‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.12.08) செய்திகள்

கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக தொடர்புகளை மேற்கொள்ளவுள்ளோம்.
எனினும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடான பேச்சுக்கள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினருக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா படை தற்போது பாரிய இழப்பினை எதிர்கொண்டு நிற்கின்றது. மாணவர்கள் அரசியல் ரீதியாகவும், பேரியல் ரீதியாகவும் இன்றைய சூழலை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
சிறிலங்கா படையினருக்கு கிளிநொச்சி இப்போது சாவுப்பொறியாக மாறுகின்றது. வருகின்ற சிங்களப் படைகள் முழுவதும் அழிக்கப்படும்போது எமது நாடு விடுதலை பெறும்.
நீண்ட தூரம் சென்று இந்த சிங்களப் படைகளை நாம் அழிக்கத்தேவையில்லை. கிளிநொச்சியில் வந்து நிற்கும் சிறிலங்கா படைகளுக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை.
இது தான் இன்றைய கள உண்மை. இதனை தமிழ் இளம் சமூகம் அரசியல் ரீதியாகவும், போரியல் ரீதியாகவும் சிந்தித்து பார்கவேண்டும்.
தமிழீழ மாணவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றினை படிப்பதோடு உலக போராட்ட வரலாறுகளையும் படித்து அதில் மாணவர்களின் பங்கு எவ்வாறு அமைந்தது என்பதனை அறிய வேண்டும்.
இப்போது அனைத்துலக ரீதியாக எமது விடுதலைப் போராட்டத்தின் நிலமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.
மாணவர்கள் ஒரே சக்தியாக விடுதலைப் போரடாட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யும் போது தான் விடுதலையை விரைவாக வென்றெடுக்க முடியும் என்றார் பா. நடேசன்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு அம்பாறை எல்லை பகுதியான 10ம் கொலனி பகுதியில் விடுதலை புலிகளின் பொறிவெடியில் சிக்கிய படைச் சிப்பாய் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று செவ்வாய்கிழமை மாலை 05 மணியளவில் 10ம் கொலனி பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் பணியில் ஈடுபட்ட படையினரே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைத்த பொறிவெடியில் சிக்கியுள்ளனர்.இந்த சிப்பாயின் கால் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியின் கீரிப் பகுதியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.பொலிஸாரினால் மன்னார் வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அடையாளம் காணப்பட்டது. வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இச்சடலம் இராமசாமி (வயது 52) எனும் குடும்பஸ்தருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது

.

சடலத்தை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதவான் .யூட்சன் பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
சிறீலங்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் அடிப்டை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சிறிலங்கா பாதுகாப்பு செயலருக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
பதவி உயர்வு வழங்கப்படும் போது சிறீலங்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 43 புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் எழுந்தமானமாகவும், பாகுபாடான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கின் பிரதிவாதிகளாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரதான எதிரியாகவும், அவருடன் படைத்தளபதிகள், காவல்துறைமா அதிபர் ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவலதுறை பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இவர்கள் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை தும்பங்கேணி பகுதியிருந்து வைத்தியசாலைக்கு சென்றவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடத்தப்பட்டவர்கள் ஐந்து பிள்ளைகளின் தந்தையான தவராசா மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஞானசேகரம் ஆகிய இருவரும் மோட்டடார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் போரதீவு விசேட அதிரடிப்டை முகாமில் தடுத்து சோதனை மேற்கொண்ட பின்னர் பக்கத்தில் இருக்கின்ற முகாமிற்கு பொருட்கள் சிலவற்றை கொடுக்குமாறு மிரட்டியுள்ளதாக அவ்வழியாக சென்ற பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள மாவிலிஆறு என்னும் இடத்தில் கடந்த 22ம் திகதி திங்கள் இரவு அன்று, மூன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் சேர்ந்து தமிழ் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் அந்த யுவதிக்கு நஞ்சு ஊட்டி கொலை செய்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் யாழ். அராலிப் பகுதியில் மூன்று சிறிலங்காச் சிப்பாய்கள் இணைந்து தம்முடன் கடமையாற்றிய பெண் சிப்பாய் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு நஞ்சூட்டி கொலை செய்திருந்ததும், அது தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியாப் பகுதியில் 2004ம் ஆண்டிற்கு பின்னர் புதிதாகக் குடியேறியவர்கள் பற்றிய விபரங்களை சிறிலங்காப் படையினர் கிராம அலுவலர்கள் ஊடாகத்திரட்டி வருகின்றனர்.
வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் படையினர் விபரங்களைத் திரட்டி வருவதானது அங்குள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது

.

எதிர்வரும் வாரமளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

.

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவர் நாடு திரும்பியவுடன் இந்த சந்திப்பு நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது

.

சர்ச்சைக்குரிய பல உயர் நீதிமன்றத் தீர்ப்புக்களைத் தொடர்ந்து ஜனாதிபதியும் பிரதம நீதியரசரும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இனப்பிரச்சினையைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்தின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. எவர் விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, தமிழீழ விடுதலைப் புலிகளை இனப்பிரச்சினை விவகாரத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் யுத்தமேயாகும். இந்நிலையில் யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக அவ்வப்போது சில அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்கின்றது. எனவே புலிகள் இயக்கத்தை தடைசெய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருப்பதையிட்டு ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் உள்ள மக்களை விடுவிக்காவிட்டால் புலிகள் இயக்கத்தை தடைசெய்யப் போவதாக நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தமை குறித்து கேட்டபோதே சிறிகாந்தா எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகவே தீர்வினைக் காணமுடியும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான கருத்தினைக் கொண்டிருக்கின்றது. எவர் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இனப்பிரச்சினையில் இருந்து ஒதுக்கிவிட முடியாது.
போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வன்னியில் உள்ள தமிழ் மக்கள் பாரிய துன்பங்களை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சுக்கள் தொடர்கின்றன. மருத்துவ வசதிகள் கிடையாது. இந்த நிலையில் மழையிலும் குளிரிலும் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தத்தை நடத்துவதாக அரசாங்கம் பாவனை காட்டுகின்றது. இதையிட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை.
புலிகளைத் தோற்கடித்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் யுத்தவெறி கொண்டு அலையும் ஓர் அரசாங்கத்தையே நாம் பார்க்கின்றோம். இந்த யுத்தத்தில் பலியாகும் தமிழ், சிங்கள இளைஞர்களைப் பற்றி அரசாங்கத்திற்கு கவலை எதுவும் கிடையாது. வன்னியில் புலிகள் வசம் எஞ்சியிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்றி புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு தான் விரும்பும் தீர்வினை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.
இதன்மூலம் இனப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்துக் கட்டிவிட முடியும் எனவும் அடுத்துவரும் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றியீட்ட முடியும் எனவும் அரசாங்கம் கணக்குப் போடுகின்றது. இந்தநிலையில் வன்னீயில் உள்ள மக்களை விடுவிக்காவிடின் புலிகள் இயக்கத்தை தடைசெய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதையிட்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.
புலிகள் இயக்கத்தை தடைசெய்வதன் மூலம் தான் விரும்பியவாறு இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அரசாங்கம் நம்பினால் தாராளமாக அதனைச் செய்யட்டும். இனப்பிரச்சினையைப் பொறுத்தமட்டில் அரசின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. புலிகளிடம் இருந்து மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றி அவர்களை ஓரங்கட்டினாலும் கூட அரசாங்கம் நினைப்பதுபபோல் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது.
இனப்பிரச்சினையினால் தான் புலிகள் உருவானார்களே தவிர புலிகள் இனப்பிரச்சினையைக் கொண்டுவரவில்லை. இந்த உண்மையை அரசாங்கம் உணர்ந்து செயற்படும் என்று நாம் எதிர்பார்க்கவும் இல்லை. அரசாங்கம் யுத்தத்தை தொடர்வதில் முழு முனைப்பாக இருக்கின்றது அதன் ஒரே நிகழ்ச்சி நிரலும் யுத்தமேயாகும். யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கம் அவ்வப்போது சில அரசியல் இராஜதந்திர அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. இதில் இப்போது கடைசியாக வந்திருப்பதுதான் புலிகளை தடை செய்வது பற்றிய எச்சரிக்கையாகும்.
