‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.12.08) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
அளம்பில் பகுதி ஊடாக நேற்று முன்நாள் (23.12.08) செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.
இதில் படையினருக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து படையப் பொருட்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே? சிறிலங்கா அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு வார ஏடு!
இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத
ஆயுத விநியோக மையத்திற்கு சென்று அவர்கள் ஆயுதங்களையும் பார்வையிட்டனர். உக்ரேனிய படை அதிகாரி கொள்வனவுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டார்.
அந்த பட்டியலில் 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் என்பன இருந்தன. மேலும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்களையும் கொள்வனவு செய்திருந்தனர்.
முதலில் விடுதலைப் புலிகள் வானூர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தவே முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாகக் கூட இருக்கலாம்.
உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்வதற்கு ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.
கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களில் இறக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.
விடுதலைப் புலிகள் சிறிய படகுகளிலும் பொருட்களை இறக்கியிருந்தனர். எனினும் கடற்படையினரின் புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் பிரதான கப்பலை கண்டறிய முடியவில்லை.
இந்த தகவலை படையினரின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர
அறிந்திருந்தும் கண்டுபிடிப்பதில் தவறவிடப்பட்டது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் நெல்லியடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் காணாமல்போயுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி தனது சகோதரியின் மகளின் வீட்டுக்கு சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. வடமராட்சி,துண்ணாலையின் கலிகை பகுதியை சேர்ந்த 28 அகவையுடைய குரநாதன் கேசவன் என்பவரே காணாமல்போயுள்ளார்.
காணாமல் போன தினம் அப்பகுதியில் நின்ற படையினர் இளைஞர்கள் சிலரை தாக்கியதாக, தனது மகனை இராணுவத்தினரே கடத்தியிருக்கலாம் என காணாமல்போனவரின் தந்தை முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஊவா மாகாணம் மொனராகல மாவட்டம் புத்தள பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடந்த திங்கட்கிழமையன்று அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரியினால் கடையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் 27 வயதான ராஜசிங்கம் சீவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து புத்தளையில் வசிக்கின்ற இவர் கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரது சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை புத்தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கிளேமோர் தர்ககுதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டு படையினர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த கிளேமோர் தாக்குதல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. விறகு வெட்ட சென்ற சிவிலியன்களின் ரக்டர் வண்டியில் இராணுவத்தினர் பிரயாணம் செய்த போது இந்த தாக்குதல் நடததப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பம்பைமடுவுக்கும் மணிப்புரத்திற்கு இடையிலேயே இந்த தாக்குதல் இடம் பெற்று இருப்பதாக காயம் அடைந்த சிவிலியன் தெரிவித்தார் விறகு வெட்டிவிட்டு திரும்பி கொண்டு இருந்த சமயம் வழிமறித்த இராணுவத்தனர் அனுமதி இல்லாது விறகு வெட்ட சென்றமை தொடர்பாக தங்களிடம் விசாரித்ததாகவும், ரக்டர் வண்டியினை தமது முகாமுக்கு திருப்பி செல்லுமாறு பணித்ததுடன் இராணுவத்தினர் 7 பேர் குறித்த வண்டியில் ஏறி முகாமை நோக்கி பயணித்துள்ளனர்.

