‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.12.08) செய்திகள்

மடு தேவாலயம் எதிர்வரும் மாதம் திறக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கூறுகையில், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் படையினரின் உதவியுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
தேவாலயத்துக்கான மின்சார இணைப்புக்கள் மீள ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் குடிநீர் சேவைகள் உருவாக்கப்பட்ட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளாலி படைமுகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
இவ்வெடிப்புச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கிளாலி படை முகாமைச் சேர்ந்த எச்.பி.யு. வீரசிங்க (வயது 28) என்பவரே சம்பவத்தில் மரணமானவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சாவகச்சேரி பதில் நீதவான் செ. கணபதிப்பிள்ளை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் பெயரை மாற்றுவதற்கு கட்சியின் செயற்குழு அனுமதி வழங்காவிட்டால் தேர்தல்கள் செயலகத்தில் புதிய கட்சியொன்றை விரைவில் பதிவுசெய்யவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினUk; MajjhupAkhd கருணா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக Majjhupகருணா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.

தனது புதிய கட்சியில் இணைந்து கொள்வதற்கு பிள்ளையானும், ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களும் சம்மதிப்பார்கள் என கொழும்பு ஊடகமொன்றிடம் Majjhupகருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“கட்சியின் பெயரை மாற்றுவதில் பிரச்சினை ஏற்படுமாயின், புதிய கட்சியொன்றை தேர்தல் செயலகத்தில் பதிவுசெய்து அதனைக் கொண்டுநடத்தப் போகின்றேன். பிள்ளையானும், ஏனையவர்களும் புதிய கட்சியில் இணைந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என கருணா தெரிவித்தார்.

எனினும், கட்சியின் பெயரை மாற்றுவதற்கு பிள்ளையான் உட்பட ஏனையவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா இந்தவார ஆரம்பத்தில் கூறியிருந்தார்.

