‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (30.12.08) செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் முன்னரண் பகுதிகள் மீதான தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் டாங்கியை பயன்படுத்தியுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலின் போது ரி-55 ரக டாங்கியை பயன்படுத்தியுள்ளனர்.
இரணைமடுவின் வடக்குப் பகுதியில் 57-4 ஆவது பிரிகேட்டின் இரு பற்றலியன்கள் நிலைகொண்டிருந்தன. இவர்களின் பாதுகாப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் வலிந்த தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலின் போது பாதுகாப்பு அரண்களை தகர்ப்பதற்கு டாங்கியை அவர்கள் பயன்படுத்தியதுடன் சூட்டாதரவுகளை வழங்கும் பொருட்டு கடற்புலிகள் இரணைமடு நீரேரியில் தாக்குதல் விசைப்படகுகளையும் பயன்படுத்தியிருந்தனர்.
இதன் போது, விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஏழு படகுகளை பயன்படுத்தியிருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
புறக்கோட்டை டயஸ் பிளேஸ் பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டுள்ளார்.

62 வயதான வர்த்தகரான கந்தையா கைலைநாதன் என்பவரே நேற்று கடத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அவரை விடுவிப்பதற்கு கடத்தல்காரர்கள் 20 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து வர்த்தகரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக குறித்த பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

சாய்ந்தமருது, மாளிக்காடு பிதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கல்முனைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து மின்சார உபகரணங்கள் பலவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் 777 வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்த வீடுகள் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்த வேலைத் திட்டங்கள் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி பூர்த்தியடையவுள்ளதாகத் திட்டப் பொறியியலாளர் மு.. கணேஸ்குமார் தெரிவித்தார்.

மேற்படி வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான பணம் 4 கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!
குவைத் நாட்டில் சட்ட விரோத போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும், இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகக் குவைத் நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த நபர்களைக் கைது செய்ததாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நபரிடம் 10 கிராம் மர்ஜூவானா காணப்பட்டதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் 60 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணிடம் 100 போதைப் பொருள் வில்லைகள் காணப்பட்டதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் 900 வில்லைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் அவலப்படும் மக்களின் நிலைமையை நேரில் அறிய .தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அங்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அங்கு அல்லற்படும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே இன்று தான் அங்கு செல்கிறார் என அவர் நேற்றிரவுதெரிவித்தார்.
தமது விஜயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனது விஜயம் குறித்து அவர் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் :-
இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் பாதுகாவலன் என்ற ரீதியிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைச்சின் பொதுச்செயலாளர் என்ற ரீதியிலுமேயாகும்.
தற்போது வன்னியில் உண்ண உணவோ, உடுக்க ஆடையோ, தங்க இருப்பிடமோ, அருந்த நீரோ இன்றி பல முறை அகதிகளாக்கப்பட்டு, அல்லற்படும் அப்பாவித் தமிழ் மக்களின் உண்மை நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளேன்.
இந்த விஜயம் மிகவும் இக்கட்டானதும் அபாயகரமானதும் என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும் எனது உயிரைப் பணயம் வைத்தாவது அப்பாவித்தமிழ் மக்களுக்காக சேவை செய்வதில் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு துன்புறும் அப்பாவி தமிழ் மக்களின் நிலையைக் கண்டும் காணாதது போல் இருப்பதற்கு இனியும் என்னால் முடியாதுள்ளது.
எனது வன்னி விஜயத்துக்கு தங்களது ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக அதற்குரிய அதிகாரிகளுடன் கதைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.அத்துடன் நான் எனது உயிரைப் பணயம் வைத்து வன்னிக்கு மேற்கொள்ளும் இந்த விஜயத்தில் எவ்வித அரசியல் நோக்கங்களும் இல்லையென்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் எப்போதும் அல்லற்படும் அப்பாவித் தமிழ் மக்களுக்காக சேவை யாற்றுவதில் பின்நிற்பதில்லை என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றேன் vd அனுப்பியுள்ள கடிதத்தில் .தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன njuptpj;Js;shh;
!!!!!!!!!!!!!!!!!!