இதன் போது தாங்கள் ரக்டர் வண்டியை திருப்பி கொண்டு முகாமுக்கு செல்லும் வழியில் குறித்த கிளேமோர் தாக்குதல் இடம் பெற்தாக காயம் அடைந்த சிவிலியன்கள் தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்த இரண்டு சிவிலியன்களும் வவுனியா பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அனுமதிக்கப்பட்ட ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் அடைந்த இராணுவத்தினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
ஆளும் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் எதுவும் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்துடன் தாம் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளவில்லை எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே தாம் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதே கட்சியின் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்த்து யுத்த வெற்றிகளை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தேசிய சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சாதகமான முறையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது அதனைப் போற்றுவதும், பாதகமான தீர்ப்புக்களின் போது உதாசீனம் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை விவகாரம், வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை போன்ற தீர்ப்புக்களின்போது நீதிமன்றம் பக்கச்சார்பற்றதென ஆளும் கட்சி வலியுறுத்தி வந்தது. எனினும், மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு எரிபொருள் விலையை குறைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து மற்றும் அமைச்சரவை கலந்தாலோசிக்க உள்ளதாக அறிவித்துள்ளமை நியாயமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான பொருள் ஒன்றின் மீது எந்தவொரு நாடும் 180 வீத வரிச்சுமையை மக்கள் மீது திணிக்காதென அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அதிகாரங்களை அமைச்சரவை உதாசீனம் செய்தால் அதன் மூலம் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்த நடவடிக்கை குறித்து பிரச்சாரம் செய்து வரும் அரசாங்கம் இராணுவ செலவீனங்களைவிட மிஹின் எயாருக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இடம்பெயர்ந்து அவலப்படும் அகதிகளுக்குப் போதியளவில் உணவு,மருந்து, தற்காலிகத் தங்குமிட வசதிகள், சுகாதார சேவைக் கருவிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிட்டவேயில்லை. எனவே பல்லாயிரக் கணக்கான அந்த அகதிகளுக்கு உரிய மனிதாபிமான உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் போதியளவில் எடுத்துச் செல்வதற்கு வசதியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, போக்குவரத்து வசதிகளை விரைந்துஉடனடியாகமேம்படுத்துங்கள்.
– இவ்வாறு ஐ.நாவின் உயரதிகாரி ஒருவர் இலங்கை அரசைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார்.
உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான .நா.பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியான வோல்டர் கலின் என்பவரே இலங்கை அரசுக்கு இவ்வாறு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றார்.
இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படும் இந்த அகதிகளுக்குத் தற்போது அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் போதுமானவையே அல்ல என்றும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னியிலிருந்து வெளியேறி விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்த மக்கள் கல்லிமோட்டையிலும் சிறுகண்டலிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடயம் குறித்தும் அவர் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.பொதுமக்களில் இருந்து ஆயுதம் தாங்கிய தரப்புகளை வேறுபடுத்துவதற்கான சட்டக் கடப்பாடு உள்ளது என்பதை அவர் தமது கடிதத்தில் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அத்தகைய வேறுபடுத்தும் செயற்பாடு, வெளிப்படையானதாகவும் ஏற்கனவே எட்டப்பட்ட நியாயமான நடைமுறைகளுக்கு அமைவானதாகவும் சரியாகவிரைந்துபூர்த்தி செய்யப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அகதிகளும் பொதுமக்களே. அவர்களுக்கும் எங்கும் செல்வதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு. அவர்களை முகாம்களில் தடுத்து வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உரிய மனிதாபிமான நிவாரணப் பொருட்களைத் தொண்டுப்பணியாளர்கள் எடுத்துச் சென்று விநியோகிப்பதற்கு ஏதுவாக உரிய பாதை வசதியைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துமாறு அவர் இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட் மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவி வசதிகள் கிட்டுவதை உறுதிப்படுத்துவதில் போரில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்புகளுக்குமே உள்ள கடப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேசமயம்
