பாதுகாப்பு செயலாளர் வெலிக்கந்த விஜயம்

வெலிக்கந்த பிரதேசத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு தரப்பின் முக்கிய அதிகாரியான ஏயார் சீப் மாஸ்டல் டொனால்ட் பெரேரா ஆகியோர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் நேற்று காலை வெலிக்கந்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்கால யுத்த நடவடிக்கைகள் குறித்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பென்சேகாவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெலிக்கந்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.