மட்டக்களப்பில் அண்மையில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறிய சிங்கள வைத்தியர்களில் 350 பேர் மீண்டும் ஓரிரு நாட்களுக்குள் மீண்டும் வடக்கு கிழக்குக்கு கடமைக்குச் செல்லுகின்றனர்.
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தற்போது பிரதான வைத்தியசாலைகளில் மாத்திரமே சிங்கள வைத்தியர்கள் கடமையாற்றுகின்றனர் என்றும் மேலும் பல வைத்தியசாலைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டமையினாலேயே 350 வைத்தியர்களை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திள் பொதுச் செயலாளர் உப்புல் குணசேகர njuptpj;Js;shh;
!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள நடைபாதை வியாபாரிகள் நேற்று பொலிஸாரால் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அப்புறப்படுத்தப்பட்டனர். வத்தளையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு நகரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே நடைபாதை வியாபாரிகள் அப்புறப்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இதனை நிராகரித்து நடைபாதை வியாபாரிகள் பொலிஸார் தங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்ததுடன் கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
,NjNtளை, நடைபாதை வியாபாரிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கும் தமக்கும் தொடர்பில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!
நாளை ஆரம்பமாகவுள்ள ஜி.சீ.. சாதாரணதரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் பகிஸ்கரிக்க தீர்மானித்துள்ளனர். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு இன்றும் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!
வடமத்திய மாகாணமான பொலநறுவை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான வெலிக்கந்தை பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலையில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சு உயர் மட்ட குழு, மற்றும் படை உயர் அதிகாரிகள் வெலிக்கந்தை பகுதியில் தற்போதைய சூழ்நிலை தொடர்பாகவும் மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களில் இடம்பெற்று வரும் போர்;
நடவடிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெறும் குண்டுத்தாக்குதல் அனைத்தும் கிழக்கு மாகாணத்தில் உள்ள விடுதலை புலிகளே இயக்கிவருவதாக அண்மையில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட தகவலையடுத்து இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டள்ளது.
இதன்போது எதிர்காலத்தில் கிழக்கில் இடம்பெற வேண்டிய யுத்த நடவடிக்கை தொடர்பாக சிறிலங்காவின் படைத்தளபதி சரத் பொன்சேகாவுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு பகுதியிலிருந்து கொழும்புக்கு வரும் பெரும்பான்மை இனத்தவர் தவிர அனைத்து பயணிகளும் மன்னம்பிட்டி சோதனைச் சாவடியில் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கிழக்கில் யுத்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, படைத்தளபதி சரத் பொன்சேகா, படைத்தரப்பின் உயர் அதிகாரி டொனால் பெரேரா ஆகியோர் உட்பட பல அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்களின் விஜயத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய மத்திய அரசாங்கம் தங்களுக்கு ஆதரவளிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டுமென விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியிருக்கிறது.
பிரபாகரனின் இந்த கருத்துக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பெதனையும் வெளியிடாவிட்டால் அது உண்மையானதென்றே கருதப்படும் என்று அந்தக் கட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது.
பத்தரமுல்லையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி. இந்த கருத்துகளை வெளியிட்டார்.
இந்திய மத்திய அரசாங்கம் தங்களுக்கு ஆதரவளிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக மின்னஞ்சல் மூலமான நேர்காணலொன்றின் ஊடாக வாராந்த ஆங்கில பத்திரிகையொன்றுக்கு பிரபாகரன் கருத்து வெளியிட்டுள்ளார். இதில் உண்மை இருக்கிறதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், பிரபாகரனின் இந்த கருத்து குறித்து உடனடி விளக்கமொன்றை வழங்க வேண்டும். அவ்வாறாக எதுவும் இல்லையென மறுப்புத் தெரிவிக்க வேண்டும். அப்படியெதுவும் கூறாவிட்டால் பிரபாகரனின் கருத்து உண்மையென்றே அர்த்தப்படும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு அந்நாட்டின் மத்திய அரசாங்கமே ஆதரவளிக்க முடியுமா??? என்று விமல் வீரவன்ச இதன்போது கேள்வி எழுப்பினார்.
விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கான அதிகப்பட்ச அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்குவோமென்றும் விமல் வீரவன்ச இதன்போது கூறினார்.
“புலிகளை தடை செய்யாமலிருப்பதால் தான் பிரபாகரன் ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டியை பிரசுரிக்க வேண்டிய எந்த தேவையும் கிடையாது. அடித்து முடிக்க வேண்டிய தருணமிது. எனவே, புலிகளை தடைசெய்ய நாம் அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தத்தை வழங்குவோம்’ என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
2008 ஜனவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரையிலான 9 மாத காலத்தினுள், சீ4 மற்றும் டி.என்.ரி. ரகத்தைச் சேர்ந்த அதிசக்திவாய்ந்த 4200 கிலோகிராம் நிறைகொண்ட வெடி பொருட்களை நாடெங்கிலுமிருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தமது உயிர்களைத் துச்சமாக மதித்து இத்தகைய தீரச் செயல்களை புரியும் பொலிஸாரைப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன்’ என்று பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுதேச நாட்டியமும் பத்திரிகையும் கல்லடி வேலனும் (1902 1947)’ என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட வரலாற்றுத்துறை விரிவுரையாளர் சோமேசசுந்தரி நினைவுப்பேருரையை ஆற்றியிருந்தார். சுதேச நாட்டியம்பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 45 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தமையானது யாழ்ப்பாண பத்திரிகைத்துறை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும் . அப்படியான சாதனைக்குரிய பத்திரிகையாளராகவும் வெளியீட்டாளராகவும் கல்லடிவேலன் (கந்தப்பிள்ளை வேலுப்பிள்ளை) இருந்துள்ளார் என்று அறியும்போது எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. எனினும் யாழ்ப்பாணத்தின் பத்திரிகை பற்றி ஆராய்ந்தவர்கள்சுதேச நாட்டியம்பத்திரிகையில் வந்த விடயங்களை கவனிக்கத் தவறியுள்ளனர். அப்பத்திரிகை பற்றியோ கல்லடி வேலன் பற்றியோ ஆய்வுக்கட்டுரை ஏதேனும் இதுவரை வெளியிடப்பட்டிருப்பதாக அறிய முடியவில்லைvd. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!
india
இலங்கை இனநெருக்கடி தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கடைப்பிடித்துவரும் கடுமையான நிலைப்பாட்டினால் இந்த விவகாரத்தை கையாள்வதில் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பிரதான சகாவான தி.மு.. துன்பகரமான முறையில் தோல்வி கண்டுள்ளதாக கடுமையாக விமர்சித்திருக்கும் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதி மன்மோகன் சிங்கிடம் இரந்து மன்றாடிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழர்கள் ஒவ்வொரு வினாடியும் கொல்லப்படுகிறார்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சண்டையை நிறுத்தும்படி இலங்கை அரசை, இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிஜேபிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. .