இதேவேளை, புதிய கட்சி எதிர்கால தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்துபோட்டியிடுமெனவும், கட்சியை தேசிய ரீதியில் கொண்டுசெல்லவிருப்பதாகவும் Majjhup கருணா அந்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா மத்தியதர வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்தள்ளது.
உலக வங்கியினால் ஆசிய நாடுகளின் இறுதியாண்டுக்கான வருமான மட்டங்கள் தொடர்பான கணிப்பீட்டு அறிக்கை வெளியிட்ட போது இது தெரியவந்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக சார்க் பிராந்திய நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி பாதிப்படையும் நாடுகளில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகின் அதிக வறியவர்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, மாலைதீவு மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவதானமாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா செல்லும் அமெரிக்கர்கள், அரச கட்டடங்கள், படை நிலைகள் மற்றும் படையினரின் வாகனத் தொடரணி செல்லுமிடங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“வடபகுதி முழுவதும் ஆபத்தான பகுதியாகும். வடமத்திய மாகாணமாகிய அனுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சிக்கு வடக்குப் பகுதி, ஏ-14 வீதி, மதவாச்சி தொடக்கம் ஹொரவப்பொத்தான வரையிலான வீதி ஆகியவை மிகவும் ஆபத்துக்குரிய பகுதிகளாகும். மேலும் ஏ-6 வீதி, திருகோணமலை நகரம், அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதி, மகா ஓயாவின் மேற்குப் பகுதி, ஏ-4 ஆகிய பகுதிகளுக்கும் அமெரிக்கர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என எச்சரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களை இலக்கு வைத்தோ அல்லது அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்தோ தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லாதபோதும் தவறான இடங்களில் தவறான நேரத்தில் இருந்து வன்முறைகளுக்கு பலியாகிவிடக்கூடாது என்பதற்காகவே எச்சரிக்கை விடப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெற்றுவரும் போரை உடன் நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியாகப் பேச்சு நடத்தி வருகிறது. அங்கு போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார்.
– இவ்வாறு ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.
அப்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-
தி.மு.. அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எச்சரிக்கை விடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மாநில அரசுகளின் கடமை. இது தொடர்பாக தமிழக அரசுடன் காங்கிரஸ் மேலிடம் பேச்சு நடத்தி வருகிறது. அதனையே காங்கிரஸ் வலியுறுத்துகின்றது.
இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இராஜாங்க ரீதியாக இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்வார்என்றார் அவர்.
எனினும் இலங்கைஇந்தியத் தரப்புகளுக்கு இடையில் இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் பேச்சுகளின் விவரங்கள் பற்றிய தகவல் எதையும் அவர் அங்கு வெளியிடவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியாபாகிஸ்தான்இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார்.
அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது.
இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத்துக்கும் மோதலுக்கும் இடமாகியுள்ளதால் அமெரிக்காவின் சார்பில் இப்பிராந்தியப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தேவைப்படுகின்றார் என ஹிலாரி கருதுகின்றார் என்றும்
எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளை வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவஸ்தரான தமது கணவர் பில் கிளிண்டனே இதற்குப் பொருத்தமானவர் எனக் கருதி அவரின் பெயரை ஹிலாரி பிரேரித்துள்ளார் என்றும்கூறப்படுகின்றது.
இதேசமயம்
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளைக் கண்காணிப்பதற்கு .நாவின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்குப் பல தடவைகள் வந்து சென்றுள்ள பில் கிளிண்டன், அதன் காரணமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் நன்கு பரிச்சயமாகி, விடயங்களை ஏற்கனவே நன்கு புரிந்து கொண்டவர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக இந்த வருடம் இரு தரப்புகளிலும் உயிரிழந்த 800 பேரின் சடலங்கள் இருதரப்பினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன என்று செஞ்சிலுவை சர்வதேச குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாத்திரம் 200 சடலங்கள் கையளிக்கப்பட்டன. படையினர் ஓமந்தை சோதனைச் சாவடியைத் தற்போது புளியங்குளம் பகுதிக்கு மாற்றியுள்ளனர் என்றும், செஞ்சிலுவைச் சர்வதேச குழு தொடர்ந்தும் மோதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் வழங்கும் நடவடிக்கைக்கு உறுதுணை வழங்கி வருகிறது என்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கம் தனது நிதியைச் செலவிட்டு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் பொறிகண்டி பகுதியில் சிறிலங்கா படையின் மோட்டார் அணியினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். 10 இளைஞர்களின் அடையாள அட்டை பறிக் கொண்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த படையின் இவ்வாறு சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டதாகவும், சென்ற இளைஞர்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டதுடன் 10 இளைஞர்களின் அடையாள அட்டைகளையும் பறித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தென்மராட்சி பகுதியிலும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொண்டு வீட்டில் உள்ளவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படையினரின் இவ்வாறான நடவடிக்கையினால் அச்சமடைந்துள்ளதாவும் தெரிவிக்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் காணாவில்லை என அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 24ம் திகதி வெள்ளவத்தை பகுதியிலிருந்து மொரட்டுவ பகுதி நோக்கி பயணித்தவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகி்ன்றது. யாழ், கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 அகவையுடைய சுரேஸ் மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த 27 அகவையுடைய சத்தியபவான் ஆகிய இருவருமே காணவில்லை என அவர்களின் உறவினர்கள் யாழ் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்யதுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.. சந்திரசிறி கொழும்புக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.. சந்திரசிறிக்கு பதிலாக, மேஜர் ஜெனரல் மன்தக சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
மிகவும் தீர்மானமிக்கதோர் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
52ம் படையணி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனினும், இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் எத்தகைய உதவிகளையும் கோரக் கூடாது என்று வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் இந்தக் கடிதத்தினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ன மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் . நா. அமைப்புக்களிடமோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமோ எத்தகைய உதவிகளையும் தாங்கள் கோரக் கூடாது. எத்தகைய உதவி தொடர்பான கோரிக்கைகளும் அத்தியாவசிய சேவைகள் திணைக்களத்தினூடாக கோரப்பட வேண்டும். அவசிய தேவைகளானாலும் இத்தகைய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியான ஜோன் கம்பல், வன்னியிலுள்ள மக்கள் சோமாலியர்களைப் போல் வாழ்வதாக கருத்து தெரிவித்திருந்தார். இத்தகைய அறிவிப்புகளையடுத்தே மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் இக்கடிதத்தினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் செலவுகள் பற்றிய நிதியறிக்கை என்பனவற்றினை அனுப்பி வைக்குமாறு யாழ். அரசாங்க அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். அரச அதிபரை காங்கேசன்துறை படை முகாமிற்கு அழைத்து, மிகவும் இரகசியமான முறையில் அவரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!
india

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். .

இந்தப் பேச்சு வார்த்தையின் போது மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக தெரிகிறது.

இந்த தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தானை நிர்ப்பந்திக்குமாறு பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும், இதற்காக பாகிஸ்தான் மீது கூடுதலாக நிர்ப்பந்தம் கொடுக்கப்படும் என்று ரைஸ் உறுதி அளித்ததாக தெரிகிறது.

