‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.12.08) செய்திகள்

 இரணைமடு குளம் வடக்கு, கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது ஸ்ரீ லங்கா விமானப்படையினர் இன்று காலை வான் தாக்குதல் நடத்தியுள்ளனர் vd ghJfhg;G mikr;R njuptpj;Js;sJ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
பரந்தன் பகுதியில் உள்ளஎல்வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போதே இம்மோதல்கள் வெடித்திருந்தன.
சில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடிகளாக உள்ளன. அங்கு விடுதலைப் புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர்.
மண் அணைகளுக்கு முன்பாக அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவை நீரால் நிரம்பியுள்ளன. செங்குத்தாக மேல் உயரும் மண் அணைகளை தாண்டுவது கடினமானது.
தொடர்ச்சியான மழை மேலதிக பாதிப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலை ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை தொடரலாம்.
மண் அணைகளை படையினர் அண்மிக்கும் வரை காத்திருக்கும் விடுதலைப் புலிகள் பின்னர் கனரக துப்பாக்கிகளை கொண்டு அவர்களை தாக்கி அழிக்கின்றனர்.
இந்நடவடிக்கைகளில் படையினரின் பல குழுக்கள் அழிவை சந்தித்துள்ளன. பரந்தன் மற்றும் நீவில் பகுதிகள் பரந்த வெளிகளை கொண்டது. எனவே அங்கு நகர்வது கடினமானது.
நாளாந்தம் இந்த மண் அணைகளை கைப்பற்றும் முயற்சியாக படைத்தரப்பு 10-15 தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. வான்படையும் நாளாந்தம் 10-15 வரையிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, விடுதலைப் புலிகள் எவ்வாறு பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான விடை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்ச்சியாக ஆயுத விநியோகங்களை பெற்று வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற வேளை அந்த கப்பலில் இருந்த கணிசமான ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டு விட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதேவேளை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நடைபெற்ற இரு நாள் மோதல்களில் கொல்லப்பட்ட 400 படையினரின் உடலங்கள் பொரளையில் உள்ள ஜெயரட்ன மலர்ச்சாலைக்கு கடந்த வியாழக்கிழமை (18.12.08) கொண்டு வரப்பட்டதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி பாதுகாப்பு இணையத்தளம் xd;W தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் அறிவிக்கக்கூடும் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுக்கும் செய்தியில்,விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அவர் கோருவார் அல்லது தடையை எதிர்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுப்பார் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகள் மீது தடைகளை விதிக்க வேண்டுமா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தற்போதைய சட்டங்கள் போதுமானவையா என்பது குறித்து அரசுக்குள் கடும் விவாதமொன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி தலதா மாளிகையின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 1998 இல் விதிக்கப்படட தடை செப்டெம்பர் 2002 இல் நீக்கப்பட்டது.
தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சுகளில் ஈடுபட முடியாது என விடுதலைப் புலிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இத்தடை நீக்கப்பட்டது.
மீண்டும் தடைகளை விதிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கும் கடுமையான செய்தியைச் சொல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார்.
விடுதலைப் புலிகளைத் தடை செய்யாமலே அரசு இதுவரை போரை முன்னெடுத்தது. இராணுவ நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதன் காரணமாக தற்போது அரசுக்குத் தனது அணுகுமுறைகளை மேலும் சரி செய்யவும் புதிய விடயங்களைச் சேர்க்கவும சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கிளிநொச்சி எப்போது கைப்பற்றப்படும் என்பது குறித்து உறுதியாக எவரும் எதனையும் தெரிவிக்காதபோதிலும் அரசியல் வட்டாரங்கள் மூன்று மாதங்கள் எனத் தெரிவிக்கின்றன. யுத்த முனையில் கிடைக்கும் வெற்றிகளை அடிப்படையாக வைத்தே அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்போம் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி விடுதலைப் புலிகள் மீதான தடையை விதித்ததும் புதுடில்லிக்கும் இதன் மூலம் வெளிப்படையான செய்தியொன்றைச் சொல்வார் என அரச வட்டாரங்கள் குறிப்பிட்டுளளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது காயமடையும் துருப்பினரை உரிய முறையில் பாதுகாக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோதல்களின் போது காயமடையும் படைவீரர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதியளவு போக்குவரத்து வசதிகள் குறிப்பாக விமானம் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமது சொந்த வியாபாரங்களை விருத்தி செய்வதில் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்படும் பணத்தைவிட அதிகளவு பணம் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருட்களுக்கான விலையேற்றம் என பல்வேறு வகையிலும் பொதுமக்கள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பயங்கரவாத ஒழிப்பு, தேசப்பற்று என வீர ஆவேசமாக மேடைகளில் உரையாற்றிவரும் ஆளும் கட்சி அமைச்சர்கள் யுத்தத்திற்காக எவ்விதமான அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கும் மின்சார சபை தொழிற்சங்கம் அதற்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.
