வருடத்திற்கு இன்னும் ஒரு நாளே இருக்கின்ற நிலையில், விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் ஏதேனும் பேசப்பட்டதா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், அரசாங்கத்தின் நிவாரண பொதி தொடர்பாகவே இன்றைய (நேற்று) விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பிலான கேள்விகளை கேட்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் ஒரு நாள் காத்திருக்கும் படியும் வியாழக்கிழமை பதிலளிப்பேன் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டில் பாரிய நிதி நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. செலான் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஜே. வி. பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முயற்சிக்கவில்லை. தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது. இந்த நிலைமாற வேண்டுமானால் அரசாங்கத்தை ஆட்டம் காண செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடபகுதியில் 2009 ம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தான் எண்ணியுள்ளார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியப் பத்திரிகையாளர் குழுவொன்றை திங்கட்கிழமை இரவு சந்தித்தவேளையே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்திய பிறகு வடபகுதியில் தேர்தலை நடத்த விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்படும் என தனது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி யுத்தமொன்று இடம்பெறுகையில் இவ்வாறான இழப்புக்கள் ஏற்படுவது இயல்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தம்புள்ளப் பகுதியில் சுமார் 80 மில்லியன் ரூபாவினை தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திரட்டியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட மாகாணசபை வேட்பாளர் அசோகா பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் கோஷ்டியினர் மூலம் குறித்த அரசியல்வாதிகள் இந்த சட்ட விரோத நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1994ம் ஆண்டில் சொந்தமாக ஒரு சைக்கிள்கூட இல்லாத அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அசோகா பண்டார தென்னக்கோன் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நியாயமான அரசியலில் ஈடுபடவில்லை எனவும், ஐக்கிய தேசிய கட்சி மஹாத்மா முறையிலான அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!
இம்முறை நடைபெறவுள்ள மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 15 கட்சிகள் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
ஸ்ரீலங்கா சதந்திரக்கட்சி,லங்கா சமஜ மாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக .தே. முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ..தொ.., .தொ.. மற்றும் சிங்களதமிழ் மகளிர் அமைப்பு ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தோ.தொ.தொ. மற்றும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றிணைந்து மத்திய மாகாணத்தில் ஆளும்கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழகம் சென்றிருந்த சிறிலங்காவின் பிரதி அமைச்சர் நிமால் பெரேராவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம், வீடியோ கமராக்களில் பதிவாக வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு நிமால் பெரேரா அளித்த பேட்டி:
தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது எனது வாகனத்தை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்தனர். எனது பிள்ளைகள் வாகனத்தை விட்டு இறங்கினர். அப்போது சண் தொலைக்காட்சி உள்ளிட்ட சில கமரா குழுவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர். நான் வாகனத்தை விட்டு இறங்கிய போது கமராக்களைப் பார்த்து அவர்கள் ஆர்ப்பாட்டங்களை செய்தனர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
தமிழக சிறைகளில் உள்ள சிறிலங்கா மீனவர்களை நேரில் சந்தித்து நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கவே சென்றிருந்தேன் என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
சிறிலங்கா படைத்தரப்பு பேச்சாளர் உதய நாணயக்கர கூறியுள்ளதாவது:
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண்: 911780313 V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டது.
அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால் அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்புக்கு எதிரான பரப்புரைக்காக அது உருவாக்கப்பட்டது.
படையணிகளில் சிறார்களை நாம் சேர்ப்பதில்லை என்றார் அவர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறியமை குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் நாள் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இருவருக்கும் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி அரசாங்கத்தின் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செல்லையா பிரகாசை மருத்துவமனையில் அனுமதித்தது தொடர்பாக நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
செல்லையா பிரகாசின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு புறக்கோட்டை டயஸ் பிளேஸ் பகுதியில் வர்த்தகர் ஒருவரைக் கடத்தி கப்பம் பெற முயற்சித்த சந்தேக நபர்களில் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியதாவது:-
புறக்கோட்டை டயஸ் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான கந்தையா செந்தில்நாதன் (வயது 62 ) என்பவர் நேற்று முன்தினம் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார்.
வர்த்தகரை விடுவிப்பதற்காக அவரது உறவினர்களிடம் கடத்தல்காரர்களால் 25 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டது. அந்தக் கப்பப் பணத்தை வழங்குவதற்காக கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு உறவினர்களுக்குப் பதிலாக சிவில் ஆடைகளில் பொலிஸாரே சென்றிருந்தனர்.
