‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (29.12.08) செய்திகள்

முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்களும் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசனினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் படையினரின் 17 உடலங்களும் கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவு நோக்கி கடந்த சனிக்கிழமை (27.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன் படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிககளால் கைப்பற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!
வடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் :
சிறிலங்கா படைத்தரப்பில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை மகிந்த அரசு வழங்கவில்லை. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கின்றன.
எமது ஆட்சிக்காலத்தில் 12 வானூர்திகள் இருந்தன. ஆனால் இவற்றில் 2 வானூர்திகளே இப்போது இயக்கப்படுகின்றன.
மாரி கால சமரில் கடல் வழியாக வழங்கல் என்பது சிக்கலானது. ஆகையால் படையினருக்கு வான்வழி வழங்கலே தேவை. ஆனால் வானூர்திகள் அப்படியான நடவடிக்கைகளில் இறக்கப்படவில்லை என்றார் அவர
!!!!!!!!!!!!!!
பெற்றோல் விலை குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.வி.பி. இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பிரசார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!
பெற்றோல் விலை குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து .தே.கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கின்றது. ஜனவரி மாதம் ஏழாம் திகதி பல அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:-
பெற்றோலின் விலையைக் குறைக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதன் மூலம் அரசு இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது.
இந்த உரிமைகளை வென்றெடுக்க நாம் அனைவரும் போராட வேண்டும். அதற்காகவே நாம் ஜனவரி மாதம் 7ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆரப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
பல அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இதில் கலந்துகொள்ளும். இதில் கலந்துகொள்ளுமாறு நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் நாடு முழுவதும் எமது போராட்டத்தை விஸ்தரிப்போம்.என்றார்.எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
!!!!!!!!
திருகோணமலை தம்பலகாமம் முத்துநகர் பகுதியில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்தப்பட்ட முஸ்ஸிம் குடும்பஸ்த்தர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 24ம் திகதி நல்லிரவு வேளையில் கடத்திச் செல்லப்பட்ட குஞ்சு லெப்பை என்றழைக்கப்படும் 45 அகவையுடைய பக்கீர் தம்பி கயாத்து முகமத் நேற்று முந்தினம் ஆயுததார்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் பாலமொன்றுக்கு அருகில் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாம காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மா..சிவாஜிலிங்கம், பாகிஸ்தானில் இருந்து மாதத்துக்கு மூன்று முறை கப்பலில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இலங்கைக்கு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
நாற்பத்து நான்கு இலட்சம் கிலோ குண்டுகளை இலங்கை அரசு வீசியுள்ளதாக ராஜபக்ச அரசின் அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். அப்படியானால் ஜப்பானில் குரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகம்.
ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகள் 6 முறைதான் குண்டுகள் வீசியிருக்கின்றனர். அந்த குண்டுகள் ஒவ்வொன்றின் எடை வெறும் 50 கிலோதான் என்றும், ஆனால் நாங்கள் 6 ஆயிரம் கிலோ எடைகொண்ட குண்டுகளை வீசியிருக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்.

இலங்கைக்கு தேவையான இத்தனை வெடிகுண்டுகளும், வெடிமருந்துகளும் பாகிஸ்தானில் இருந்துதான் வருகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றது’’ என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!
மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அரசாங்கம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் என்ற துருப்பு சீட்டை வைத்துக் கொண்டே அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி. விஜேதுங்க, சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஜனாதிபதிகள் யுத்தத்தை முன்னெடுத்த போதிலும் எவரும் அதனை விற்று பிழைப்பு நடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தினால் தீர்வு காண முடியாது எனவும், ஜனநாயக முறைமையிலான அரசியல் தீர்வுத் திட்டமே முன்வைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பொன்றில் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும், மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஏப்ரல் மாதம் அளவில் விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கம் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!
கட்சி பேதமின்றி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கண்டி மல்வத்த பீட மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட குழுவினர் ஆசி பெற்றுக் கொள்ளும் நோக்கில் மல்வத்த பீட மாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் ஆகியோரை சந்தித்தபோது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை முரண்பாடுகளை களைந்து அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்க்கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனை தமது கட்சி வன்மையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தேசப்பற்றாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் உண்மையில் தேசப்பற்றுடையவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!
சிறீலங்கா அரசின் சிங்கள விமானப் படையினர் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளனர். சனிக்கிழமை நண்பகல் வேளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் 4 அகவையுடைய செல்வராஜா செல்வரஞ்சன், 10 அகவையுடைய அமிர்தாசன் விதுசாலினி, 18 அகவையுடைய சத்தியசீலன் சத்திராஜா என புதுக்குடியிருப்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொது மக்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வான் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமன்றி சம்பிரதாயத்திற்குத் தானும் கண்டிக்காமல் மெளனம் காப்பதையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆட்சேபனையை சர்வதேச சமூகத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதுடன், சர்வதேச சமூகம் தனது மெளனத்தை கலைத்துவிட்டு இனப்படு கொலைக்கு முகம் கொடுத்து வரும் தமிழ் மக்களை காக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
!!!!!!!!!!!!!!
india
இந்திய பேரரசு தாமதிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், ஒரு தமிழனின் பிணம் இலங்கையில் வீழ்ந்து கொண்டிருக்கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ள பா... ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும் எ‌ன்று‌ம் வெறும் பேச்சளவில் மட்டுமின்றி சண்டையை நிறுத்தும்படி எச்சரித்து, அதனை செயலில் சாதித்து வரவேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் மட்டும் 700 வான்படைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், 10 போர்ப்படை விமானங்கள் பறந்துபோய்த் தாக்கியிருக்கின்றன. ஒவ்வொரு போர் விமானமும் 4,5 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில், சில குண்டுகள் ஒரு டன் அளவுக்கும், வேறு சில குண்டுகள் 500 கிலோ அளவுக்கும் எடை உள்ளவை. இப்படி இலங்கைப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஓர் நேர்காணலில் விவரித்திருக்கிறார்.