இன்று நண்பகல் 12 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மின்சாரசபை தலைமைக்காரியாலயத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கடந்த 10 வருடங்களாக எமது போனஸ் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் எமக்கு வழங்கப்பட்டுவரும் 5 ஆயிரம் ரூபா போனஸை தமக்கு வழங்காமல் இடைநிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. அரசின் இந்தச் செயற்பாட்டுக்கு நாம் எமது பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் திங்கட்கிழமை நண்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் நாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
மாத்தளை, கலேவெல பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது நேற்றுக்காலை இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது என்று .தே.கவின் மாத்தளை மாவட்ட எம்.பி. ரஞ்சித் அலுவிகார தெரிவித்தார்.
குறித்த இடத்திற்கு இலக்குத்தகடு இல்லாத மூன்று வான்களில் வந்து இறங்கிய கும்பல் அலுவலகத்தின் பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கியது என்றும்அச்சமயத்தில் அருகில் பொலிஸ் ஜீப் ஒன்று நின்ற˜பாதிலும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்ரஞ்சித் அலுவிகார தெரிவித்தார்.
இச்சம்பவத்தைக் கண்ணால் பார்த்த எவரும் பயம் காரணமாக சாட்சியமளிக்க முன்வரமறுக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கும், பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி யாழ்.தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் நேற்றுப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
நேற்றுக்காலை 9.45 மணியளவில் கைதடிச் சந்தியில் இருந்து மக்கள் சாவகச்சேரி சந்தைவரை பேரணியாகச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் ஒருமணிக்கு முடிவுற்றது.
இந்தப் பேரணியில் சுமார் 5 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர்.
ஈழப்போரை நிறுத்த வேண்டும் என்றும் சிலர் கோஷமிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை வடமராட்சி பருத்தித்துறை சிவன்கோவிலடிப்பகுதியிலிருந்து மந்திகை .பி.டி.பி.அலுவலகம் வரை இன்னொரு பேரணியும் நடத்தப்பட்டுள்ளது.
அங்குதேவையில்லை யுத்தம்” “தேவையெல்லாம் சமாதானம்
வன்னியில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டும்ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு சில நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியில் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேரணியில் கலந்துகொள்ளாதவர்கள் நாளை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்று கூறப்படும் 21 பேரைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியே இவர்கள் இப்படங்களில் நடித்துள்ளனர் என்றும் உள்ளூர் இணையத்தளங்கள், கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றில் இப்படங்கள் உலாவருகின்றன என்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
இப்படங்கள் சீடிக்களில் பதிவு செய்யப்பட்டு சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகின்றன என்றும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமிழ் வைத்தியர்களுக்கு சிங்களப் புலி என்ற பெயர் குறிப்பிட்டு கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்கள்.
சிங்கள வைத்தியர் கொல்லப்பட்டால் நீயும் கொலை செய்யப்படுவாய்சிங்களப்புலி என்ற வாசகங்கள் கையெழுத்தில் பொறிக்கப்பட்டு இந்த வைத்தியர்களின் வீட்டு முகவரிகளுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கடித உறையில் இடப்பட்ட இந்த எச்சரிக்கை மிரட்டல் கடிதங்கள் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு தபாலகத்தில் இடப்பட்டதற்கு அடையாளமாக அந்த அலுவலக முத்திரை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய நிபுணர் ஒருவருக்கு இந்தக் கடிதம் முதலில் கடந்த வாரம் வந்ததாகவும், இது குறித்து அவர் உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு அவருக்குப் பொலிஸ் காவல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து தமிழ் வைத்தியர்களுக்கும் இவ்வாறான கடிதங்கள் தபால் மூலமாக வந்து கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து பொலிஸாரிடம் இது பற்றி முறையிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
கோயம்முத்தூரிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் அலுவலகம் மீது இனந் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலினால் யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன.
கோயமுத்தூர் எல்..சி.ரோட்டில் .ரி.ரி.கொலணியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அலுவலகமே வெள்ளிக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளாகியது.
மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இந்த அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தின் யன்னல்கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோட் பொலிஸ் நிலையத்தில் முறையிடச்சென்றபோது அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இனவெறிப் படுகொலைக்குள்ளாகும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசனை விடுதலை செய்யக் கோரி பெ.தி.., கு.பா.., தமிழ் தேச பொதுவுடைமை கட்சி, ..வி..மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்தனர்.
ஈழத் தமிழனை ஆதரித்து பேசினால் சிறை என்றால் சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் இந்திய அரசை எந்த சிறையில் அடைப்பது என்றும், அரசியலுக்காக இரட்டை வேடம் போடும் காங்கிரஸை தமிழ் மண்ணை விட்டு அடித்து விரட்டுவோம், தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் செய்வோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கமிட்டனர்.குழந்தைகளும் பெண்களும் திரளாக பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சரியில்லை என்று மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் .வி.கே.எஸ்.இளங்கோவன் குறை கூறியுள்ளார்.

