‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.12.08) செய்திகள்

 இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்:
வடபோர்முனையில் அனைத்து நிலைகளிலும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு வருகின்றனர். இறுதித் தோல்வியை நெருங்கி வரும் நிலையில் போர் நிறுத்தத்துக்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆனால் வடக்குப் படை நடவடிக்கைகளைக் கைவிடும் எண்ணம் இல்லை.
தற்போது முல்லைத்தீவின் நெடுங்கேணி வீழ்ந்துவிட்ட நிலையில் எதிர்வரும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை வடக்கில் கைப்பற்றிவிடுவோம்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்கின்றனர். புலிகளுக்கு மீண்டும் அத்தகைய ஒரு வாய்ப்பை நாம் வழங்கப்போவதில்லை என்றார் சரத் பொன்சேக
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமே கிடையாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த பேசியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள், போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் பலம் பெறுகின்றனர். புலிகளை பலம் பெற வைக்கின்ற எந்த ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் எந்த ஒரு வடிவிலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இந்த நாட்டின் ஒரே எதிரி பயங்கரவாதம்தான்.
2009 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம். 2009 ஆம் ஆண்டில் புலிகளின் பயங்கரவாதத்தை முறியடிக்கும் பெருமை வாய்ந்த வெற்றியை நாங்கள் பெறுவோம் என்றார் மகிந்த.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் கீழும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் விசாரணைகளை உடனடியாகத் துரிதப்படுத்தும்படி சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லை என்றால் அவர்களை விடுதலை செய்யும்படியும் அவர் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை தமிழர்களை சிறிலங்காவின் மகிந்த அரசு இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவு தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மங்கள சமரவீர பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மத ரீதியாக மகிந்த அரசு பிளவுபடுத்தி வருகிறது என்றும் மங்கள சமரவீர கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குகளுக்கான குழுவின் தலைவராக இருந்தபோது உள்நாட்டுத் திணைக்களத்தின் மீது பாரிய விசாரணைகளை நடத்தினோம். உள்நாட்டு திணைக்கள ஆணையாளரை நீக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தோம். ஆனால் மகிந்த அமைச்சரவை அதனை ஏற்காமல் என்னை சித்திரவதை செய்தது. அதனால்தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம் என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த நாட்டின் வரலாற்றிலேயே இப்போதைய மஹிந்த அரசைப்போல் கொடுமையான அரசைத் தமிழர்கள் முன்னெப்போதும் சந்தித்ததில்லை.” – இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் கூறினார்.
மலையக அமைச்சர்கள் போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசை ஆதரிக்கும் இரட்டைவேட அரசியல் என்னிடம் கிடையாது. நாம் மலையக அமைச்சர்களை எதிர்ப்பதை விட தமிழ் மக்களை வரலாறு காணாத கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த அரசை எதிர்த்து அதை அகற்றுவதில்தான் முழு மூச்சுடன் அக்கறை காட்டுகின்றோம். இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. எமது மலையக இளைஞர், யுவதிகள் வேலையில்லாத காரணத்தால் கொழும்பில் வந்து பணிபுரிகின்ற நிலையில் இந்த அரசினால் கைது செய்யப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்.
அன்றைய அரசுகளில் மலையக அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவங்களும், ஒதுக்கீடுகளும் இன்றைய அரசால் வழங்கப்படவில்லை. எனவேதான் மலையகத்தின் பிற்போக்குத் தலைமைகளை அகற்றுவதுடன் மட்டுமல்லாமல் இந்த அரசையும் அகற்றுவதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த அரசில் இருந்தபடியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும், அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும் விமர்சிக்கின்ற மலையக அமைச்சர்களான சந்திரசேகரன், சுரேஷ் வடிவேலு, புத்திர சிகாமணி போன்றோர் இந்த அரசின் தமிழர் விரோத கொள்கைகளையும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்துகின்றார்கள்.