இரண்டு பகை நாடுகளுக்கு இடையே நடைபெறுகிற சண்டையில் கூட பயன்படுத்த கூடாது என்று சர்வதேச சமூகம் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை இலங்கைப் போர்ப்படை விமானங்கள் வீசி, மனித இனத்துக்கு எதிரான பெரும் குற்றத்தை இழைத்திருக்கின்றன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் இலங்கை அரசு, உலகம் இதுவரையில் கண்டிராத, மிகப் பெரிய இன அழிப்பு பயங்கரவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்தியாவை நோக்கி உரிமையோடு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி சண்டையை நிறுத்தும்படி எச்சரித்து, அதனை செயலில் சாதித்து வரவேண்டும். இதுவே இங்குள்ள ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஏக்கமாகும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!
இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 123 ஆவது பிறந்தநாள் விழா நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பிரச்சினை தொடர்பில் விரைவில் தீர்வு காண மத்திய அரசு உடனடி தலையீடு மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு பூரண மதிப்பளித்து மத்திய அரசு விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தார்.
வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயத்திற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும். தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழக தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என தங்கபாலு மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!

ஜம்முகாஷ்மீர் மாநில முதலமைச்சராக உமர் அப்துல்லாவின் பெயரை அவரது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான பாரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து யார் முதலமைச்சர் என்பதில் நேற்றிரவு ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. .

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சிக்கு 21 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பிஜேபிக்கு 11 இடங்களும், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைத்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!
திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பே‌ச்சு‌க்கு தி.மு. தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், விடுதலை சிறுத்தைகள் கடந்த 26ஆம் தேதி நடத்திய மாநாட்டில், சுப.வீரபாண்டியன் பேசும்போது, ‘சத்திய மூர்த்தி பவனை விடுதலைச் சிறுத்தைகள் அடித்து நொறுக்கியதாக தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே திருமாவளவன் உத்தரவிட்டு இருந்தால், சத்திய மூர்த்தி பவன் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்என்று பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எந்த ஒரு பேச்சாளரும் தேர்தல் ஆணைய‌த்தா‌ல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அலுவலக கட்டடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்வதோ, தகர்ப்போம் என்று பேசுவதோ, ஒரு ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஆனால், சுப.வீரபாண்டியன் பேச்சு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. எனவே, திமுக சார்பில் சுப.வீரபாண்டியனுடைய பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறே‌ன் எ‌ன்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்
!!!!!!!!!!
world
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தேர்தல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தலைநகர் டாக்காவில் ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களும், 6 லட்சம் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் மொத்தமுள்ள 300 இடங்களுக்கு இன்று நடக்கும் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட ஆயிரத்து 552 பேர் களத்தில் உள்ளனர்.

அந்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8 கோடி. இதில் 33 விழுக்காடு வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். அதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 35 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தேர்தலில் பதிவாக்கும் வாக்குகள் வரும் 30ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2 ஆண்டு காலமாக அந்நாட்டில் நடந்து வந்த இடைக்கால ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டும் மலர உள்ளது.

அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே இத்தேர்தலில் நேரடிப் போட்டி நடைபெறுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் இன்று காலை லேசான பூகம்பம் தாக்கியது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். .

காலை 8.37 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 5.7 என்ற அளவில் பதிவானதாக பாகிஸ்தான் புவியியல் ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த பூகம்பம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், பெஷாவர், முஸாபராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூகம்பத்தை தொடர்ந்து பல்வேறு நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது

!!!!!!!!!!!!!!

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா நகரின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் இன்று 3-வது நாளாக குண்டுமழை பொழிந்து நடத்திய தாக்குதலில் 307 பேர் கொல்லப்பட்டனர். .

இதனிடையே காஸா நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது குறித்தும் இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் காஸா நகரம் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

3வது நாளான திங்கள் கிழமை வரை 307 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக பயங்கரவாத அச்சமின்றி வாழும் வரையில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் என்று அந்நாட்டு பிரதமர் இகுத் ஓல்மார்ட்டின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகிவ் கூறியுள்ளார்.

இதனிடையே காஸா நகருக்குள் நுழைய வசதியாக இஸ்ரேலிய டாங்குகள் அந்நகரின் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.!!!!!!!!!!!!!!!!!
sport

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் அபார பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 247 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. .

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 394 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 459 ரன்கள் குவித்து 65 ரன்கள் முன்னிலை வகித்தது. அந்த அணியின் டுமினி அபாரமாக ஆடி 166 ரன்களை குவித்து சரிவிலிருந்த தென்னாப்பிரிக்காவை மீட்டு முன்னிலை பெற வைத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா இன்று தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எனும் நிலையில் தொடங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஹைடன் 23 ரன்களிலும், கிளார்க் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். . .
ஆஸ்திரேலியா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் . இறுதியில் ஆஸ்திரேலியா 247 ரன்கis vLj;jpUe;jJ..

இதனையடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 414 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.jw;NghJ 6 over y; tpf;Nfl; ,og;gppy;yhJ 30 Xl;lq;fis தென்னாப்பிரிக்கா ngw;Ws;sJ.

!!!!!!!!!!!!

1 euro =160.03sl / 69.15 in
1us $ =112.55sl / 48.61in
1 swiss fr =106.58sl. / 46.02in
1 uk pound = 165.94sl /71.71in

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.