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மாநிலத்தில் சட்டம்ஒழுங்கைக் காப்பாற்றுவது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டி வரும் என்று கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது, கட்டபஞ்சாயத்து, வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்தப் போன்றவற்றுக்காக கட்சி நடத்திவரும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மதுரையில் பத்திரிக்கையாளர்களை கொலை செய்த போதும், சென்னையில் சட்டகல்லுõரி மாணவர்கள் மோதிய போதும் காவல்துறைனர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் போலவே, சென்னையில் சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டபோதும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தததாக இளங்கோவன் குறைகூறினார்.

அஇஅதிமுக ஆட்சியில் விடுதலைப்புலிகளை ஆதரித்து யாரும் பேசமுடியாது. விடுதலைப் புலிகள் விஷயத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சியோடு ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதை தாம் பலமுறை கூறியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவருவதை போர் என்று கூறுவது தவறு. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியது போல் இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறைகூடிய ஈவிகேஎஸ். இளங்கோவன், தேவைப்பட்டால் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 ஈரோட்டில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தை இறந்து விட்டதாக வதந்தியை பரப்பிய 2 பேரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

ஈரோட்டில் உள்ள ஒரு முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கிக் கொண்டிருந்த போது, சூளை பகுதியில் சொட்டுமருந்து கொடுத்த இரண்டு குழந்தைகள் இறந்து விட்டதாக 2 பேர் பொய்யான தகவலை தெரிவித்தனர்.

இதனால் அந்த முகாமில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் சண்முகம், பொய்யான தகவலைக் கூறிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சித்த அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களின் பெயர் உதயகுமார் (45), அவரின் நண்பர் லோகநாதன் (44) என்றும் தெரிய வந்தது. உதயகுமார் அஇஅதிமுக சுமை தூக்குவோர் சங்க தலைவராவார்.

அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 இந்தியாவின் மும்பையில் கடந்த மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான இரு நட்சத்திர விடுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் முழுதாக திறக்கப்படவில்லை.
தீ மற்றும் வெடிகுண்டுகளால் விடுதியின் ஒரு சில பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்து இருந்தாலும், விருந்தினர்களை வரவேற்கும் அளவுக்கு சீர் செய்யப்பட்டு தாஜ் மகால் மற்றும் ட்ரைடன்ட் ஒபராய் ஆகிய இரு விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
விடுதி திறக்கப்பட்டவுடன், உணவு விடுதி மற்றும் வரவேற்பு அறை மக்களால் நிரம்பி காணப்பட்டதாக ட்ரைடனட் விடுதியின் மேலாளர் தெரிவித்தார்.
மீண்டும் திறக்கப்படும் விழாவுக்கு சுமார் ஆயிரம் விருந்தினர்களை தாஜ் மகால் விடுதி வரவேற்று இருந்தத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 world
வரும் 2009ஆம் ஆண்டு உலகப் பொருளாதரத்தைப் பொறூத்தவரை நிஜமாகவே மிக மோசமான ஒரு ஆண்டாக அமையும் என்று சர்வதேச நிதியமான .எம்.எஃப்.-ன் தலைவர் தொமினீக் ஸ்திராஸ் கான் கூறியுள்ளார். வளர்ச்சியை தூண்டிவிடும் விதமாக அரசாங்கங்கள் நிறைய செலவுத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி டாலர்கள் தேவை என்று பிபிசியிடம் தெரிவித்த அவர், இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இந்தத் தொகைக்கு குறைவாகவே இருக்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.
நாடுகள் வாங்கும் கடன்களின் அளவு அதிகரிக்கிறது என்பது ஒரு மோசமான விஷயம்தான் ஆனால் பொருளாதாரம் மந்தமடைவது என்பது அதனினும் பெரிய பிரச்சினை ஆகவே செலவுகளை அதிகரித்து பொருளாதாரத்திற்கு ஊக்கம் தர அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார் .எம்.எஃப்.-ன் தலைவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஆள் அரவமற்ற பகுதியில் லார்ட் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி கிளர்ச்சி குழுவின் எழுபது சதவித முகாம்களை தாங்கள் அழித்து விட்டதாக உகாண்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, உகாண்டா, தெற்கு சுடான் மற்றும் காங்கோலிய படைகள் இந்த தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்து இருந்தன.
ஆனால் முந்தைய காலங்களில் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் தப்பியுள்ளதால், இந்த நடவடிக்கையின் வெற்றி குறித்து உறுதியாக கூறமுடியவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 sports
மொஹாலியில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாளான இன்று இங்கிலாந்து rfy tpf;Nfl;Uf;fisAk; ,oe;J 302 xl;lq;fis vLj;Js;sJ. vyNt KjyhtJ ,dpq;rpy; ,e;jpah rfy tpf;nfl;Lf;fisAk; ; ,oe;J 453 xl;lq;fis vLj;jJ Neah;fs; mwpe;jNj. kPz;Lk; 2 tJ ,dpq;ir Muk;fpj;j ,e;jpah 2 over fspy; 9 Xl;lq;fisvLj;Js;sJ
 
1 euro =156.70sl/ 66.35in
1 us $ =112sl/47.43 in
1 swiss fr =101.85 sl / 43.13in
1 uk pound =166.98/70.73in
 

Leave a Reply

Your email address will not be published.