பிரான்ஸ் புளோன் மெனியில் தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

பிரான்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் புளோன் மெனி பகுதியில் வாழும் தமிழ் மக்களால் இலங்கியின் வடக்கே தமிழர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டநிகழ்வில் பொபினி மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டு உரைநிகழ்த்தியுள்ளனர்.


தமிழ்மக்களால் புலம்பெயர் நாடுகளில் நாடுதழுவியரீதியில் கவனயீர்ப்புப்போராட்டங்கள் பரவலாக நடைபெற்றுவரும் நிலையில் பிரான்சிலுள்ள ஒவ்வொரு மாநகர சபைகளிலும் இவ்வாறான கவனயீர்ப்புப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.