இவர்களில் பலர் தனிப்பட்ட காரணங்களினாலும் .தொ.காவை எதிர்க்கின்றார்கள். எமது ஜனநாயக மக்கள் முன்னணி இவர்களிலிருந்து மாறுபட்டதாகும். எவருடனும் எமக்குத் தனிப்பட்ட விரோதம் கிடையாது. பாரிய அசசுறுத்தலுக்கு மத்தியிலும் நாம் எமது கொள்கையை உறுதியுடன் முன்னெடுக்கின்றோம். இந்த அரசின் அராஜகத்தையும் .தொ.காவின் அடாவடித்தனத்தையும் எதிர்த்து மலையகத்திலும் தேசிய ரீதியாகவும் நாங்கள் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இது எங்களது நேர்மையான வரலாறு. இதைச் சொல்லிதத்தான் நாம் மக்களிடம் வாக்குக் கோருகின்றோம். எம்முடன் இணைந்துகொள்ள விரும்பும் எவரும் எமது இந்த நேர்மையான கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் விட்டுக்கொடுப்பதற்கு இடமில்லைஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
அமைச்சுர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற வீட்டு வாடகைப் பணத்தினை நிறுத்தினால், அரசு வருடாந்தம் 13 கோடி ரூபாவை மீதப்படுத்தலாம் என்று .தே.கவின் எம்.பி. பாலித ரங்கே பண்டா தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:-
இந்த நாட்டுக்கு 35 அமைச்சர்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் இங்கு 108 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தமது வீட்டு வாடகைக்காக மாதாந்தம் ஒரு லட்சம் ரூபா பெற்று வருகின்றனர். சொந்த வீடுகளை வைத் துக் கொண்டே சில அமைச்சர்கள் வீட்டு வாடகையைச் பெற்று வருகின்றனர். இதை நிறுத்தினால் அரசு 13 கோடி ரூபாவை மீதப்படுத்தலாம்.
பெற்றோல் விலையைக் குறைத்தால் யுத்தத்தை முன்னெடுக்க முடியாது என்று இந்த அரசு சொல்கிறது. இவ்வாறான செலவுகளைக் கட்டுப்படுத்தினால் பல யுத்தங்களை அரசு முன்னெடுக்கலாம்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
சிறிலங்காவுக்கு தமது நாட்டு குடிமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் ரீதியான வன்முறைகள் நடைபெற்று வருவதால் சிறிலங்கா சுற்றுலாத் தலங்களுக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலி, தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றுக்குச் செல்வதும் அபாயகரமானது என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்தவினால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அமைச்சரவை கூட்டத்தை காரணம் காட்டி இந்தக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கூட்டத்தில் தென்கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக அலகு மற்றும் மலையக மக்களுக்கு தனி நிர்வாக அலகு அமைப்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பிலிருந்து வவுனியா வரும் யாழ்தேவி ரயில் பயணிகளை மதவாச்சியில் படையினர் நீண்ட நேரம் சோதனையிடுவதால் கொழும்புக்கு யாழ்தேவி நீண்ட நேரம் தாமதித்தே திரும்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புக்கும் வவுனியாவுக்குமிடையே தற்போது பகல் நேர பயணிகள் ரயில் சேவை மட்டுமே நடைபெறுகின்றது. எனினும், கொழும்பிலிருந்து வவுனியா வரும் யாழ்தேவிப் பயணிகளை படையினர் மதவாச்சியில் வைத்தே சோதனையிடுகின்றனர்.
சுமார் 1 மணி நேரம் இந்தச் சோதனை நடைபெறுவதால் கொழும்பிலிருந்து அதிகாலை 5.45 மணியளவில் புறப்படும் யாழ்தேவி வவுனியாவுக்கு பிற்பகல் 1.30 மணிக்குப் பின்னரே வந்து சேர்கிறது.
முன்னர் இந்த ரயில் நண்பகல் 12.15 மணிக்கு வவுனியாவுக்கு வந்து அங்கிருந்து ஒரு மணிக்கு கொழும்புக்குத் திரும்பும்.
ஆனால், தற்போது மதவாச்சியில் இந்தப் பயணிகள் ரயில் சோதனைக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாவதால் வவுனியாவிலிருந்து இந்த ரயில் பிற்பகல் 2 மணி அல்லது 2.30 மணிக்கே புறப்பட்டு கொழும்பைச் சென்றடைய இரவு பத்துமணியாகிறது.
இதனால், தூர இடங்களுக்குச் செல்வோர் கொழும்பில் பத்து மணிக்குப் பின்னர் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இதையடுத்து வவுனியா வரும் யாழ்தேவிப் பயணிகளை வவுனியாவில் வைத்து சோதனைவயிடுவதன் மூலம் ரயில் வரும் நேரத்திலும் புறப்படும் நேரத்திலும் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க முடியுமென வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோர் ரயில்வே திணைக்கள உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழுபேர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் கடத்தல் மற்றும் காணாமால் போதல் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் உறுப்பினரும் பிரதியமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்களும், உறவினர்களும் கிரான்பாஸ் மக்கள் பணியகத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் மேலும், பூசாவிலுள்ள நிரபராதிகளான இளைஞர்களை விடுவித்து தருவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
