‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (20.12.08) செய்திகள்

முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வாடிகள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு கரையோரப் பகுதி மீது இன்று சனிக்கிழமை காலை 5:00 மணிக்கும் பின்னர் 5:35 நிமிடத்துக்குமாக இரு தடவைகள் வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி குண்டுத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் கரையோரப் பகுதி மீன் வாடிகள் இரண்டும் படகுகள் இரண்டும் எரிந்து நாசமாகியுள்ளன. சங்கர் மற்றும் சுதர்சன் ஆகியோரின் மீன் வாடிகளே தாக்குதலுக்கு இலக்காகி எரிந்து நாசமாகின.
பொதுமக்களின் வீடுகள் இரண்டும் சேதமாகியுள்ளன. யோகநாதன் மற்றும் கமலேந்திரன் ஆகியோரின் வீடுகளே தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்தன.
இதேவேளை, மீண்டும் இன்று காலை 7:15 நிமிடத்துக்கும் காலை 8:00 மணிக்குமாக இரு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்ல
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் வடகிழக்கு கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றை இலங்கை கடற்படை மூழ்கடித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. .

இன்று அதிகாலை 2.00 மணி அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இலங்கையின் வடகிழக்கு கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கப்பலைக் கண்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.அந்த கப்பலில் இருப்பவர்கள் தங்களை யார் என்று அடையாளப் படுத்திக் கொள்ளுமாறு கடற்படையினர் கேட்டுள்ளனர்.உடனே புலிகளின் கப்பலில் இருந்தவர்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடற்படையினரும் தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக உதய நாணயக்காரா கூறினார். இந்த தாக்குதலின் போது விடுதலைப்புலிகளுக்கு உதவ வந்த மேலும் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.எனினும் ராணுவத்தின் இந்த தகவல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் நான்கு பாடசாலைகளில் தங்கவைக்கப்படடுள்ளனர். வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இராமநாதபுரம்குளம் வான்பாய்கிறது. அந்த வெள்ளத்தில் அள்ளுண்டு சின்னத்தம்பி பேரம்பலம் என்பவர் உயிரிழந்தார். நேற்று மதியம் ஓரளவு மேகம் வெளிப்பாகக் காணப்பட்டது என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அக்குடும்பங்கள் பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சம் புகுந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படைத்தரப்பு இந்த வாரம் சந்தித்த பாரிய இழப்புக்களை தொடர்ந்து படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பாக பாதுகாப்புச் சபை கூடி ஆராய்ந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இந்த வார தொடக்கத்தில் கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகள் உட்பட பல களமுனைகளில் இராணுவம் சம நேரத்தில் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பு அதிக இழப்புக்களை சந்தித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் கடந்த புதன்கிழமை அவசரமாக பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது.
முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்குபற்றிய இந்த மாநாட்டில் களமுனைகளில் படையினரின் இழப்புக்களை குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பாக மிகவும் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
அதனை மேற்கொள்வதற்கு இராணுவ நடவடிக்கைகளின் இணைந்த நடவடிக்கை அவசியம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்து , உரிய நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக .நா. தலைமையிலான அவதானிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு ஒன்று அங்கு செல்வதற்கு இலங்கை அரசு அனுமதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இப்படி இலங்கை அரசை பிரிட்டன் தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் இராஜாங்க, வெளிவிவகார மற்றும் பொதுநலவமைப்பு அலுவலக அமைச்சர் பில் றம்மெல் நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்காமல் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முனைவது இலங்கையின் இன நெருக்கடிக்கு அடிப்படையாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவாது என பிரிட்டன் தெரி வித்துள்ளது. அத்துடன் இத்தகைய நிலைமை வடக்கு மக்களின் மனங்களை வென்றெடுக்க அரசுக்கு உதவாது எனக் குறிப்பிட்டுள்ள பிரிட்டன், இலங்கை அரசு பின்பற்றும் வழிமுறைகள் குறித்து ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
