‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (27.12.08) செய்திகள்

 கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடற்தொழிலுக்குச் செல்ல அடிக்கடி அனுமதி மறுக்கப்பட்டுவ்ருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பள்ளிமுனை, கோந்தைப்பிடி, பனங்கட்டுகோட்டு கௌந்தர், சிறுத்தோப்பு, வங்காலைப்பாடு, ஆகிய கடற்பகுதியூடாக தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மீன்வக்குடும்பங்கள் பாதிப்படைந்திருப்பதாக தெரியவருகிறது. அதேவேளை மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடற்படையினர் இரவு நேர தொழிலுக்கு அனுமத்திருபப்தாகவும் மாலை 6 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச்சென்றால் மறுநாள் காலை 06 மணிக்கு பின்னரே கரைத்திரும்பவேண்டும் என மீனவர்களுக்கு கடற்படையினர் கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

வன்னிப்பகுதியில் தற்போது இடம் பெற்றுவரும் மோதல் சம்பவங்களைத்தொடர்தே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதக அறிய தெரிவிக்கபடுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட்சிகள் ஒத்துழைக்காமையினால் சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கையினை வெளியிடுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: .

2008ஆம் ஆண்டில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்பு சர்வக்கட்சிக் குழுக்கூட்டங்களில் காணப்பட்டபோதிலும், அண்மைக் காலமாக ஏற்பட்ட அரசியல் பிணக்குகளால் பிரதான கட்சிகள் சர்வக் கட்சிக் குழுக்கூட்டங்களைப் பகிஷ்கரிப்பு செய்தமை சர்வக்கட்சிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய சர்வகட்சிக் குழுக்கூட்டங்களை பகிஷ்கரித்தமையால் மிக இக்கட்டான சூழ்நிலை தோன்றியது. ஏனைய அரசியல் கட்சிகள் சிலவும் பல்வேறு காரணங்கள் காட்டி சர்வக்கட்சிக் குழுக்கூட்டங்களை புறக்கணித்து விட்டன..

எனவே தற்போது சர்வக்கட்சிக் குழுவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையிலிருந்து மீளவும், சர்வகட்சிக் குழுவின் ஆண்டறிக்கையினை தயாரிப்பது தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சர்வகட்சிக் குழு பிரதிநிதியான கே. என். சொக்ஷியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இது குறித்து தற்போது எவ்விதமான கருத்தும் தெரிவிக்க முடியாதுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் குடாநாட்டு மக்களே! உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். என விளித்து எல்லாளன் படை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தனித் தமிழீழத்துக்கான போராட்டமானது தனது இறுதியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
இப் போராட்டத்திற்காக இரண்டு தசாப்த காலங்களாக போராளிகளும், மக்களும் உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில், போராட்டத்தின் நியாயமான கோட்பாட்டினால், போராட்டமானது இன்று உலகளாவிய ரீதியில் ஒருபரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

அதனைப் பொறுக்காத மகிந்த அரசு தனது தோல்வியையும் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசத்திடம் இருந்து மறைப்பதற்காக அதனுடன் ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் துரோகிகள் மூலமும் உங்களுக்கு சில அற்பசலுகைகளை தந்து வஞ்சக எண்ணத்துடன் போலியாக உறவாடி களியாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என சில வேலைகளை உங்கள் மூலம் செய்து போராட்டத்தை தவறாக சித்தரிக்க முயல்கின்றது. இதற்கு மக்களில் சிலரும் உடந்தையாக இருப்பது வேதனை அளிக்கின்றது.

யாழ் மக்களே!

எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், இவ்வாறான செயற்பாடுகள் தேவையா? சிந்தித்து செயற்படுங்கள். எனவே நீங்கள் அற்ப சலுகைகளுக்காக இவர்களுடன் தொடர்பை பேணும் போது உங்களை அறியாமலே நீங்களும் தனித் தமிழீழத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உடந்தையாகும் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பம் ஏற்படலாம்.

எனவே இவர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். தனித் தமிழீழத்திற்கான காலம் எம் கண்முன்னால் கனிந்து வந்துள்ளது அதனை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வென்றெடுப்போம்.