அரசாங்கம் தான் விரும்பியபடி எதனையும் செய்து கொள்ளட்டும். அதன் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலும் பல தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும் துணை போகின்ற நிலையே இருக்கின்றது. இவ்வாறான தமிழ் அரசியல் வாதிகளின் ஆதரவினால்தான் அரசாங்கம் தான் நினைத்தபடி செயற்பட முடிகின்றது. என்பது மிக வேதனைக்குரிய விடயமாகும
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் அரசின் சார்பில் போட்டியிடுவதற்காக அமைச்சர்களின் பிள்ளைகளும், உறவினர்களுமே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்குவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி. எம்.பி இராமலிங்கம் சந்திரசேகரன் இதைச்தெரிவித்தார். :-
ஜே.வி.பி. மாகாணசபை முறைமையை எதிர்த்துக்கொண்டுதான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டு வருகிறது. இந்தமுறையும் அப்படித்தான்.
மாகாணசபை முறைமை இந்தியாவால் இந்நாட்டுக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது. மக்களின் பணத்தை விரயம்செய்யவே இந்த மாகாணசபை முறைமை துணைபோகிறது. இச்சபைக்கு மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதில்லை.
இச்சபையில் ஊழல்மோசடிகள் அதிகம் இடம்பெறுகின்றன. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களினதும் அமைச்சர்களினதும் பிள்ளைகள் மற்றும் உறவினர் ஆகியோரே இந்த மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
இந்த மாகாணசபைத் தேர்தலிலும் அவ்வாறே அமைச்சர்களின் பிள்ளைகளும், உறவினர்களுமே அரசின்சார்பில் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தயார்செய்யும் பயிற்சிப் பட்டறையாகவே மாகாணசபைகள் உள்ளன.
இந்தமாதிரியான மோசடிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்றால் ஊழல் மோசடிகள் அற்ற ஜேவிபியையே மக்கள் இம்முறை மாகாணசபைத் தேர்தலில் தெரிவுசெய்யவேண்டும்.
குறிப்பாக மத்திய மாகாணத்தசை் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இத்தேர்தலில் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது.
தோட்டத்தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடவேண்டும். அந்த உரிமைகளை வென்றெடுப்பதென்றால் தோட்டத் தொழிலாளர்கள் ஜேவிபியையே தேர்ந்தெடுக்க˜வண்டும்.
ஆகவே, இந்த மாகாணசபைத் தேர்தலில் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழித்துக்கட்ட மக்கள் ஜேவிபிக்கே வாக்களிக்கவேண்டும்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மரக்கறிப் பொருள்கள் ஏற்றுமதி செய்த காலம்மாறி, தற்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணச் சந்தைக்கு மரக்கறி எடுத்து வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிலோ ஆயிரம் ரூபாவை சில மரக்கறி வகைகள் எட்டியுள்ளன. இந்நிலையில் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட கத்தரிக்காய், போஞ்சி போன்றவை யாழ். மருதனார்மடம் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்ததை அவதானிக்க முடிகிறது.
கத்தரிக்காய் கிலோ 600 ரூபாவாகவும் போஞ்சி கிலோ 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அநுராதபுரம், கெப்பற்றிக்கொலாவ கெலேபெத்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரு சடலங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். கிரிமெட்டியாவையில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கற்குகை ஒன்றினுள் எரியூட்டப்பட்ட நிலையில் அச்சடலங்கள் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிராமவாசிகள் வழங்கிய தகவலை அடுத்தே பொலிஸார் அச்சடலங்களை மீட்டனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைமை அலுவலகமான ச‌த்‌தியமூ‌ர்‌‌த்‌தி பவ‌ன் த‌ா‌க்க‌ப்ப‌ட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், த‌மிழக கா‌ங்‌கிர‌‌சா‌ர் இதை பெ‌ரிது‌படு‌த்‌திவி‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் த‌ங்கபாலுவு‌ம், இள‌ங்கோவனு‌ம் ...‌தி.மு..வுட‌ன் கூ‌ட்ட‌ணி சேரவிரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர்
கி‌றி‌ஸ்தும‌‌ஸ்விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ள்ள குமரி மாவட்டம் அருமனை வ‌ந்த அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், திருமங்கலம் தொகுதியில் தி.மு..வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும் எ‌ன்று‌ம் தேர்தலில் தி.மு.. வெற்றி பெறுவது உறுதி எ‌ன்றா‌ர்

சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் திட்டமிட்ட செயல் அல்ல, அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு எ‌ன்று கூ‌றியதிருமாவளவ‌ன், இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக முதலமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன் எ‌ன்றா‌ர்

.

இ‌ந்த ச‌ம்பவ‌த்தை தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி விட்டனர் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதிருமாவளவ‌ன், தங்கபாலுவும், இளங்கோவனும் ...தி.மு.. கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கைகள்தான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மோதல் எ‌ன்றா‌ர்

.

தமிழ் ஈழம் அமைய உலக அளவில் ஆதரவு திரட்டும் மாநாடு வருகிற 26ஆ‌ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இளஞ்சிறுத்தைகள் பாசறையின் தொடக்க விழாவும் நடைபெறும் எ‌ன்றா‌ர் தொல்.திருமாவளவன்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அசா‌ம் மா‌நில‌த்‌‌தி‌ல் பழ‌ங்குடி‌யினதீ‌விரவா‌திக‌ள் ர‌யி‌ல் த‌ண்டவாள‌த்தை வெடிகு‌ண்டு வை‌த்து தக‌ர்‌த்த‌தி‌ல் அ‌தி‌ர்‌ஷ்டவசமாக அ‌ந்த வ‌ழியாக 700 பய‌ணிகளுட‌ன் செ‌ன்ற ரா‌ஜ்‌தா‌னிவிரைவு ர‌யி‌‌ல் த‌ப்‌‌பியது

.

‌தலைநக‌ர் கவுகா‌த்‌தி‌யி‌ல் இரு‌ந்து 300 ‌கி.‌மீ. தொலை‌வி‌ல் உ‌ள்ள கிழ‌க்கு க‌ர்‌‌பி அ‌ங்லோ‌ங் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ட்க‌திகிராம‌ம் அருகே ந‌ள்‌ளிரவு 1 ம‌ணியள‌வி‌ல் இ‌ந்த கு‌ண்டு வெடி‌ப்பு நட‌ந்ததாக காவ‌ல்துறை செ‌ய்‌திதொட‌ர்பாள‌ர் ஒருவ‌ர் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்

.

இ‌ந்த கு‌ண்டு வெடி‌ப்‌பு நட‌ப்பத‌ற்கு 2 ‌நி‌மிட‌ங்க‌ள் மு‌ன்ன‌தாக‌த்தா‌ன் டெ‌ல்‌லி‌யி‌‌ல் இரு‌ந்துகிழ‌க்கு அசா‌மி‌ல் உ‌ள்ள டி‌‌ன்சு‌கியா எ‌ன்ற இட‌ம் நோ‌க்‌கி சுமா‌ர் 700 பய‌ணிகளுட‌ன் வ‌ந்த ரா‌ஜ்தா‌னிவிரைவு ர‌யி‌ல் அ‌ந்த வ‌ழியாக கட‌ந்து செ‌ன்று‌ள்ளது

.