அரசு பெற்றோல் விலையை உடன் குறைக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் செல்லப்போவதாக .தே.கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாாற்றிய .தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:-
பெற்றோல் விலையைக் குறைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு உடன் நடைமுறைப்படுத்தவேண்டும். நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்தீர்ப்பை மீறுவதற்கு ஜனாதிபதி முயல்கின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் அரசு இடம்கொடுக்க மறுக்கிறது.
.தே.. தேசத்துரோகக் கட்சி என்று அரசு இவ்வளவு காலமும் கூறிவந்தது. பெற்றோலின் விலையைக் குறைக்க மறுப்புத் தெரிவித்ததன் மூலம் அரசுதான் உண்மையான தேசத்துரோகியாக மாறிவிட்டது. எமது முயற்சியின் பலனாக நீதிமன்றத்தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அரசு உடன் பெற்றோல் விலையைக் குறைக்காவிட்டால் நாம் மீண்டும் நீதிமன்றம் செல்வோம். மக்களும் செல்வார்கள்.
பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. இது சிறுபிள்ளைத்தனமான முடிவு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான சிறுபிள்ளைத்தனமான முடிவை எடுக்கமாட்டார் என்று நாம் நம்புகின்றோம்என்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களும் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க அணி திரள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி வெகுவிரைவில் கைப்பற்றப்படும் எனவும், அதன் பின்னர் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இந்தியாவிலிருந்து வெளியாகும் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு செவ்வியளித்துள்ளார். நாள் தோறும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் அத்து மீறி பிரவேசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கரையோரப் பகுதிகளில் பல்வேறு கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இதன் மூலம் வலுப்படக் கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் விரைவில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மரக்கறிவகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.. யாழ். மரக்கறிச்சந்தைகள் வெறிச்சோடிக்காணப்படுவதாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் மற்றும் பச்சைமிளகாய் என்பன தலா ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வடபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று முட்டை ஒன்று 27 ரூபாவாகவும் கோழி இறைச்சி 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வரும் அதேவேளை சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ சீனி தனியார் கடையிலே 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 5 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்கு 1கிலோ சீனி 86 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!
india
புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினர் எனக் கூறி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து நேற்று தமிழ் உணர்வாளர்கள் பொங்கியெழுந்து போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது பொலிஸ் ஜீப் உட்பட பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதேவேளை, இவர்களின் கைதுக்கு .தி.மு.. பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீமான், கொளத்தூர் மணி ஆகிய இருவரும் ஈரோட்டில் உள்ள மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் விளக்கிய பொலிஸார், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505, சட்டத்திற்கு எதிரான செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 13 (1) பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்தனர்.
அதைப் பதிவு செய்த நீதிபதி, இது தொடர்பான விவரங்களை சீமான் மற்றும் கொளத்தூர் மணியிடம் தெரிவித்தார். தொடர்ந்து இருவரையும் இம்மாதம் 31 ஆம் நாள் வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின் இருவரும் கோவை சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து சீமானும், கொளத்தூர் மணியும் வெளியே அழைத்துவரப்பட்ட போது பொலிஸாரைக் கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது பொலிஸாரின் ஜீப், தனியார் கார் உட்பட பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட மணியரசன் இன்று காலை ஈரோடு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுகிறார் எனத் தெரிகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை திரைப்பட இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது டைரக்டர் சீமான் கூறியதாவது,