எல்லாளன் படை
யாழ் மாவட்டம்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் தமிழ் மக்கள் அவலப்படும் நிலையானது சோமாலிய மக்களின் நிலையைப் போன்றது என்று உலக உணவுத் திட்ட நிறுவன அதிகாரி கூறியுள்ளதாகபொஸ்ரன் குளோப்ஏடு தெரிவித்துள்ளது
ஆசியாவின் மிக நீண்ட உள்நாட்டு போர் வன்முறையின் உச்சத்தை அடைந்துள்ளது.
அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சிறிலங்காவின் சிங்கள பெரும்பான்மை அரசிற்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வடபகுதியில் விடுதலைப் புலிகளை முற்றுகைப்படுத்தி சிறிலங்கா படையினர் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போர் நிறுத்தம், நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான பேச்சுக்களும் 2006 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட பின்னர் இந்த வருடத்தின் தொடக்கத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கப்போவதாக சூளுரைத்திருந்தனர்.
புதிய கெரில்லா போர்முறையிலான போரை தவிர வேறு ஏதாவது நன்மையை மகிந்தவின் சகோதரரின் படை நடவடிக்கை ஏற்படுத்தும் என்பதற்கு சிறிய அளவிலான சாத்தியங்களே உள்ளன.
அதே சமயம் 200,000 மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். பருவ மழையும் அவர்களை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
அன்றாட வாழ்வுக்கு அல்லற்படும் இந்த மக்கள் உதவி நிறுவனங்களின் உதவிகளில் தங்கியுள்ளனர். உதவி நிறுவனங்கள் இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் இயங்கி வருகின்றன.
இரு தரப்பும் பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. சிறிலங்கா இராணுவம் கிராமங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது வான் குண்டு வீச்சுக்களையும், எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்டு வருகின்றது.
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை சோமாலியாவில் உள்ள மக்களின் அடிப்படை நிலையை ஒத்தது என பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் இடம்பெயர்ந்த மக்களின் நகர்வுகளை தடுப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசை அமைதி வழிக்கு கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு நியாயமான சுயாட்சியை அவர்களின் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு போர் நிறுத்தப்படுவதே ஒரே வழி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா படையில் புதிதாக 700 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1,300 பெண்களை இணைத்துக்கொள்ளும் திட்டமிடலுடன் கடந்த நவம்பர் 24 ஆம் நாள் இச்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
ஒரு மாத காலமாத்தில் 700 பெண்கள் இணைந்துள்ளனர். சேர்ப்புக்கான இறுதி நாள் டிசம்பர் 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோருக்கு எதிராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம். எஸ். சாள்ஸ் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் தனக்கு தொலைபேசி மூலம் கிஷோர் எம். பி் மிரட்டல் விடுத்ததுடன் தன்னை மிக மோசமாகவும் அவமரியாதை செய்யும் விதத்தில் தரக்குறைவாகவும் பேசியதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்கும் அவரது தகுதிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசிய தகாத வார்த்தைகளும் விடுத்த மிரட்டலும் தனக்குப் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து தான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியா மாவட்ட உயரதிகாரி ஒருவரினால் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென்றும் தனது மக்கள் சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறு சேறுபூச முற்படுகின்றனர் என்றும் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட வைத்தியசாலை பிரதம வைத்திய அதிகாரியை ஏனைய வைத்தியர்கள் சிலர் தடுத்த சம்பவம் தொடர்பாக எனக்கு முறையிடப்பட்டது. இதனையடுத்து அங்கு நேரில் சென்று சமரச நிலையை உருவாக்க முற்பட்டபோதும் சில வைத்தியர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசமடைந்ததையடுத்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகராறில் ஈடுபட்ட இரு வைத்தியரையும் கெளரவமாக அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுவிட்டு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தையே வவுனியா மாவட்ட உயரதிகாரியொருவர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி என்மீது குற்றஞ்சுமத்துகின்றார்.
ஒரு பக்கச்சார்பாக செயற்படுவதற்கு நான் ஒரு உயர் அரச அதிகாரியல்ல. இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதி். எனவே இங்கு நடைபெறும் எந்தவொரு அநியாயத்தையும் தட்டிக்கேட்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
விமானப்படையினரின் மிக் – 27 ரக ஹெலிகள் முல்லைத்தீவு, விசுவமடு மற்றும் மயில் வாகனபுரம் மக்கள்குடியிருப்புகள் மீது நேற்று மாலை 5.30 மணிக்கும் 5.50 மணிக்கும் செறிவான் குண்டுத் தாக்குதல்களை நடத்தின என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலின்போது 22 குண்டுகள் வீசப்பட்டன என்றும் கூறப்பட்டது.
இடம்பெயர்ந்த நிலையில் குடியிருப்புக்களை தற்காலிகமாக அமைத்துத் தங்கியுள்ள மக்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது என்றும், இதன்போது பொதுமக்களின் நான்கு வீடுகள் சேதமாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், கிளிநொச்சி, பரந்தன் வீதியிலும் நேற்றுக்காலை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.
இதன்போது, 10 மாடுகள் உயிரிழந்தன என்று கூறப்பட்டது. எனினும், பொதுமக்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, தரைப்படையினர் கடுமையான ஷெல் தாக்குதல்களை ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பிரதேசங்களை நோக்கி நடத்தியுள்ளனர் எனவும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உயிர்ப் பாதுகாப்பிற்காக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் வாழ்விடங்களில் ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதால் அங்கு ஏற்கனவே வாழும் மக்களும் இடம்பெயர்ந்து வாழும் மக்களும் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் படைத்தரப்புத் தகவல்கள் வெளிவரவில்ல
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெற்றோல் விலையைக் குறைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக .தே.. தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய .தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவே இதனைத் தெரிவித்தார்.