இந்த அகதிகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களில் இதுவரை 40 வீதமானவையே அங்கு சென்றடைந்திருக்கின்றன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது.
பத்தாயிரக் கணக்கிலான குடும்பங்களுக்கு தற்காலிக புகலிடங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. அத்தோடு மேலும் 60 ஆயிரம் பேர் கடந்த மாதப் புயல் வெள்ளத்தினால் வீடு வாசல்களை இழந்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்குத் தேவையான அவசரஅவசியபொருட்களை எடுத்துச் செல்வதற்கு அரசு அனுமதிப்பதாகவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என அரசு கூறுகின்றது.
அதேவேளை, யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கானோருக்கான அவசர தேவைகளைக் கவனிப்பதற்காக உதவி அமைப்புகள் வன்னிக்குள் செல்ல அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும் என்றும் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்திருக்கின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சியை அரச படையினர் முற்றாகக் கைப்பற்றிவிடுவர் என்பதை புலிகளே ஒத்துக்கொண்டுள்ளனர் என்று அமைச்சர் கெஹலிய ரமபுக்வெல நேற்றுக் கூறினார்.
இவ்வாறான வெற்றிகளைத் தடுக்க தெற்கிலும் சர்வதேச மட்டத்திலும் பாரிய சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன என்றும் அவர் சொன்னார். அரச தகவல் திணைக்களத்தின் ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
வன்னி யுத்தத்தில் நாம் பாரிய வெற்றிகளைக் குவித்து வருகிறோம். நாலாபக்கமும் இருந்து எமது படையினர் கிளிநொச்சி நோக்கி முன்னேறுகின்றனர்.
முதலில் கிளிநொச்சியைப் பிடிப்பதா அல்லது முல்லைத்தீவைப் பிடிப்பதா என்பதில் பிரச்சினை ஏதும் இல்லை.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதே அரசின் திட்டம். அதற்கேற்ப படையினர் யுத்தத்தை நடத்தி வருகின்றனர். எந்த இடத்தை முதலில் பிடிப்பது என்பதைக் களத்தில் நிற்கும் படையினரே தீர்மானிப்பர் அது யுத்த தந்திரம்.
படையினரின் இந்த அர்ப்பணிப்பை .தே.. மிக மோசமாக விமர்சிக்கிறது. .தே.கவும் மங்களவும் சேர்ந்து உருவாக்கிய ஈஞுஞூஞுணஞிஞு ஙிச்ணாஞிட என்ற அமைப்பின் ஊடாகப் படையினர் அதிக எண்ணிக்கையில் மரணித்தால் அதை அந்த அமைப்பு சந்தோஷத்துடன் வெளியிடுகிறது. யுத்த வெற்றிகளைத் தடுக்கும் சதித்திட்டமே இது. நாடாளுமன்றை உடன் கூட்டுமாறு .தே.. அரசிடம் கோருகிறது. இது இப்போதைக்குத் தேவையற்ற ஒன்று. இக் கோரிக்கையும் யுத்தத்துக்கு எதிரான சதித்திட்டங்களில் ஒன்றுதான்.
கிளிநொச்சியைப் படையினர் பிடித்தாலும் யுத்தம் தொடரும் என்று நடேசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிளிநொச்சியைப் படையினர் பிடிப்பர் என்பதைப் புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வாறான வெற்றிகளையெல்லாம் தடுக்கும் நோக்கில் தெற்கிலும் சர்வதேச மட்டத்திலும் சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் இடம்பெறும் போராட்டம்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிங்கக் கொடியை ஏந்தியவாறு புலிகளுக்கு எதிராக தமிழ் மக்களே போராடத் தொடங்கிவிட்டனர் என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
அரச ஊடகத் தகவல் நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:-
புலிகளின் பயங்கரவாதத்தால் இன்று அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று புலிகள் தம்மைச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களே புலிகளை நிராகரித்துவிட்டு புலிகளுக்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.
கடந்த வாரம் யாழ். சாவகச்சேரியில் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு சிங்கக் கொடியை ஏந்தியவாறு புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புலிகள் அமைப்பில் பலவந்தமாக சேர் க்கப்பட்டிருக்கும் அம்மக்களின் உறவினர்களை விடுவிக்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
2002 இல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்பே புலிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து அப்பாவி இளைஞர்களையும் மாணவர்களையும் பலவந்தமாகத் தமது அமைப்பில் சேர்த்தனர்.
புலிகளின் பயங்கரவாதத்தை நிராகரித்துவிட்ட தமிழ் மக்கள் இன்று புலிகளுக்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர். இது ஒரு முக்கிய திருப்பமாகும்என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நாளை காலை 10. 30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.
நாடாளுமன்ற உறுப்பினரும் .தே.கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான உதவிச் செயலாருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர், கேட்டாபயவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் என்று .தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!
india
பகு‌த்த‌றிவு பகலவ‌‌ன் த‌ந்தை பெ‌ரியா‌ரி‌ன் 35-வதுநினைவு நாளான New;று செ‌ன்னை பெ‌ரியா‌ர்திட‌லி‌ல் உ‌ள்ள அவரதுநினை‌விட‌த்‌தி‌ல்தி.. தலைவ‌ர்கி.‌வீரம‌ணி உ‌ள்பட ப‌ல்வேறு தலைவ‌ர்க‌ள் மல‌ர் வளைய‌ம் வை‌த்து ம‌ரியாதை செ‌ய்தன‌ர்.

