புலிகளின் அதிரடித் தாக்குதலில் 40 படையினர் பலி; 7 சடலங்கள் மீட்பு; படையினர் 2 கிலோமீற்றர் விரட்டியடிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி- இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 40 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி   மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்..

இத்தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளதுடன், இத்தாக்குதலின்போது 40 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உயிரிழந்த படையினரின் 7 சடலங்களை மீட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பாராத அதிரடித் தாக்குதலினால் சிறிலங்கா படையினர் கடந்த சில வாரங்களாக பாரிய இழப்புக்களுடன் கைப்பற்றியிருந்த 2 கிலோ மீற்றர் நீளமான அரண் பகுதியை கைவிட்டு பின்வாங்கி ஓடினர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.