அய்யாவு சாண்டேஸ்வரன், விநாயகத் தம்பி சொர்ணலிங்கம், எஸ்.ரஞ்சித் பிராங்களின், ரஞ்சித் பெர்ணான்டோ, ஞானப்பிரகாசம் ஜெயராஜ், ஜோன் அன்டனிப்பிள்ளை, சுனில்வண்ணகோபிகே, ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பயங்கரவாத தடுப்பு பொலிஸாரினால் கடந்த 25/8/2008 கைதுசெய்யப்பட்டு துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பிரிவின் 2 ஆம் ஆண்டு மாணவனான இராசையா அபிநவ் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எஸ்.சிவலிங்கராசா, பி.பரமசிவம், டி.கே. சிவலிங்கபிள்ளை, ஜே..பிரேமதாஸ், ஜே.ரசிக்கலா, டி.. சுசித்திரா, எச்.டி. ஹெலன் டயானா ஆகிய ஏழு பேரும் நேற்று விடுவிக்கப்பட்டதாகவும் பிரதியமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
நீர்கொழும்பில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த மஸ்கெலியா டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் பிரியங்கா என்ற பெண் சந்தேகத்தின் போரில் கடந்த 14/9/2008 இல் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்து தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரிடம் தந்தையான சே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்ப வெள்ளைவத்தை பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இளம் குடும்பஸ்த்தர் வியாபாரம் விடயமாக சென்ற போது இதவரையில் வீடுதிரும்பவில்லை. என அவரின் மனைவில் காவல்துறையில் முறைப்பாடுக செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் ஒழுக்கையில் வசித்துவருபவருமான 26 அகவையுடைய சின்னக்கிளி நிமலாகரன் கடந்த 16ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் சம்பந்தமாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என வெள்ளைவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 11 ஆண்டு காலமாக வெள்ளவத்தை பகுதியில் வசித்துவரும் இவர் கணனி வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றார். இதற்கு முன்னர் இணையத்தள வானொலி ஒன்றிலும் பணியாற்றியுள்ளார்.காணாமல் போனது தொடர்பாக பிரதியமைச்சர் பி.ராதாகிருஷ்ணனிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் படையினர் அடிக்கடி மக்கள் போக்குவரத்துக்களை முடக்கி வீதித் தடைகளை போடுவதானது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் தான் என யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி எஸ்.சிவராஐசிங்கம் கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வங்காலைப் பகுதியில் படையினர் மக்களை கடுமையாகத் துன்புறுத்துவதாகவும் இவர் தொரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் உள்ள படைச் சோதனைச் சாவடியில் ஆண் படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்ட பெண்படைச் சிப்பாய் ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு நஞ்சூட்டிக் கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான், பிரோத பிரிசோதனைக்காக கொழும்பிற்கு உடலை அனுப்புமாறு பணித்ததுடன், சந்தேகத்திற்குரிய படையினர் மூவரையும் கைது செய்யுமாறும் பொலிசார் உத்தரவிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வீட்டுக்கொரு பிள்ளையை போருக்கு அனுப்புமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்காவின் தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற படையினருக்h பயிற்சி நிறைவு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் முன்னொரு போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. பிள்ளையொன்றை இராணுவத்திற்கு வழங்கக் கூடிய தக்க தருணம் இது எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் மீது நச்சுவாயு மழை பெய்தாலும் அவர்களை பின்வாங்கச் செய்ய முடியாதெனவும் கூறியுள்ளார்.
படையினர் அடையும் வெற்றிகள் குறித்த மக்கள் கோசத்தின் முன்னால் கிளிநொச்சியிலிருந்து வெளிப்படும் துப்பாக்கிச் சத்தங்கள் வலுவிழந்து வருவதாகவும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா படையினர் களமுனையில் பெரும் அழிவுகளைச் சந்தித்துவரும் நிலையில், ஏராளமானோர் உயிரிழந்தும், படுகாயங்களுக்கு உள்ளாகியும் களமுனையை விட்டு அகற்றப்பட்ட நிலையில் இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
 