பெற்றோல் விலையைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையை நாட்டுக்கு எதிரான சர்வதேச சதித்திட்டம் என்று அரசு வர்ணித்துள்ளது.
மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்துவதற்காக எடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை எப்படி தேசத்துரோகம் என்று சொல்லமுடியும்?
அப்படி என்றால் பெற்றோல் விலையைக் குறைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் தேசத்துரோகியா? இந்தச் சிறிய விடயத்திற்காக அரசு மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கூக்குரல் இடுகிறது. பெற்றோல் விலையையே குறைக்க முடியாத இந்த அரசால் எப்படி நாட்டின் வாழ்க்கைச் செலவினத்தைக் கட்டுப்படுத்த முடியும்?
நீதிமன்ற உத்தரவின்படி பெற்றோலின் விலையைக் குறைத்த ..சி. நிறுவனத்தையும் மீண்டும் பெற்றோலின் விலையைக் கூட்டச் செய்துள்ளது அரசு.
..சி. நிறுவனம் நான்கு நாட்கள் விலையைக் குறைத்து விற்றது. இதேபோன்று அரசாலும் பெற்றோலின் விலையைக் குறைக்கமுடியும் என்பதை ..சி. நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே, உடனடியாகப் பெற்றோலின் விலையைக் குறைக்குமாறு கோரி நாம் ஜனவரி ஐந்தாம் திகதி நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம்என்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காகத் தமிழக மக்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் மேலும் ஒரு தொகுதிப் பொருட்கள் இன்று அங்கு கொண்டுசெல்லப்படவுள்ளன. 19 லொறிகளில் இந்த நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கூட்டுறவுச் சங்கங்களுக்கான உணவுப் பொருட்கள் அடங்கிய 41 லொறிகள் நேற்று அங்கு சென்றன.
இவ்வாறு செல்லும் 41 லொறிகளில் 20 லொறிகள் முல்லைத்தீவுக்கும் மற்றைய 21 லொறிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் சிறைகளிலிருந்து 149 இலங்கை கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 12 படகுகளுடன் 65 கடற்தொழிலாளர்களும், சென்னையில் 12 படகுகளுடன் 64 கடற்தொழிலாளர்களும், தூத்துக்குடியில் 4 படகுகளுடன் 20 கடற்தொழிலாளர்களும் அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அனைத்து கடற்தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எஸ்.பி. திசாநாயக்கநாய்என்ற வசனத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டாடு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். எனினும், அரசாங்கம் செய்யும் நாய் வேலைகளுக்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தைப் போன்று எந்தவொரு அரசாங்கமும் பொருளாதாரத்தை சீர்குலைக்கவில்லை நாட்டில் தற்போது தலைகீழான ஓர் பாராளுமன்ற அமைப்பு முறையே காணப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருக்க வேண்டியவர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு மாத்திரமே நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருவார் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு சூழ்ச்சி முலாம் பூசப்படுகின்றது.

