போக்குவரத்துத் தடையை நீக்கும் பணியில் தமிழர்புனர்வாழ்வுக்கழகம்

கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக பெய்த கனமழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியவாறு தமது அன்றாட வாழ்நாட்களைக் களிக்கவேண்டிய நிலைக்குள்தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இடையிடையே வெள்ளம் பெருக்கெடுத்து மூடிக்காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரிய வாகனங்களால் ஓரளவு பயணிக்க முடிந்தாலும் சிறியரக வாகனங்கள் மற்றும் உந்துருளிகள், ஈருளிகள் போன்றவை வீதியால் பயணிக்க முடியாது மக்கள் பல்வேறு சிரமங்களுடன் பயணிப்பதைக் காணமுடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் மாற்று வழிமுறைகளைக் கையாண்டு தனது தொண்டர்களை அந்தந்த இடங்களில் நிறுத்தி மக்கள் பயணிப்பதற் கேற்றவாறான மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உதவிகளைச் செய்துவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.