சென்னை அமைந்தகரையில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு அனுமதி மறுக்கும் உதவி பொலிஸ் கமிஷனரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா அவென்யூவில் வரும் டிசம்பர் 26-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு நடத்தப்பட இருந்தது.
ஆனால், இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அண்ணாநகர் உதவி பொலிஸ் கமிஷனர் டிசம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. செல்வம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதி ,,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கும் முன்பு, மாநகர பொலிஸ் சட்ட விதி பின்பற்றப்படவில்லை.
அதேபோல், இந்தப் பொதுக்கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசமாட்டோம் என்று மனுதாரர் தரப்பில் உறுதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அண்ணாநகர் உதவி பொலிஸ் கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை, அண்ணாநகர் உதவி பொலிஸ் கமிஷனர் மீண்டும் பரிசீலித்து டிசம்பர் 23-ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசமாட்டோம் என்று உறுதி அளிக்கும் மனுவை உதவி பொலிஸ் கமிஷனரிடம் மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கோவை சிறையில் இருக்கும் இயக்குனர் சீமானுக்கு ஜாமீன் கேட்டு ஈரோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தார்கள்.

கடந்த 19 ந்தேதி இரவு இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். மணியரசன் 20 ந்தேதி ஆஜர் படுத்தப்பட்டார். 3 பேரையும் வருகிற 31 ந்தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் நேற்று ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டுள்ளார்.

இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது ஜாமீன் கொடுப்பது குறித்து பொலிஸாரிடம் கருத்து கேட்கப்பட்டு, மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாளர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் விஸ்வாஸ் நேற்று சென்னையில் கூறினார்.
அவர் அங்கு இது தொடர்பாக மேலும் கூறுகையில், அடுத்த மாதம் நான் இலங்கை செல்கிறேன் அங்கு சில அமைப்புகளை சந்தித்துப் பேச உள்ளேன். கொழும்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க உள்ளேன். நேதாஜியின் சீடரான என்னை எந்த சக்தி தடுக்கிறது என்பதைப் பார்ப்போம் என்றார்.
விஸ்வாஸ் .தி.மு.. பொதுச்செயலர் வைகோவை நேற்று சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து வைகோ கூறுகையில் விஸ்வாஸ் சிறந்த பார்லிமென்ட்வாதி. .தி.மு.. கூட்டணியில் பார்வர்டு பிளாக் இடம்பெற்றுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெற கூட்டணியுடன் இணைந்து பாடுபடப் போவதாக விஸ்வாஸ் கூறினார் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெரியார் திராவிடக் கழத்தின் தலைவர் கெளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குனர் சீமான் ஆகியோரின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் சென்னையில் சீமான் அவர்களின் மகிழுந்து காங்கிரஸ் கட்சியினரால் எரியூட்டப்பட்ட முறையிலி (ரவுடி) நடவடிக்கையைக் கண்டித்தும் கருத்துரிமை, பேச்சுரிமை எதிரான தமிழர் விரோதப் போக்குக்குள்ள சிங்களக் கைக்கூலியான காங்கிரஸ் கட்சியைப் பாடையில் ஏற்றும் மாபெரும் ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை புதுவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவிகள் அளிக்க கூடாது ஆகிய முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஒன்றுபட்டு நட‌த்‌தி வரு‌ம் போராட்டங்களைசீ‌‌ர்குலை‌க்கு‌ம் வகை‌யி‌லு‌ம், அதைதிசைதிரு‌ப்பவு‌ம் த‌‌‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் கட்‌சி‌யை சே‌ர்‌ந்தசில‌ர் செய‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வேலைவாங்கித் தருவதாகப் பலரிடம் மோசடி செய்த இலங்கைப் பெண்ணை சென்னையில் பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் சர்மிளா (53 வயது). சென்னை மறைமலை அடிகள் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இங்கிருந்து கொண்டே இலங்கையைச் சேர்ந்த பலரிடம் கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா வசூலித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த குலதீபன் என்பவரை சென்னைக்கு வரவழைத்து, தாம்பரம் ஹோட்டலில் தங்கவைத்தார். குலதீபனின் கடவுச்சீட்டையும் வாங்கியுள்ளார். வேலை வாங்கித்தர குலதீபனிடம் இருந்து ரூ.6 இலட்சத்து 33 ஆயிரத்தை சர்மிளா வாங்கினார். ஆனால், 3 மாதமாகியும் வேலை வாங்கித்தரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு குலதீபனின் கடவுச்சீட்டை அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியரிடம் கொடுத்து குலதீபனிடம் கொடுத்து விடுமாறு சொல்லிவிட்டு சர்மிளா சென்றுவிட்டார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குலதீபன் பொலிஸ் ஆணையரிடம் புகார் கொடுத்தார். மத்திய குற்றப் பிரிவுப் பொலிஸார் சர்மிளாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபா 16 பவுண் நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த பெர்னாண்டோ என்பவரிடம் இருந்து 6 இலட்சம் ரூபா வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கத்தில் சர்மிளா தங்கியிருந்தபோது கடவுச்சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அஜ்மல் எழுதிய கடிதத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா ஒப்படைத்துள்ள நிலையில், அந்த கடிதம் உறுதியான் ஆதாரமாகாது என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

கைதாகி காவல்துறையினரின் விசாரணையில் உள்ள அஜ்மல் அமீர், தன்னைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு கோரி பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதரை அழைத்து புதுடெல்லியில் நேற்று ஒப்படைத்தது.

இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்க்ரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்து வரும் பாகிஸ்தான் அரசு, அஜ்மலின் கடிதத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

அஜ்மலின் கடிதம் மட்டுமே உறுதியான ஆதாரமாக முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிட்டதாக டான் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

சர்வதேச மற்றும் பாகிஸ்தான் உள்நாட்டு ஊடகங்களும் அஜ்மலின் குடியுரிமை குறித்து உறுதிப்படுத்திய நிலையிலும், மும்பை காவல்துறையினரிடம் அஜ்மலை ஒப்புக்கொண்ட போதிலும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கும் தங்கள் நாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

