புறக்கோட்டையில் வயோதிபர் கடத்தல்

புறக்கோட்டை டயஸ் பிளேஸ் பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டுள்ளார்.

62 வயதான வர்த்தகரான கந்தையா கைலைநாதன் என்பவரே நேற்று கடத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அவரை விடுவிப்பதற்கு கடத்தல்காரர்கள் 20 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து வர்த்தகரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.