பெ‌ரியா‌ர்நினை‌விட‌த்‌தி‌ல் ம‌ல‌ர் வளைய‌ம் வை‌த்ததிரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர்கி. ‌வீரம‌ணி, த‌ந்தை பெ‌ரியா‌ர்வி‌ட்டு‌ச் செ‌ன்ற சமுதாய‌ப் ப‌ணிகளை தொட‌்‌ந்து செ‌ய்வோ‌ம் எ‌‌ன உறு‌திமொ‌ழி ஏ‌ற்றா‌ர்.

இதேபோ‌ல், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் தா. பா‌‌ண்டிய‌ன், ஆ‌ர். ந‌ல்லக‌ண்ணு, ‌விடுதலைசிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் உ‌ள்பட ப‌ல்வேறு க‌ட்‌சி‌யின‌ர் த‌ந்தை பெ‌ரியா‌ர்நினை‌விட‌த்‌தி‌ல் மல‌ர் வளைய‌ம் வை‌த்து ம‌ரியாதை செ‌ய்தன‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!

காங்கிரஸ் கட்சியின் 124ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடு களை செய்யுமாறு கட்சி தொண்டர் களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மதுக்கடைகளை மூட பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கும் மராட்டிய மாநில ஏற்பாட்டை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும் எ‌ன்று பா... ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் வே‌ண்டுகோ‌ள்விடு‌த்து‌ள்ளா‌ர்
இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள். அரசாங்கமும் இதனை ஒப்புக்கொள்கிறது. சமுதாயத்தில் நிலவும் அனைத்து கேடுகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கும் மதுவை ஒழிக்காவிட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்காதவர்களே இல்லை என்கிற அவல நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டு விடும்.

அந்த அளவுக்கு நம்முடைய இளைய சமுதாயத்தினர் இடையே குடிப்பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் கூட குடிக்கு அடிமையாகி வருகின்றார்கள் என்பதை எல்லாம் நானும், என்னுடன் வந்த அனைத்துச் சமய, சமுதாய பெரியவர்களும் முத‌ல்வ‌ர் கருணாநிதியிடம் எடுத்து சொல்லி மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாதாடினோம்.

எங்களை போன்று மதுவின் தீமைகளை நன்றாக உணர்ந்து வைத்திருக்கும் முத‌ல்வ‌ர் கருணாநிதியும் முழு மதுவிலக்கு என்ற இலக்கை அடைவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இப்போது அதில் முதல்கட்டமாக இனிமேல் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும், மதுக்கடைகளின் வேலை நேரம் நாள்தோறும் இரவில் ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்திருக்கிறார். படிப்படியாக முழு மதுவிலக்கை எய்திடும் வகையில் முத‌ல்வ‌ர் எடுத்துள்ள இந்த முதல் கட்ட நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.எ‌ன்று ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!
இந்திய மாநிலமான ஜம்முகாஷ்மீரில் தேர்தல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளனர்.
தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருவதுடன் தமக்கு சுதந்திரமும் கோருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
தேர்தலின் இறுதி தினத்தின் போது ஜம்முகாஷ்மீரில் பெருமளவு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மும்பாயில் கடந்த மாதம் நடந்த தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தேர்தல்கள் வந்திருக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!
world
பா‌கி‌ஸ்தா‌னி‌ன் இறையா‌ண்மை‌மீது ஒருபோது‌ம் சமரச‌ம் செ‌ய்ய முடியாது எ‌ன்று‌ கூ‌றியு‌ள்ள அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ஆ‌ஷி‌ப் அ‌லி ச‌ர்தா‌ரி, நா‌ட்டை‌ப் பாதுகா‌ப்பத‌ற்காக கடை‌சி சொ‌ட்டு ர‌த்த‌ம் இரு‌க்கு‌ம் வரை போராடுவோ‌ம் எ‌ன்றா‌ர்.