இதற்கிடையே உதவி கோரி அஜ்மல் எழுதிய கடிதத்திற்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு வெளியிட்டுள்ளது. அஜ்மலின் அடையாளம் குறித்து வேறு உறுதியான ஆதாரங்களை இந்தியா அளிக்க வேண்டியது அவசியம் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை தாம் சந்திக்க விரும்புவதாகவும் அஜ்மல் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஊடகங்களில் தனது மகனின் படத்தைப் பார்த்த அஜ்மலின் தந்தை கஸாப்பும் அஜ்மலின் பூர்வீகம் குறித்து உறுதிப்படுத்திய போதிலும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு மறுநிமிடமே பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டுத் தலைமையிடம் ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியை இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்துப் பேசிய கயானி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைத் தொடர்ந்து ராணுவத்தின் தயார்நிலை குறித்து விளக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாகதி நியூஸ் டெய்லிநாளிழல் செய்தியில், ராணுவத்தினர் நாட்டின் மீதான எந்தவிதத் தாக்குதலையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்ய வீரர்கள் தயாராக உள்ளதாகவும் பர்வேஸ் கயானி, அதிபர் சர்தாரியிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் விமானப்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட ஒரு சில மணி நேரத்தில் சர்தாரியைச் சந்தித்து கயானி பேசியுள்ளது, போர் பதட்டம் அதிகரித்துள்ளதை உணர்த்துவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இதற்கிடையில், டான் நியூஸ் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்ட செய்தியில் நேற்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க கூட்டுப் படைகளில் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் உடனான சந்திப்பின் போது, இந்தியா தாக்குதல் நடத்தினால் அதனை தடுக்கவும், பதிலடி கொடுக்கவும் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என தளபதி கயானி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மாலத்தீவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற முதலாவது ஜனநாயகத் தேர்தலில் மவுமூன் அப்துல் கயூமை பதவியில் இருந்து நீக்கி வெற்றிபெற்ற, முகமது அன்னி நஷீத் 3 நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ளார்.

இந்தியாமாலத்தீவு இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

மாலத்தீவில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த தேர்தலில் நீண்டகாலம் அதிபராக இருந்த கயூமை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார் நஷீத்.

பிரதமர் தவிர குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரையும் நஷீத் சந்தித்து ஆலோசனை நடத்துவார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நஷீத்திற்கு விருந்து அளித்து கவுரவிப்பார். அப்போது குடியரசுத் தலைவரையும் அவர் சந்தித்துப் பேச்சுகள் நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில், 100 மில்லியன் டாலரை இந்தியா கடனாக வழங்க உள்ளது.