இதன்போது குறித்த பணத்தை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெப்ரவரி மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் இந்த விலைக் குறைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
எரிபொருள் விலை, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை குறைப்பு மூலம் நுகர்வோருக்கு சலுகையும், கைத்தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட வர்த்தகத் துறையினருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 16 பில்லியன் பெறுமதியுடைய சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எரிபொருள் விலை குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு, தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள், கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு சலுகைகள் என பல்வேறு சலுகைத் திட்டங்களை அரசாங்கம் திடீரென அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச மீள்குடியமர்வு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலை, தெல் லிப்பழை யூனியன் கல்லூரி மற்றும் மகா ஜனக் கல்லூரி ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் சென்றுவர அனுமதிப்பதென பலாலியில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பொதுமக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் மீள் குடியமர்வைத் துரிதப்படுத்துமுகமாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ..விக்ன ராஜா தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை நியமித்துள்ளமை தெரிந்ததே.
பிரஸ்தாப உயர்மட்டக்குழு பலாலி படைத் தலைமையகத்தில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கூடியது. இறுதியாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலை, தெல்லிப்பழை யூனியன், மகா ஜனக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு மக்களும் மாணவர்களும் நேரடியாகச் செல்லக்கூடிய வகையில் முன்னரங்குகளை பின்நகர்த்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
இந்த அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக பலாலியில் நேற்றுக் கூடிய உயர்மட்டக்குழு விரிவாக ஆராய்ந்தது.
அந்தப் பிரதேசத்தில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ளது என்றும்
புதுவருடத்துக்கு பின்னர் அந்தப் பணி களை மேற்கொள்ள அந்த நிறுவனம் இணங் கியுள்ளது என்றும்அரச அதிபர் கே.கணேஷ் கூட்டத்தில் தெரிவித்தார்.
கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்துப் பாதை பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையுமான காலப்பகுதியில் விஸா காலாவதியாகி தங்கியிருந்த 316 பேர் குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 287 பேர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இவர்கள் உல்லாசப்பயண விஸா மூலம் நாட்டுக்குள் வந்துவிட்டு பின்னர் விடுதிகளிலும் ஹோட்டல்களிலும், வேலைத்தளங்களிலும் வேலைசெய்வது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசு வழங்கும் முன்கூட்டிய உல்லாசப்பயண விஸாவை பயன்படுத்தி வருகின்ற இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்கியிருப்பதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள் கொடுக்கும் தகவல்கள் மூலம் இவர்களைக்கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரி தெரிவித்தார்
சார்க் நாடுகள் உட்பட்ட எண்பது நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கையில் முன் கூட்டியே உல்லாசப்பயண விஸா வழங்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!
பொலிஸாருக்கு எதிராக இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை 1246 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது மக்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதில் பொலிஸாரின் உதாசீனம் தொடர்பாக 401 முறைப்பாடுகளும், பொலிஸாரின் தாக்குதல்கள் தொடர்பாக 83 முறைப்பாடுகளும், துன்புறுத்தல் தொடர்பாக 31 முறைப்பாடுகளும், பதவி துஷ்பிரயோகம் தொடர்பாக 297 முறைப்பாடுகளும், பக்கச்சார்பாக செயல்பட்டமை தொடர்பாக 161 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக 69 முறைப்பாடுகளும், பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விளக்கமறியலில் வைத்தமை தொடர்பாக 47 முறைப்பாடுகளும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் துன்புறுத்தல் தொடர்பாக 7 முறைப்பாடுகளும், ஏனைய 4 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன்,கைது செய்யப்பட்ட வேளையில் 6 மரணங்களும், இலஞ்ச ஊழல் தொடர்பாக 23 முறைப்பாடுகளும், இவற்றில் அடங்குகின்ற
!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை மண்ணின் புகழ்பூத்த இலக்கியவாதிகள் வரிசையில் முன்னணிக் கவிஞராகத் திகழ்ந்த கவிஞர் செ.நவசோதிராசா நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
!!!!!!!!!!!!!!!!!!!
india
தமிழகக் கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து உறுதியளித்தபடி கொழும்பு பயணம் மேற்கொள்வது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது:
இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாகாணங்களில் தேர்தல் நடைபெறுவதால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண இயலாது. 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியசிறிலங்கா ஒப்பந்தத்தின் படிதான் தீர்வு காண முடியும்.
இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்றார் பிரணாப் முகர்ஜி.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உல்லாச பயணிகள் சிறிலங்கா செல்வதை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டுக்குச் செல்வதாக இந்திய உல்லாச பயண சபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய செய்தி முகாமையகத்துக்கு கருத்து தெரிவித்த இந்திய உல்லாச பயண சபை அதிகாரிகள் இதனைக் கூறியுள்ளனர்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், தாய்வான் உல்லாச பயணிகள் தற்போது சிறிலங்கா செல்வதைத் தவிர்க்கின்றனர். எதுவித அச்சுறுத்தலும் இல்லாதஉட்கட்டமைப்புக்களும் மருத்துவம வசதிகளும் கிடைக்கக் கூடிய தமிழ்நாட்டுக்கே அதிகம் செல்கின்றனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தாவிட்டால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றும், எனவே, அங்கு துணை ராணுவப்படை அனுப்பப்பட வேண்டும் என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றுவருவதாகவும், தொகுதி முழுவதும் வன்முறைகள் அதிகளவில் நடந்துவருவதாகவும் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட தேர்தல் சுமுகமாக நடைபெற்றதாகவும், ஆனால், திருமங்கலம் தொகுதியில் மிக மோசமான சம்பவங்கள் நடைபெற்றுவருவதாகவும் நரேஷ்குப்தா தெரிவித்தார். திருமங்கலம் தொகுதிக்கு துணை ராணுவப்படை அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்போவதாகவும், அதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!

மீனவ‌ர்க‌ளி‌‌ன் பாதுகா‌ப்பு‌க்காக அவ‌ர்களு‌க்குவிரை‌வி‌ல் அடையாள அ‌ட்டை வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்
கட‌லி‌ல்மீ‌ன்பிடி‌க்க‌ச் செ‌‌ல்லு‌ம் இ‌ந்‌தியமீனவ‌ர்க‌ளு‌க்கு பாதுகா‌ப்பாக அடையாள அ‌ட்டையு‌ம், அவ‌ர்‌க‌ள் ப‌ய‌ன்படு‌த்து‌ம் படகுகளு‌க்கு அடையாள எ‌‌ண்ணு‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு, இது தொட‌ர்பாக நாளை (1ஆ‌ம் தே‌தி) நடைபெற உ‌ள்ள கட‌ல்சா‌ர் மா‌நில‌ங்க‌ள் மே‌ம்பா‌ட்டு கழக கூ‌ட்ட‌த்‌தி‌ல்விவா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!1

காசாவில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீதான தனது தாக்குதல்களை நான்காவது நாளாக இஸ்ரேல் அதிகப்படுத்திவரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் ஆரம்ப கட்டத்தில்தான் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மர்ட் கூறியுள்ளார்.
பல வாரங்கள் நீடிக்கக்கூடிய மோதலுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக மற்றொறு அமைச்சர் கூறியுள்ளார்.
பாலத்தீனர்களின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய தாக்குதலை முறியடிக்க, மனித வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஹமாஸ் பயன்படுத்தும் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் துவங்கியதில் இருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது முன்னூற்று அறுபதை எட்டிவிட்டது. இதே காலகட்டத்தில் பாலத்தீன ராக்கெட் தாக்குதல்கள் காரணமாக நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவுடனான எல்லைப் பகுதிகளில் தமது நிலைகளை இஸ்ரேலியப் படையினர் பலப்படுத்திவருகின்றனர்.
ஏராளமான படையினரும் டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களும் அங்கு குவிக்கப்படுவதை தாம் பார்த்ததாக அங்கிருக்கும் பிபிசி நிருபர் ஒருவர் கூறுகிறார்.
தங்களுக்கு உத்திரவு கொடுக்கப்பட்டவுடன் காசாவுக்கு செல்ல தமது படைகள் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
!!!!!!!!!!!!!!
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களாக உகாண்டா கிளர்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களில் நானூறு பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தொண்டு நிறுவனமான கரிடாஸ் கூறியுள்ளது.
இதில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், பலவந்தமாக நெருப்புக்குள் தள்ளப்பட்டதாகவும் கரிடாஸ் அமைப்பின் காங்கோ பிரிவின் தலைவர் டாக்டர் புருனோ மிட்வோ தெரிவித்துள்ளார்.
லார்ட் ரெசிஸ்டன்ஸ் ஆர்மியிடம் இருந்து தப்புவதற்காக இருபதாயிரம் பேர் காடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும், மேலும் ஆறாயிரம் பேர் தேவாலயங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் குறித்து தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை கிளர்சியாளர்கள் மறுத்துள்ளன
!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 159.12sl /68.23 in
1 us $ = 113.05sl /48.46in
1swiss fr = 106.78 sl / 45.78in
1uk pound =163.18sl /69.95in
 

Leave a Reply

Your email address will not be published.