பெல்காம் மாவட்டம் அராபவி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாநில அமைச்சர் பாலசந்திர ஜர்கிஹோலி 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு கடந்த 27ம் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருமங்கலம் தொகுதியில் உள்ள 234 கிராமங்களில், 33 கிராமங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்று சட்டம்ஒழுங்கு கூடுதல் காவ‌ல்துறை இய‌க்குன‌ர் (.டி.ஜி.பி.) ராஜேந்திரன் தெரிவித்து‌ள்ளா‌ர்.கடந்த 2 நாட்களாக நடந்த பிரச்சனைகளில் தி.மு..வினர் மீது 9 வழக்குகளும், .தி.மு..வினர் மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொகுதி முழுவதும் 3 ஆயிரம் காவல‌ர்க‌ள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்படுவதால் உள்நாட்டு முதலீடு கடுமையாக பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி எச்சரித்தார்.

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 26 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இரு‌ந்து 49 ‌விழு‌க்காடாக உயர்த்துவதற்கான ச‌ட்ட வரைவு நாடாளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு, நாடாளுமன்ற நிலைக் குழு‌வி‌ன் ஒப்புத‌லி‌ற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பே‌சிய யச்சூரி, “இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களே ரூ. 6.5 லட்சம் கோடி நிதியைத் திரட்டும் திறன் கொண்டவை. இந்த நிதியின் மூலம் கட்டுமான திட்டங்களுக்கு நிதி திரட்ட முடியும். நிதி ஆதாரத்தைத் திரட்ட இது சிறந்த வழியும் கூட.

ஆனால், அய‌ல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தினால், அவை பிற இடங்களிலிருந்து நிதியைக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்யும். பின்னர் அ‌ந்‌நிறுவன‌ங்க‌ள் செயற்கையான விலையேற்றத்தை இ‌ங்கு உருவாக்கிவிட்டு, முதலீட்டுத் தொகையை திரும்ப எடுத்துச் செல்லும். இதனால் முதலீடு செய்த உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

இதனா‌ல்தா‌ன் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே இ‌ந்த‌ச் ச‌ட்ட வரைவு 2004 முத‌ல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, நொடிந்து போயுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காகவே இ‌ந்த‌ச் ச‌ட்ட வரைவை மத்திய அரசுநிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