‌தீ‌‌விரவா‌திக‌ள் ‌‌ரிமோ‌ட் க‌‌ண்‌ட்ரோ‌ல் மூல‌ம் கு‌ண்டை வெடி‌க்க‌ச் செ‌ய்து‌ள்ளன‌ர். எ‌னினு‌ம் அது ச‌ரியான நேர‌த்‌தி‌ல் வெடி‌க்காததா‌ல் அ‌தி‌ர்‌ஷ்டவசமாக பெரு‌ம் உ‌யி‌ர்‌ச்சேத‌ம் த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் த‌ண்டவாள‌த்‌தி‌‌ன் ஒருநீ‌ண்ட பகு‌தி மு‌ற்‌றிலுமாக சேதமடை‌ந்தது

.

இ‌ந்த குண்டு வெடி‌ப்பு ரா‌ஜ்தா‌னி‌விரைவு ர‌யிலை இ‌ல‌க்காக வை‌த்து‌த்தா‌‌ன் நட‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது எ‌ன்று‌ம் ஆனா‌ல் கு‌ண்டு‌ வெடி‌ப்பு‌க்கு 2 ‌நி‌மிட‌‌ங்க‌ள் மு‌ன்னதாக ர‌யி‌ல் அ‌ந்த இட‌த்தை‌க் கட‌ந்து செ‌ன்று‌ள்ளது எ‌ன்று‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்

.

அசா‌மி‌ல் உ‌ள்ள தே‌‌யிலை‌த் தோ‌ட்ட‌த் தொ‌ழிலாள‌ சமுதாய‌த்து‌க்கு த‌னி தா‌ய்நாடு கே‌ட்டு போராடி வரு‌ம் அனை‌த்து ஆ‌திவா‌‌சி தே‌‌சியவிடுதலை மு‌ன்ன‌ணி (AANLA) எ‌ன்ற பழ‌ங்‌குடி‌யின இ‌ய‌க்க‌த்‌தின‌ர்தா‌ன் இ‌ந்த ச‌திவேலை‌க்கு காரண‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளன‌ர்

.

கு‌ண்டு வெடி‌ப்பு காரணமாக அ‌ந்த பகு‌தி‌யி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து பெருமள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்‌‌ப‌ட்டது. காவ‌ல்துறை‌யின‌ர்ம‌ற்று‌ம் ர‌யி‌ல்வே உயர‌திகா‌ரிக‌ள் கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து தொட‌ர்‌ந்துவிசாரணை நட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.
திட்டமிட்டபடி காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கினாலும் குளிர் காரணமாக பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனினும் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு சூடிபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தேர்தலில் 16.91 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்

.

இன்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 31 பெண்கள் உட்பட 393 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 151 வேட்பாளர்கள் சுயேச்சைகள்

.

இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் சபாநாயகர் தாரா சந்த் உள்ளிட்ட சிலர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். இதில் பரூக் அப்துல்லா ஹஸ்ராத்பல், சோனாவார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்

.

ஸ்ரீநகர், சம்பா, ஜம்மு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் மத்திய காவல்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மரு‌த்துவமனை‌யி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட செ‌ன்னை அ‌ம்பே‌த்க‌ர் அரசு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 2 பேரைமீ‌ண்டு‌ம் அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல்சி‌கி‌ச்சை‌க்கு அனும‌தி‌க்குமாறு த‌மிழக அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது

.