மக்கள் பிரச்சினைகளே நீதிமன்றில் முன்வைக்கப்படுகின்றன, எனினும் குறித்த தீர்ப்புக்களை அரசாங்கம் கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் வருட பாராளுமன்ற அமர்வுகளின் போது மத்திய வங்கியின் ஆளுனருக்கு எதிராக தெரிவுக் குழுவொன்றை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரினால் மீட்கப்பட்ட வடக்குப் பகுதிகளில் காணி அளவைப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக காணியமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதப் பிடியிலிருந்து மீண்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மக்களை துரித கதியில் மீள் குடியமர்த்துவதே பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணிகளை இனம் காணல், காணிப் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அளவைப் பணிகளுக்காக புதிதாக 50 காணி அளவையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக காணியமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
காணி அளவைப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் உடனடியாக மீள் குடியமர்த்தல் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்ய புதிய சட்டங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிவாரணங்களை வழங்கும் பொருட்டு வடக்கில் செயற்பட்ட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமான பார்கொப் நிறுவனம் கல்விச் சுற்றுலா என்ற போர்வையில் விடுதலைப் புலி உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் தமிழீழ காவல்துறை பிரிவின் அங்கத்தினர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த அரச சார்பற்ற நிறுவனம் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகளைப் பேணியதாகத் தெரியவந்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு‌ம், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இ‌ந்த மாநா‌ட்டி‌ல் பா... தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலளர் சுப.வீரபாண்டியன், நடிகர் மன்சூர்அலிகான் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

‌பி‌ன்ன‌ர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார். அந்த தீர்மானம் விவரம்:

1948ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் தமிழீழத்தை விட்டு வெ‌ளியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களர் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு‌ம், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எ‌ன்றுதீ‌ர்மான‌ம்நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

இதை‌த் தொட‌ர்‌ந்துதிருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், ”டெ‌ல்‌லி‌யி‌ன் பா‌ர்வையை ஈ‌ர்‌க்கவே இ‌ந்த மாநாடு நட‌த்த‌ப்படு‌‌கிறது. ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னை நா‌ங்க‌ள் தா‌க்‌கியதாக கூறுவதுதி‌ட்ட‌மி‌ட்ட ச‌தி‌ச் செய‌ல். வரு‌கிற நாடாளும‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல்விடுதலைசிறு‌த்தைக‌ள் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றி பெறு‌ம் எ‌ன்றா‌ர்.