இதனிடையே சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சியும் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மும்பை தாக்குதல் குறித்து இரு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது. அப்போது பாகிஸ்தானுடன் சீனா மிகவும் நெருக்கமாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு கூடுதல் நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று பிரணாப் கேட்டுக் கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தால் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். தி.மு.. பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களை காக்க விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தோம்; இன்றும் ஆதரிக்கிறோம், நாளையும் ஆதரிப்போம் என்று வைகோ கூறினார்.
சென்னையிலுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பெரியார் சிலையை .தி.மு.. பொது செயலாளர் வைகோ திறந்து வைத்து உரையாற்றினார்.
எத்தனை சோதனை வந்தபோதிலும் மனம் தளராமல் இருப்பவர்கள் தான் .தி.மு..வை சேர்ந்தவர்கள். தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரிக்கிறோம். தமிழ் இன மக்களை பாதுகாக்க விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்றார் வைகோ
!!!!!!!!!!!!!!
சென்னை அமைந்தகரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மற்றும் தமிழீழ அங்கீகாரக் கோரிக்கை மாநாடு பல தடைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் இன்று நடைபெறுகிறது.
சென்னை அமைந்தகரையிலுள்ள புல்லா அவென்யூவில் 26ஆம் திகதி (இன்று) இளம் சிறுத்தைகள் எழுச்சி மாநாடு மற்றும் தமிழீழ அங்கீகாரக் கோரிக்கை மாநாடு நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அண்ணாநகர் பொலிஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கும் பொலிஸ் கமிஷனரின் உத்தரவை ரத்துச் செய்து, நிபந்தனை அடிப்படையில் அனுமதி அளிக்குமாறு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழீழ அங்கீகாரக் கோரிக்கை மாநாடு நடத்தப் பொலிஸார் அனுமதி வழங்கினர்.
இத்தனை தடைகளையும் சோதனைகளையும் தாண்டி, இன்று தமிழீழ அங்கீகாரக் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கருத்துகள் எதுவும் மாநாட்டில் தெரிவிக்கக் கூடாது என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விளம்பர பதாகைகள், புலிகள் இயக்கத்தின் தலைவர்களின் பதாகைகளை வைக்கக்கூடாது என்றும் பொலிஸார் நிபந்தனை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
:தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரிப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் மீது தமிழக அரசு தயக்கமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் வலியுறுத்தி உள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குறிப்பிட்ட கட்சிக்கு thf;F போட பணம் வாங்குவதில் கர்நாடக மாநிலத்தவர் முதலிடம் வகிப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. .

டெல்லியைச் சேர்ந்த சி.எம்.எஸ். என்ற ஊடக ஆய்வு மையம் அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. தேர்தலில் thf;Fகளை விலைக்கு வாங்கும் ஆபத்தான போக்கு என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியது.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கர்நாடகாவில் தேர்தல் முடிவை பணபலம் தீர்மானித் திருப்பது தெரியவந்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 47 சதவீதம் பேர் thf;Fப்போட பணம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

பணத்திற்காக thf;F விற்ப வர்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பீகார், மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் thf;Fகளை விலை பேசுபவர்கள் குறைவாகவே இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தொட்டபல்லபூர் தேர்தலின்போது மற்ற கட்சிகளைக் காட்டிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிக அளவில் பணத்தை கொடுத்து thf;Fகளை பெற்றிருப்பதும், அரபாவி, தேவதுர்கா ஆகிய இடங்களில் thf;Fகளை விலைக்கு வாங்கியதில் பிஜேபி முன்னிலை வகித்ததாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் வேலை வா‌ங்‌கி தருவதாக அழை‌த்து‌ச் செ‌ன்று மலே‌சியா‌வி‌ல் த‌வி‌க்க‌விட‌ப்ப‌ட்டு த‌மிழக‌ம்திரு‌ம்‌பிய 21 இளைஞ‌‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் பொது ‌‌நிவாரணநி‌தி‌யி‌லிரு‌ந்து தலா ரூ.10,000 வழ‌ங்க முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னை மற்றும் கடலூரை‌‌ச் சேர்ந்த 21 இளைஞர்கள் தனியார் ஒருவரிடம் பணம் கொடுத்து, அவரால் ஏழு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டிற்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, இடையிலேயே மலேசியாவில் இறக்கி விடப்பட்ட நிலையில் வேலையில்லாமல் பணத்தையும் இழந்து தவித்தனர்.

தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் முத‌ல்வ‌ர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் ஏழு மாதங்களாக சிரமப்பட்டு பணத்தையும் இழந்து செய்வதறியாது நிலையில் உள்ள தங்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல உதவிபுரியுமாறு முத‌‌ல்வ‌ரிட‌ம் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அந்த 21 இளைஞர்களுக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் முத‌ல்வ‌ர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முத‌ல்வ‌ர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
world
லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு தாலிபான்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அன்சர்வாமொஹஜிர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதன் காரணமாக, லாகூர் குண்டுவெடிப்புக்கு இந்திய‌ர்க‌ள்தான் காரணம் என்ற பாகிஸ்தானின் பரபரப்புக் குற்றச்சா‌ற்று பிசுபிசுத்து விட்டது.