‌சி‌‌ந்து மாகாண‌த்‌தி‌ல் உ‌ள்ள பெ‌ட்டாரோ இராணுவ‌க் க‌ல்லூ‌‌ரி‌யி‌‌ல் நட‌ந்தநிக‌‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் பே‌சிய அவ‌ர், “எ‌ங்‌க‌ளி‌ன் உட‌ம்‌பி‌ல் கடை‌சி சொ‌ட்டு ர‌த்த‌ம் உ‌ள்ள வரை எ‌ங்க‌ள் நா‌ட்டை‌ப் பாதுகா‌க்க‌ப் போராடுவோ‌ம்எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், “நமது நாடு சவா‌ல்க‌ள்நிறை‌ந்த காலக‌ட்ட‌த்தை‌க் கட‌‌ந்து வரு‌கிறது. சவா‌‌ல்களை ம‌க்க‌ள் உறு‌தியுட‌ன் எ‌தி‌ர்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். நமது நா‌ட்டி‌ன் சுத‌ந்‌திர‌த்தை‌ப் பாதுகா‌க்க ம‌‌க்க‌ள் அனைவரு‌ம் ஒ‌ன்றுப‌‌ட்டுநி‌ற்க வே‌ண்டு‌ம். பா‌கி‌ஸ்தா‌னி‌ன் ஒருமை‌ப்பாடு, இறையா‌ண்மை, சுத‌ந்‌‌திர‌ம் ஆ‌கியவ‌ற்றுட‌ன் ஒருபோது‌ம் சமரச‌ம் செ‌ய்துகொ‌ள்ள முடியாது.” எ‌‌ன்று‌ம் ச‌ர்தா‌ரி கூ‌றினா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த பா‌கி‌ஸ்தா‌ன் தகவ‌ல் அமை‌ச்ச‌ர் ஷெ‌‌ர்‌ரி ரெஹ‌்மா‌ன், “பா‌கி‌ஸ்தா‌ன் அரசு இய‌ன்றவரை க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌‌ன் நட‌ந்து வரு‌கிறது. ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு, அமை‌தி ஆ‌கிய பாதைக‌ளி‌ல் இரு‌ந்து தவறாம‌ல் எமது ம‌க்க‌‌ள் நட‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

அதேநேர‌த்‌தி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌ன் ரா‌ஜ்ய ஒருமை‌ப்பா‌ட்டை‌ப் பாதுகா‌க்கு‌ம்திற‌ன் அர‌சி‌‌ற்கு உ‌ள்ளதா எ‌ன்று யாரு‌ம் ச‌ந்தேக‌ப்பட வே‌ண்டா‌ம். பா‌கி‌‌ஸ்தா‌‌னி‌ன் க‌ட்டு‌ப்பாடான நடவடி‌க்கையை கோழை‌த்தன‌ம் எ‌ன்று‌ம் யாரு‌ம் கருத வே‌ண்டா‌ம். தேவை‌ப்ப‌ட்டா‌ல் உ‌ரிய ப‌திலடி கொடு‌க்கவு‌ம் தயா‌ர்எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புத்தாண்டு தினத்தன்று உலகின் மக்கள் தொகை 6.75 பில்லியனாக இருக்கும் என ஜெர்மனியைச் சேர்ந்த உலக மக்கள்தொகை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 2008ஆம் ஆண்டில் மட்டும் உலக மக்கள் தொகை 8.2 கோடி உயர்ந்துள்ளதாகவும், 2009 ஜனவரி முதல் தேதியன்று உலக மக்கள் தொகை 675 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 600 ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் வளரும் நாடுகளில் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும், இதற்கு கருத்தடை சாதனங்கள், மருந்துகள் கிடைக்காததே முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டுமென்றால், தேவையற்ற கர்ப்பத்தை தடுப்பதே சிறந்த வழியாக இருக்கும் எனத் தெரிவித்த உலக மக்கள்தொகை அமைப்பின் செயலர் ரெனேட், செக்ஸ் கல்வி, கருத்தடை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த கூடுதலாக செலவிட தங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் அரசு கவிழ்ப்பு செய்துள்ளதாகக் கூறும் இராணுவத் தளபதிகள் அங்கு ஊரடங்கு உத்தரவை அமல் செய்துள்ளனர்.