மாலத்தீவு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் அதிபருடன் இந்தியா வந்துள்ளது.
:::::!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இ‌ந்‌தியா‌வி‌ன் சு‌ற்றுலா‌த் தல‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்றான கோவா‌‌வி‌ல் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ், ஆ‌ங்‌கில‌ப் பு‌த்தா‌ண்டு ‌தி‌ன‌த்த‌ன்று பய‌ங்கரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்த‌க்கூடு‌ம் எ‌ன்று உ‌ளவு‌த்துறை எ‌ச்ச‌ரி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளதை அடு‌த்து, ம‌த்‌திய‌க் கூடுத‌ல் காவ‌ல் படை‌யின‌ர் ம‌ற்று‌ம் ‌விரைவு அ‌திரடி‌ப்படை‌யின‌ர் 375 பேரை ம‌த்‌திய அரசு கோவா‌வி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்து‌ள்ளது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 world
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டோயோட்டா நிறுவனம் கடந்த 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு நஷ்டத்தை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார வீழச்சி மற்றும் ஜப்பானின் யென் நாணயயத்தின் மதிப்பு உயர்ந்தது ஆகிய காரணங்களால் டோயோட்டாவின் விற்பனை வறுமானம் வீழச்சியடைந்துள்ளது.
தனது ஒட்டு மொத்த இழப்பு 1.7 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிய ஆலையை திறப்பதை தள்ளிவைத்துள்ள டோயோட்டா நிறுவனம், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சோமாலியாவில் இருந்து இம்மாத இறுதியில் எத்தியோப்பிய துருப்புக்கள் வெளியேறிய பிறகு, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வழிவகைகள் பற்றிய அவசரப் பேச்சுவார்த்தைகளை ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமாதான மற்றும் பாதுகாப்பு கவுன்சில் நடத்திவருகிறது.
இது சம்மந்தமாக எவ்வித தெளிவான பரிந்துரைகளையும் தம்மால் வழங்கமுடியாமல் இருப்பதாக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாபாவில் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சமாதான மற்றும் கவுன்சிலின் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நைஜிரியா தனது துருப்புக்களை அனுப்பக் கூடும் என்ற தகவல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்ல
!!!!!!!!!!!!!!!!!!
உலகநாடுகளின் பொருளாதார தேக்கநிலையின் விளைவுகள், சீனாவை பாதித்து வரும் நிலையில், நாட்டில் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை புதிய இயக்கத்தை அந்நாட்டு ஆரம்பித்துள்ளது.
விபச்சாரம், சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள, குற்றக் கும்பல்கள் மீது சீன அரசின் இயக்கம் கவனம் செலுத்தும் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, குற்றங்கள் அதிகரிப்பது பற்றியும் பாதுகாப்பு படையினர் கவனம் செலத்துவார்கள்.
 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், எம்மீது போர் திணிக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா.முகம்மட் குரேஷி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா திட்டவட்டமாக ஆதாரத்துடன் கூறுகிறது.
ஆனால், இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால், இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்று உலக நாடுகள் கருதுகின்றது.
இந்த நிலையில், குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது;
நாங்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறோம். ஆனால், போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமையை நாங்கள் முழுமையாகச் செய்வோம்.
தீவிரவாதிகள் பற்றி விசாரணை நடத்த இந்தியாவுடன் ஒத்துழைக்கத் தயார். ஆனால், இந்தியா எங்களுக்கு உறுதியான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். விசாரணை தொடங்கும் முன்பே எங்கள் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல.
தீவிரவாத அமைப்புகள் மீது நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை உலக நாடுகள் பாராட்டுகின்றன. தீவிரவாதிகள் பற்றி நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கப்படும் ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். தீவிரவாதிகள் மீது குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால் எங்களது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரானியரான சிறின் எபாடியின் மனித உரிமைகள் அலுவலகத்தை அந்நாட்டுப் பொலிஸார் மூடியுள்ளனர்.
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்நிலையம் மூடப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டின் நீதித்துறை, இந்நிலையம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையம் சட்டரீதியான அங்கீகாரமின்றி ஒரு அரசியல் கட்சியைப் போல் செயற்பட்டு வந்ததாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் சட்டவிரோத தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2003 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எபாடி இந்நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருப்பதுடன் இதன் மூலம் ஈரானில் மனித உரிமைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை நிறுத்தமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டரீதியான அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி இவ் அலுவலகத்தை மூடியமை சட்டவிரோதமானது. இதற்கெதிரான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் . இதன் மூலம் எமது நடவடிக்கைகளை நிறுத்த முடியாதெனத் தெரிவித்துள்ளார்.
சோதனையிடுவதற்கான அனுமதிப்பத்திரம் எதனையும் காட்டாமல் அதிகளவான பொலிஸாரும் பாதுகாப்பு முகவர்களும் தமது அலுவலகத்துக்குள் நுழைந்ததாக இந்நிலையத்தின் பிரதித் தலைவர் நர்ஜிஸ் முகமடி தெரிவித்துள்ளார்.
ஆனால், நாம் பொலிஸ் சீருடையை அணிந்திருந்தபடியால் அனுமதிப் பத்திரத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிசெம்பர் 10 இல் கொண்டாடப்பட்ட மனித உரிமைகள் தினத்தின் 60 ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தருணத்திலேயே இவ் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற .நா. வின் கூட்டமொன்றில் சில முஸ்லிம் நாடுகளின் கடும் போக்குக்கான தலைமைத்துவத்தைக் கண்டித்து எபாடி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.