செ‌ன்னை அ‌ம்பே‌த்க‌ர் அரசு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல் கட‌ந்த நவ‌ம்ப‌ர் 12ஆ‌ம் தே‌தி இரு தர‌ப்பு மாணவ‌ர்களு‌க்‌‌கிடையே நட‌ந்த மோத‌லி‌ன் போது படுகாயமடை‌ந்த பார‌தி க‌ண்ண‌ன், ஆறுமுக‌ம், அ‌ய்யா‌த்துரை ஆ‌கிய 3 மாணவ‌ர்க‌ள் மரு‌த்துவமனை‌யி‌ல்சி‌‌கி‌ச்சை‌ப் பெ‌ற்று வ‌ந்தன‌ர்

.

இ‌‌ந்த ‌‌நிலை‌யி‌ல், பார‌தி க‌ண்ண‌ன், ஆறுமுக‌ம் ஆ‌கிய 2 மாணவ‌ர்க‌ள் டிச‌‌ம்ப‌ர் 10ஆ‌ம் தே‌திதிடீரென கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்

.

இ‌ந்த கைது நடவடி‌க்கையை எ‌தி‌ர்‌த்து உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது. அ‌தி‌ல் மாணவ‌ர்க‌ள் முழுவது‌ம் குணமடையாதநிலை‌யி‌ல்திடீரென கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். எனவே அவ‌ர்களைமீ‌ண்டு‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌க்க அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது

.

இ‌ந்த மனுவைவிசா‌ரி‌த்த ‌‌நீ‌திப‌தி சுகுணா, மாணவ‌ர்க‌ள் உ‌ட‌ல்நிலை கு‌றி‌த்து மறுஆ‌ய்வு செ‌ய்யநீ‌திம‌ன்ற‌த்‌தால்நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட மரு‌த்துவ‌ர்க‌ள் மா‌ர்‌த்தா‌ண்ட‌ம், ஜா‌ன் ரெ‌ஜினா‌ல்டு ஆ‌கியோ‌ர் அ‌ளி‌த்த அ‌றி‌க்கை‌யி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் மாண‌வ‌ர்களைமீ‌ண்டு‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌‌த்துசி‌‌கி‌ச்சைய‌ளி‌க்க அ‌திகா‌ரிக‌ளு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டா‌ர்

.

இர‌ண்டு மாணவ‌ர்களையு‌ம் நாளை முத‌ல் அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல்மீ‌ண்டு‌ம் அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டநீ‌திப‌தி, தொட‌ர்‌ந்து 30 நா‌ட்க‌ள் அவ‌ர்களு‌க்குசி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் சீமான், பெ‌ரியா‌ர்திரா‌விட கழக‌த் தலைவ‌ர் கொளத்தூர் மணி ஆகியோர் தங்களை பிணையில் விடுதலை செய்யு‌க் கோரி தா‌க்க‌ல் செ‌ய்தபிணைய மனுவை ஈரோடு நீதிமன்ற‌ம் த‌‌ள்ளுபடி செ‌ய்து உ‌த்தர‌வி‌ட்டது

.

இ‌ந்த மனு இ‌ன்றுவிசாரணை‌க்கு வ‌ந்தது. மனுவைவிசா‌ரி‌த்தநீ‌திப‌தி அசோக‌ன் மனுவை த‌ள்ளுபடி செ‌ய்ததோடு, ‌பிணை‌யி‌ல்விடுதலை‌ச் செ‌ய்ய‌க் கோ‌ரி ஈரோடு கூடுத‌ல்நீ‌திம‌ன்ற‌த்தை அணுகுமாறு‌ம் கூ‌றினா‌ர்

.

மு‌ன்னதாக, வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்தவ‌ர்க‌ள் சா‌ர்‌பி‌ல் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் வா‌திடுகை‌யி‌ல், இவ‌ர்க‌ள் இருவ‌ர்மீது‌ம் இதே போ‌ன்ற வழ‌க்கு ஏ‌ற்கனவே ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது எ‌ன்று‌ம் தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் இதே கு‌ற்ற‌த்‌தி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று‌ம் கூ‌றி இருவரையு‌ம்பிணை‌யி‌ல்விடுதலை செ‌ய்வத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்

.

