போதை பொருட்களுடன் இலங்கை பெண் குவைத்தில் கைது

குவைத் நாட்டில் சட்ட விரோத போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும், இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகக் குவைத் நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த நபர்களைக் கைது செய்ததாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நபரிடம் 10 கிராம் மர்ஜூவானா காணப்பட்டதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் 60 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணிடம் 100 போதைப் பொருள் வில்லைகள் காணப்பட்டதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் 900 வில்லைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.