‘லக்பிம’ இதழுக்கு பிரபாகரன் பேட்டி தரவில்லை – நடேசன்

posted in: தமிழீழம் | 0

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம இதழுக்கு பேட்டி எதுவும் தரவில்லை என்றும், அவ்வாறு வெளியாகியுள்ள பேட்டி, உண்மையின் தான் தந்தது என்றும் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் விளக்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான “லக்பிம”வின் ஆங்கில பதிப்பு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அளித்ததாக ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தது.

லக்பிமவுக்கு பிரபாகரன் அளித்த பிரத்யேகப் பேட்டி எனவும் அது தெரிவித்திருந்தது. ஆனால் அதை புலிகள் இயக்கம் மறுத்துள்ளது.

இது குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைவர் பா.நடேசன் கூறுகையில், லக்பிம வார ஏட்டுக்கான இந்தப் பேட்டி என்னால் வழங்கப்பட்ட ஒன்று. அதனை அவர்கள் பிரபாகரன் அவர்களின் பேட்டியாக வெளியிட்டு விட்டார்கள் என நடேசன் மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.