சீமான், கொளத்தூர் மணி ஆகிய இருவரையும் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
!!!!!!!!!!!!!!
மும்பை தாக்குதல்கள் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளலாம் என்ற கருத்துக்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.
யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஆனால் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாதக் கட்டமைப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தற்போதைய பிரச்சனை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சக்திகள்தான் மும்பை தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள இந்திய பிரதமர், இவைகள் தொடர்பில் பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், மும்பை தாக்குதல் குறித்து தமது அமைப்பிடம் எந்த ஆதாரங்களையும் இந்தியா கொடுக்கவில்லை என்று கூறியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் போலீசார் கூறியுள்ளனர்.
இவர்கள் ஜம்மூ நகரில் தற்கொலை தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் இராணுவச் சிப்பாய் என்றும், ஏனையவர்கள் ஜெயிஷ் மொஹ்மத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சியை ஜெயிஷ் மொஹ்மத் அமைப்பு ஆயுதம் ஏந்தி எதிர்த்து வருகிறது.
இந்தியா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து பாக்கிஸ்தான் இராணுவம் உடனடியாக கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலின் போலீஸ் காவல் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அஜ்மல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை

.

கடந்த மாதம் 26ஆம் தேதி மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 பேரில், அஜ்மல் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவனிடம் தொடர்ந்து போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவனது போலீஸ் காவலை வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அப்போது, வழக்கில் தனக்கு சட்டப்பூர்வமாக உதவி செய்ய பாகிஸ்தானில் இருந்து வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும், இந்திய வழக்கறிஞர் தனக்காக வாதாடுவதைத் தான் விரும்பவில்லை என்றும் நீதிபதியிடம் அஜ்மல் கேட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அஜ்மலின் பாதுகாப்பு கருதி, விசாரணைக்காக அவன் நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து இந்த முறையும் விலக்களிக்கப்பட்டது. அஜ்மலிடம் தொடர்ந்து போலீசார் நடத்திவரும் விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது

.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்பமொய்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அண்மைக்காலமாக, தமிழகத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புவதாகவும், அப்படி இல்லையென்றால், திமுகவுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்றும் மொய்லி கூறினார். அத்துடன், தமிழக அரசுக்கு அளித்துவரும் ஆதரவும் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் எச்சரித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மத்திய அமைச்சர் அந்துலே விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால், காலவரையின்றி இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்துலே விவகாரம் தொடர்பாக கடும் கூச்சல், குழப்பம் நேற்றும் தொடர்ந்தது. இதனையடுத்து இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் துவங்கும் என்று கூறினார். குறுகிய நாட்களே நடைபெறும் அந்த கூட்டத்தொடரில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!.
 world