இல‌ங்கை ஒருதீவு, அது இரு நாடுகளு‌க்கு சொ‌ந்தமானது. 1976இ‌ல் ப‌ட்டு‌க்கோ‌ட்டை‌யி‌ல் நட‌ந்த மாநா‌ட்டி‌ல் த‌னி‌த் த‌மி‌ழ் ஈழ‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்றதீ‌ர்மான‌ம்நிறைவே‌ற்ற‌ப்‌ப‌ட்டது. அ‌ந்ததீ‌ர்மான‌த்தை வ‌லியுறு‌த்‌தி‌த்தா‌ன் நா‌ங்க‌ள் இ‌ந்த கூ‌ட்ட‌த்தை கூ‌ட்டி‌யு‌ள்ளோ‌ம் எ‌ன்றுதிருமாவளவ‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இல‌ங்கை அரசு இதுவரை ஒ‌ன்றரை ல‌ட்ச‌ம் த‌மி‌ழ் ம‌க்களை படுகொலை செ‌ய்து‌ள்ளது. 10 ல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் அய‌ல்நாடுக‌ளி‌ல் அக‌திகளாக வா‌ழ்‌கி‌‌ன்றன‌ர். இல‌ங்கை‌க்கு‌ம்விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கு‌‌ம் இடையே போட‌ப்ப‌ட்ட அனை‌த்து ஒ‌ப்ப‌ந்த‌ங்களையு‌ம் இல‌ங்கை அரசுகி‌‌ழி‌த்து எ‌றி‌ந்துவி‌ட்டது. இல‌ங்கை அரசு த‌மி‌ழ் ம‌க்களை ஏமா‌ற்‌றி வரு‌கிறது. த‌மி‌ழ் ஈழ‌ம் தன‌ி நாடு எ‌ன்பதை இ‌ந்‌திய அரசு‌ம் உலக நாடுகளு‌ம் அ‌ங்‌கீக‌ரி‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றுதிருமாவள‌வ‌ன் வ‌லியுறு‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன் என ஈழத் தமிழர் ஆதரவாளரும், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார்.
:- இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இந்த மக்களின் துன்பங்களையும், அவலங்களையும் திரைப்படமாக எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்என. இயக்குநh அமீர் உறுதியளித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
செ‌ன்னை அ‌ண்ணா அ‌றிவாலய‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற தி.மு. பொதுக்குழு கூட்ட‌‌த்த‌ி‌ல் 10வது முறையாக கட்சித் தலைவராக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியு‌ம், பொதுச் செயலராக அ‌ன்பழகனு‌ம், பொருளாளராக மு..‌ஸ்டா‌லினு‌ம் தேர்ந்தெடுக்கப்ப‌ட்டன‌ர்.
தி.மு..வில் 13-வது முறையாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதிலிருந்து பொதுக் குழுவுக்கு உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம், சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் இ‌ன்று ( காலை நடைபெ‌ற்றது..ி.மு. தலைவராக கருணாநிதியின் பெயரும், பொதுச் செயலராக .அன்பழகன் பெயரும், பொருளாளராக மு..ஸ்டாலினின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் இந்த மூன்று பேரின் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இ‌ன்று நடைபெ‌ற்ற பொது‌க்குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் முறை‌ப்படி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. முதல்வரும், தி.மு..வின் தற்போதைய தலைவருமான கருணாநிதி, 10-வது முறையாக மீண்டும் தலைவராகவும், 8வது முறையாக பொதுச் செயலராக .அன்பழகனும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்ப‌ட்டன‌ர்
!!!!!!!!!!!!!!!!
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு., ...‌‌தி.மு.., தே.மு.தி., .. உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுள்ளது.

நே‌ற்று நடைபெற்ற வேட்புமனு வாப‌சில் சுயேச்சை வேட்பாளர் (திரைப்பட நடிகர்) .பி. பரதன் தனது மனுவை வாபஸ் பெற்றார். மேலும், வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த 4 பேரின் மனுக்களும் தகுதியிழப்பு செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்குசின்னங்கள்ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இத்தேர்தலில் மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். வரும் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது ஒ‌வ்வொரு வா‌க்குசாவடி‌யிலு‌ம் 2 ‌மி‌ன்னணு இய‌ந்‌திர‌ங்க‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படும் என தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செ‌ன்னை‌யி‌ல் ஜனவ‌‌ரி 7 முத‌ல் 9ஆ‌ம் தே‌‌தி வரை அய‌ல்நாடு வாழ் இந்தியர்கள் (“பிரவாசி பாரதிய திவாஸ்“) மாநாடு நடைபெற உ‌ள்ளது. இ‌தி‌ல் குடியரசு‌த்தலைவ‌ர்பிர‌‌திபா பா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்சி‌ங் ஆ‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியளா‌ர்களு‌க்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்த அய‌ல்நாடு வாழ் இந்தியர் விவரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி இ‌த்தகவலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தான் செல்வதைத் இந்தியப் பிரஜைகள் தவிர்க்க வேண்டும் என அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாபாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு தொடர்பாக இந்தியர்கள் சிலரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நிலைமை மேலும் சிக்கல் ஆகியது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அயலுறவுத்துறை இணையமைச்சர் ஆனந்த் சர்மா, இந்த நடவடிக்கை உள்நோக்கம் உடையது. எனவே, இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்