இதேநேர‌ம், உற்பத்தி சார்ந்த துறைகளில் அன்னிய நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபடுவதை வரவேற்‌கிறோம். ஏனெனில் அதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாகும்எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொச்சி துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த .என்.எஸ்.வீராத் என்னும் விமானம் தாங்கி கப்பலை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பல் .என்.எஸ்.வீராத், கொச்சி துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இருந்து ஏவுகணைகளை செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த கப்பல் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்தியாவிற்கு அமெரிக்க உளவுத்துறை ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கப்பல் மீது மோதச் செய்து, அதனைத் தகர்க்க லஷ்கர்தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொச்சி துறைமுகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வீராத் கப்பலைச் சுற்றி ஏராளமான ஆயுதம் தாங்கிய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!
world
பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து நடத்திவரும் குண்டு வீச்சில் பலியானவர்களின் எண்ணிக்கை 345 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 5 பேர் மீதும் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் ஏற்பட்டிருந்த போர் நிறுத்தத்தை, ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த வாரம் முறித்துக் கொண்டனர். இதனையடுத்து, இஸ்ரேல் மீது அவர்கள் ராக்கெட் தாக்குதலும் நடத்திவந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், கடந்த 4 தினங்களாக காசா பகுதியில் ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் 345 பேர் பலியாகினர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்றைய குண்டு வீச்சு சம்பவத்தில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த பகுதிகளில் மீட்பு பணிக்காக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் காஸா பகுதியில் மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என .நா பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

காஸாவில் நிகழ்ந்து வரும் கோரச் சம்பவங்களுக்கு ஆழந்த வருத்தத்தை தெரிவித்த 15 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட .நா பாதுகாப்பு சபை, தேவையான உணவு, மருத்துவ உதவியை காஸா பகுதிக்கு அளித்திட எல்லைகளை இரு நாடுளும் திறக்க வேண்டும் எனக் வலியுறுத்தியது.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவு உயிர்ச் சேதத்தை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரபு நாடுகளின் சார்பில், .நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என லிபியா விடுத்த வேண்டுகோளை ஏற்று .நா பாதுகாப்பு சபைக் கூட்டப்பட்டது.
!!!!!!!!
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து சிரியா இராக் ஜோர்டான் லெபனான் உள்ளிட்ட பல நாடுகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி ஊர்வலங்களை நடத்தியுள்ளனர்.
இரானியத் தலைநகர் தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்க வேண்டும் என்று தெஹ்ரான் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக மூன்றாவது பாலஸ்தீன எழுச்சிஇண்திஃபாதாஉருவாக வேண்டும் என பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கோரியுள்ளார்.
உடனடியாக போர்நிறுத்தம் வரவேண்டுமென அங்காராவில் துருக்கிய மற்றும் எகிப்திய வெளியுறவு அமைச்சர்கள் மீண்டும் கோரியுள்ளனர்.
காஸா நிலைமையை ஆபத்தானது என்றும் இது மத்திய கிழக்கின் ஒரு இருண்ட காலம் என்றும் வருணித்துள்ளார் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வங்க தேச தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 221 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கியது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 1552 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும், முன்னாள் பிரதமர்களான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் மற்றும் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 300 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 221 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி மீண்டும் வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது
:!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தணிந்து விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்க ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

மும்பை கலவரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகள் நேற்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ஐஎஸ்ஐ செய்தித் தொடர்புத்துறை தலைவர் அத்தர் அப்பார், இருநாடுகளுக்கும் இடையே நிலவிவந்த போர் பதற்றம் தற்போது மறைந்துவிட்டதாகக் கூறினார். தெற்காசிய பதற்றம் குறித்து ரஷ்ய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். இருநாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த தாங்கள் முழுமுயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sports
ஆஸ்திரேலியாதென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணியை 16 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி அடையச் செய்து தொடரைக் கைப்பற்றி உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 394 ரன்கள்எடுத்தது
தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 459 ரன்கள் குவித்து 65 ரன்கள் முன்னிலை வகித்தது
ஆஸ்திரேலியாதனது 2வது இன்னிங்சில்247 எடுத்தது.இதனையடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா 1 tpf;Nfl; ,og;gpw;f;F183 Xl;lq;fid vLj;jJ
மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்த கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றி உள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தோல்வி அடையச் செய்து தென்ஆப்பிரிக்க அணி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் 3வது போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 159.52 sl / 67.98in
1us $ = 113.85 sl / 48.52in
1 swiss fr =107.81sl / 45.94in
i uk pound = 164.61sl /70.21in

Leave a Reply

Your email address will not be published.