விலை குறைந்த இயற்கை எரிவாயு கிடைத்துவந்த காலம் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் அவர்கள் எச்சரித்துள்ளார்.
மாஸ்கோவில் நடந்த இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டத்தில் பேசிய புடின் அவர்கள், புதிய எரிவாயு வயல்களை உருவாக்குவதற்கான நிதிச்செலவுகள் வேகமாக அதிகரித்துவருவதாக தெரிவித்தார்.
இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, எரிவாயு ஏற்றுமதி செய்யும் இரான், வெனிசுலா மற்றும் லிபியா போன்ற நாடுகளுடன் மேலதிக ஒத்துழைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகள் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முயன்றுவருவதாகவும், இந்த புதிய அமைப்பு எரிவாயு விலைகளை நிர்ணயிக்கும் என்றும் சமிக்ஞைகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், உடனடியாகப் பார்க்கும் போது எரிவாயு விலைகள் குறையும் என்று மாஸ்கோவிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பொதுவாக பெட்ரோலின் விலையை ஒட்டியே எரிவாயுவின் விலையும் அமையும் என்று கூறும் அவர், கடந்த சில மாதங்களாக பெட்ரோலின் விலை குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏற்கனவே இறங்குமுகத்தில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரம், மேலும் சுருங்கியுள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுப் பகுதியில் அமெரிக்க பொருளாதாரம் அரைச் சதம் குறைந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளிவிபரங்கள் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த 7 ஆண்டுகளில் சந்தித்த மிகப் பெரிய தொய்வை காட்டுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரிட்டனின் பொருளாதாரமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக அரைச் சதத்துக்கு சற்று கூடுதலாக சுருங்கியுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிரான பிரச்சார நடவடிக்கை ஒன்று அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த பிரச்சார நடவடிக்கைகளில் சவுதி சமூகம் தவறாக காண்பிக்கப்படுவதாக அதன் விமர்சகர்கள் கூறுகின்ற போதிலும், அதில் காண்பிக்கப்படுவது போன்ற வன்முறைகள் வளைகுடாப் பிராந்தியத்தில் வழமையானவை என்று கூறுகின்ற உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண்பதற்கு அங்கு துஷ்பிரயோகமே முதல் நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள
வீட்டுப்பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பிரசுரிக்கப்படும் பத்திரிகை விளம்பரங்களில் ஒரு வீட்டுப்பணிப்பெண் கழுத்தில் நாய்ப்பட்டியுடன், நாய்க்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்றும், ஆடம்பரக் கார்களின் வெளிநாட்டு ஓட்டுனர் ஒருவரைக் குதிரை போன்று காண்பித்து அவரது கடிவாளத்தை ஒரு சவுதி அரேபியப் பெண் கையில் பிடித்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இந்தப் பிரச்சாரங்கள் சவுதிக்காரர்களை இதயமற்றவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் காண்பிப்பதாகக் கூறி, இவற்றை நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சிலரும், விமர்சகர்கள் சிலரும் கோருகிறார்கள்.
ஆனால், வெளிநாட்டுப் பணியாளர்களை, குறிப்பாக வீட்டுப்பணிப்பெண்களை நடத்தும் விதம் குறித்து மனித உரிமைக் குழுக்கள் நீண்ட நாட்களாகவே வளைகுடா சமூகத்தை விமர்சித்து வருகின்றன.
இந்தப் பிரச்சாரங்களை நடத்தும் சவுதி நிறுவனத்தின், இயக்குனரான குஸ்வரா அல் கதீப் அவர்கள் இந்த பிரச்சார நடவடிக்கைகள் சரிதான் என்கிறார்.
சவுதிக்காரர்களால், வெளிநாட்டு பணியாளர்கள் எந்த அளவுக்கு தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பதை தான் தனது கண்ணால் நேரடியாகவே பார்த்ததாக அவர் ஒரு பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
அத்துடன் இந்தப் பிரச்சார நடவடிக்கையின் நோக்கம் சவுதி சமூகத்தை தனிமைப்படுத்துவது அல்ல என்றும், வளைகுடாவிலும், அரபுலகிலும் உள்ள இது குறித்த பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுவதே அதன் நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
sports

டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் டிரா செய்து தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது. .

இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியா தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது

.

எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் தென்னாப்பிரிக்கா 2-0 அல்லது 2-1 என வெற்றி பெற்றாலோ அல்லது 1-1 என டிரா செய்தாலோ மீண்டும் 2-வது இடத்தை பிடிக்கும்

.

அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 3-0 என வீழ்த்தினால் முதலிடத்திற்கு முன்னேறி விடும்.
ஆஸ்திரேலிய அணி கடைசி இரண்டு டெஸ்ட்களில் வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வதோடு தென்னாப்பிரிக்காவை மேலும் பின்னுக்கு தள்ளிவிடும்

.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.1 euro= 157.53sl / 68.28in
1 us $=112.75sl/48.87in
1swissfr=103.82sl/45.05in
1 uk pound=166.74sl/ 72.35in

 

 

Leave a Reply

Your email address will not be published.