பாகிஸ்தானின் நியூஸ் டெய்லி என்ற நாளிதழுக்கு அன்சர்வாமொஹஜிர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டூஃபன் வசீர் தொலைபேசியில் கொண்டு பேசுகையில், லாகூர் கார் குண்டுவெடிப்புக்கு தங்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் அரசு நிலைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் வசீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் வசீர் மற்றும் அவரது அமைப்பில் உள்ள ஆட்கள், தாலிபான் ஆதரவாளர்கள் என்பது தெரிய வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதனன்று லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கொல்கட்டாவைச் சேர்ந்த சதீஸ் ஆனந்த் சுக்லா உட்பட மேலும் சிலரை பாகிஸ்தான் உளவு அமைப்பு கைது செய்தது. அவர், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்ததாகவும், லாகூர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாற்றியது.

ஆனந்த் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 இந்தியர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு நேற்று கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், லாகூர் குண்டுவெடிப்புக்கு தாலிபான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!
பாலத்தீனக் குழுவான ஹமாஸ் தமது பகுதிகளுக்குள் ராக்கெட்டுகளை ஏவுவதை நிறுத்த வேண்டும் என்று இதுவரை இல்லாத வகையில் கடுமையான எச்சரிக்கையை இஸ்ரேலியத் தலைவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
காசாப் பகுதியில் இயங்கும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் எனும் மற்றொரு ஆயுதக் குழு மீது தாக்குதல்களை நடத்த தான் தயங்க மாட்டேன் என்று இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஆல்மர்ட் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் மேலோங்கும் வன்முறை சம்பவங்களுக்கு ஹமாஸ் மீதே இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் திபி லிவினி அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளார்.
எகுட் ஆல்மர்ட் அவர்களை அடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியின் பிரச்சாரத்தில் சிபி லிவினி அவர்கள் ஈடுபட்டு வருகிறார். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும், அந்த நிலமை மாறுபட்டே ஆகவேண்டும் என்றும் எகிப்திய தலைவர்களை கெய்ரோவில் சந்தித்த பிறகு திபி லிவ்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொறுமையுடன் செயல்படுமாறு எகிப்து கோரியுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இராக்கின் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்தாதில் வடக்கு ஷியா மாவட்டமான, சுலாவில், உணவு விடுதி ஒன்றுக்கு வெளியே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் இருவர் பொலிஸ்காரர்களாவர்.
பலியானவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் இந்த வாரத்தின் முற்பகுதியில் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தினர் ஆட்சியின் மீது தமது பிடியை மேலும் இறுக்கியுள்ளனர்.
இந்தப் புரட்சிக்கு தலைமையேற்ற காப்டன் மூசா டாடிஸ் கமாராவின் உத்தரவையடுத்து, தலைநகர் கொனாக்ரியிலுள்ள இராணுவ முகாமில் நாட்டின் பிரதமர் உட்பட பல அமைச்சர்கள் சரணடைந்துள்ளனர்.
இராணுவத்தினருடன் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு பின்னர் இராணுவ முகாமிலிருந்து அமைச்சர்கள் திரும்பிவிட்டனர்.
கினியின் அதிபராக இருந்த லான்சானா காண்டே அவர்கள் மரணமடைந்த பிறகு, அங்கு இந்த இராணுவ சதிப்புரட்சி இடம் பெற்றது. பல ஆண்டுகளாக அந்நாட்டில் இருந்த அடக்கு முறை ஆட்சியின் மூலம் சோர்ந்து போயிருந்த கினியிலுள்ள சில மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்கள் என்று செய்தியாளர் கூறுகிறார
!!!!!!!!!!!!!!!!!!!!
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் அமைதி ஏற்பட வேண்டும் என்று போப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் தனது பாரம்பரியமான கிறிஸ்துமஸ் செய்தியில் வேண்டியுள்ளார்.
வாட்டிகனிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில், பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தவர்களிடையே உரையாற்றிய போப் பெனடிக்ட் அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
நிச்சயமில்லாத ஒரு எதிர்காலத்தில்,உலகிலுள்ள மக்கள் தமது சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டால்,
உலகம் சிதறி வீழ்ந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களை பல டஜன் கணக்கான மொழிகளில் தெரிவித்த போப் அவர்கள், அடுத்த ஆண்டு ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியப் பகுதிகளுக்கு செல்லத் திட்டமிட்ட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro =158.18sl /67.53in
1us $= 112.55sl /48.05in
1 swiss fr= 104.69sl / 44.67 in
1uk pound =166.20sl / 70.95in

Leave a Reply

Your email address will not be published.