இதனிடையே ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவ அதிகாரிகள் நாட்டுக்குள் கூலிப்படையினரை அழைத்துவந்துள்ளதாக கினியின் முன்னாள் அரசாங்கத்துக்கு விசுவாசமான ஜெனரல்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வெளிநாட்டுப் படைகளின் ஊடுருவலுக்கு காரணமானவர்கள், அதற்கான பிரதிவிளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னாள் ஆட்சியாளரான லன்சனா கொண்டி அவர்களின் மரணத்தை அடுத்து, சில மணி நேரங்களில் அதிகாரத்தைக் கைப்பாற்றிய இராணுவ சதிப் புரட்சியின் தலைவர்கள், இரு வருட காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
இந்த இராணுவ சதிப் புரட்சியை கண்டித்துள்ள ஆப்பிரிக்க ஒன்றியம், கினி நிலைமைகள் குறித்து ஆராய அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
மூன்று வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஜிம்பாப்வேயின் பிரபலமான மனித உரிமை ஆர்வலர் இன்று ஹராரேயில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக ஜெஸ்டினா முகோகோ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வேயின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் எங்கிருக்கிறார் என்பது தமக்குத் தெரியாது என்று ஜிம்பாப்வே போலீசார் முன்பு கூறியுருந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40 பேர் காணமல்போயுள்ளதாக
எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் கூறியுள்ளது.
ஜிம்பாப்வேயில் தற்போது நிலவும் சூழலை முற்றிலும் ஏற்கமுடியாது என்று தென்னாப்பிரிக்கவின் ஆளும் கட்சியின் தலைவரான ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!
தாலிபானால் சிறை பிடித்துவைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட இடமாக கருதப்படும் ஒரு புதை குழியை பாதுகாக்க உதவுமாறு ஆப்கானிய அதிகாரிகள் நோட்டோ படையினரை கேட்டுள்ளனர்.
வடக்கு ஆப்கானிய மாகாணமான ஜாசியானில் உள்ள இந்த இடத்திலிருந்து, மனித உடல் எச்சங்களை அடையாளம் காணப்படாத ஒரு குழுவினர் அப்புறப்படுத்திவருவதாக செய்திகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் சார்பில் பேசக்கூடிய ஒருவரான ஹூமாயுன் ஹமிட்ஜடா கூறியுள்ளார்.
உடல் எச்சங்கள் அப்புறப்படுத்தப்படுவது, போர் குற்றமாக கருதக் கூடிய சாத்தியம் மிக்க ஒரு வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்கும் முயற்சியே என்று ஆப்கானிய சுயாதீன மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. 1997 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் தாலிபான் எதிர்ப்பு படையினரால், கொலை செய்யப்பட்ட தாலிபானால் பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் இந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறத
!!!!!!!!!!!!!!
.
i euro = 157.77 sl /66.98in
1 us $ = 112.55sl /47.78in
1swiis fr=104.32sl / 44.29in
1uk pound =166.07sl / 70.50in

Leave a Reply

Your email address will not be published.