 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இரண்டு தசாப்தங்களாக மேற்கு ஆப்ரிக்க நாடான கினியை ஆண்ட லன்சானா கொண்டி அவர்களின் இறுதிச்சடங்குககள் நடந்திருக்கின்றன.
அவரது பிரேதப் பெட்டி தலைநகர் கொனார்கியின் வீதிகளின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விளையாட்டரங்கு ஒன்றில் நடந்த விசேட பிரார்த்தனையின் பின்னர் அடக்கம் செய்வதற்காக மசூதி ஒன்றுக்கு அது கொண்டு செல்லப்பட்டது.
கொண்டி அவர்களின் மரணத்தை அடுத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய தலைவர்கள், தமது ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்த இறுதிச் சடங்கு நடந்துள்ளது.
பிராந்திய அமைப்பான எக்கோவாஸின் பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டுத்தூதுவர்களுடன், புதிய ஆட்சியின் தலைவர் கமரா சனிக்கிழமை பேச்சு நடத்தவுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கினியில் புதிதாக ஆட்சியை கைப்பற்றியிருப்பவர்கள் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு செய்த கேப்டன் கமரா அறிவித்தது போல 2010 இறுதியில் தேர்தலை நடத்தாமல் அடுத்த ஆறு மாதங்களில் நியாயமான மற்றும் சுதந்திரமான ஒரு தேர்தலை நடத்த வேண்டுமென பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
கினியின் மக்கள் தங்களது முடிவை சுதந்திரமாக வெளியிட இடம் வழங்கப்பட வேண்டும் என்று பாரீஸில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை சார்பாகப் பேசவல்ல ஒருவர் கூறினார்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை பிரான்ஸ் ஏற்றுள்ள நிலையில், நாளை சனிக்கிழமை கொனாக்ரி நகரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு செய்தவர்களுடன் நடக்கவுள்ள ஒரு சந்திப்பில் பிரான்ஸ் சார்பாகவும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!
இராக்கின் ரமாடி நகரில் ஒரு சிறைச் சாலையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயன்ற சம்பவத்தில் பொலிசார் ஆறு பேரும் தீவிரவாதிகள் ஏழு பேரும் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இராக்கில் அல்கைதாவுடன் தொடர்புடைய ஒரு கைதி என்று விபரித்து அக்கைதி இரண்டு காவலர்களை அடித்துப்போட்டுவிட்டு அவர்களது ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டார் என்று அப்பகுதி பொலிஸ் கமாண்டர் தாரிக் அல் துலைமி கூறினார். அதனைத் தொடர்ந்து ஒரு துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது.
மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். ரமாடி நகர வீடுகளில் அவர்களைப் பொலிசார் தேடிவருகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவுடன் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில், கூடுதல் படைகளை பாகிஸ்தான் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது தகவல்களை அளிக்க மறுத்து விட்டதாக டெய்லி டைம்ஸ் நாளிதழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் முக்கிய நகரான லாகூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாகிஸ்தானின் 10வது பிரிகேட் படையும், ஜீலம் பகுதிக்கு 3வது பிரிகேட் படையும் முன்னேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் அந்நாட்டு ராணுவத்தின் 10வது, 11வது பிரிவுப் படைகள் காஷ்மீரின் ரஜோவ்ரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், சாஸ்மா மின் உற்பத்தி நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
சீனாவின் ஹீனன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக சீன அரசின் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹீனன் மாகாணத்தின் புயாங் நகரில் உள்ள டோங்கன்செங் கிராமத்தில் இருந்த வெடிபொருள் எதிர்பாராதவிதமாக வெடித்ததாகவும், இதில் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மீட்புப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
sports
Bangladesh jiy efh; lhf;fhtpy; Muk;gk; Mfpa 5 ehs; JLg;ngLj;jhl;l Nghl;bapy; Kjy;,dpq;rpy; 89.4overல் vy;yh tpf;Nfl; ,og;gpw;f;F 293 xl;lq;fis vLj;jJ. பின்னர் துடுபெடுத்து ஆடிய Bangladesh 16.2 overல் 1tpf;Nfl; ,og;gpw;f;F 56xl;lq;fisvLj;J தொடர்த்துஆடி வருகிறுது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro =158.08sl / 68.01 in
1 us $ = 112.55 sl /48.42 in
1swiss fr =105.13 sl / 45.23 in
1 uk pound =164.69 sl /70.85in

Leave a Reply

Your email address will not be published.