இலங்கையில் தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை. ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க குரல் கொடுத்த எங்களை கைது செய்து இருக்கிறார்கள் என்றார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினீர்களா? என்று கேட்டதற்கு, ‘இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும் பேசவில்லைஎன்றார்.

கொளத்தூர் மணி கூறும்போது, ‘பேச்சு உரிமை எல்லாருக்கும் உண்டு. விடுதலைப்புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை இருப்பது போல, அவர்களை ஆதரிக்க எங்களுக்கும் உரிமை உண்டுஎன்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக New;Wவெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக உறுப்பினர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது காங்கிரசு கட்சியின் வரலாற்றினையும் காங்கிரசு கட்சியானது ஆங்கிலேய பெண்மணி ஒருவரால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபட கூறியும், காங்கிரசு கட்சியின் போலி தேசப்பற்றினையும் தமிழின விரோதப்போக்கையும், ஈழத்தில் அமைதி திரும்ப பிரணாப் முகர்ஜியினை விரைவில் அனுப்புவோம் என்று கூறிக்கொண்டு ஈழத்தில் தமிழர்களை அழிக்க சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை சொல்ல இந்திய இராணுவ உயரதிகாரிகளை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பியதைக் கண்டித்தும், காங்கிரசை திருப்திப்படுத்த தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியைக் கண்டித்தும் தெளிவுபட தனது கண்டன உரையினை பதிவு செய்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவில் பிரேரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று கூறி மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை (அம்னெஸ்டி) விமர்சித்துள்ளது.
பயங்கரவாத சந்தேகநபர்களுக்கு பிணை வழங்காமல் ஆறு மாத காலங்கள் வரையில் அடுத்துவைப்பதை புதிய விதிமுறை அனுமதிப்பதோடு பொலிசாருக்கு சோதனை நடத்துவதற்கு கூடுதல் அதிகாரங்களையும் புதிய சட்டம் வழங்கும்.
இந்திய நாடாளுமன்ற அவையில் இந்தப் புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இச்சட்டம் அமலுக்கு வரும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும், அங்கு போர்நிறுத்தம் ஏற்படவும் உதவக் கோரி, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பா...வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஆர்ஜேடி கட்சித் தலைவரான சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், லோக்ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், பகுஜன் சமாஜ கட்சி மற்றும் சிவசேனைக் கட்சிகளின் பிரதிநிதிகளை பாமக எம்.பி.க்கள் சந்தித்தனர்.
!!!!!!!!!!!!!!
த‌மி‌ழ்திரை‌ப்பட இயக்குநர் சீமா‌ன் கைது‌க்கு‌ம் அவரது காரை எ‌ரி‌த்த கா‌ங்‌கிர‌‌ஸ்கா‌ர‌ர்களு‌க்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ம‌.‌தி.மு.. பொது‌ச் செயல‌ர் வைகோ, வன்முறைகள் மூலம் ஈழ ஆதரவு குரலை காங்கிரஸ் ஒடுக்கிவிட முடியாது என்று‌ம் அது மேலு‌ம்வீறுகொ‌ண்டு எழு‌ம் எ‌ன்று எ‌ச்ச‌‌ரி‌க்கை வ‌ிடு‌த்து‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கை தீவில் ஈழத்தமிழ் இனத்தையே அழிக்க சிங்கள அரசு நடத்துகின்ற ராணுவத் தாக்குதலுக்கு முழு அளவில் இந்திய அரசு உதவி வருகிறது. இது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.

1987ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அரசு போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக, மக்கள் கவனத்தை திசை திருப்ப, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் உரிமை வாழ்வை அழிக்கும் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த துரோகங்களை மக்கள் மன்றத்தில் கூறியதற்காக திரைப்பட இயக்குநர் சீமான் மீது வசைபாடுகிற காட்டுக்கூச்சலை காங்கிரஸ் எழுப்பி உள்ளது. மும்பையிலே நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குத் தளம் அமைத்து தந்த பாகிஸ்தானோடு போர் புரியவும் தயார் என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் இந்திய அரசு, அதே பாகிஸ்தான் கப்பல் கப்பலாக சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் நிலையில், தானும் தமிழர்களை அழிக்க ஆயுத உதவி செய்யும் அக்கிரமத்தில் ஈடுபட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இலங்கையில் சிங்கள ராணுவத்தளத்திற்கு சென்று, அந்த ராணுவத் தளபதிகளுக்கு யுத்தம் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு இந்திய ராணுவ அதிகாரிகளும் ஆலோசனைகளை வழங்கி உள்ள துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது சகிக்க முடியாத கொடுமை ஆகும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கும் இயக்குநர் சீமானை அச்சுறுத்த எண்ணி, அவர் படப்பிடிப்புக்குச் சென்று இருந்த நேரத்தில், அவரது காரைத் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகளை, காவ‌ல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வன்முறைகளின் மூலம் ஈழ ஆதரவுக் குரலை காங்கிரஸ் ஒடுக்கிவிட முடியாது; அது மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன் எ‌ன்று வைகோ கூறியுள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இ‌ய‌க்குன‌ர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டுமென கூச்சல் எழுப்புவோரையெல்லாம் ஆறுதல்படுத்தும் வகையில் தமிழக அரசு தமிழீழ ஆதரவுக்குரலை நசுக்கமுனைவது ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும் என்று தொல். திருமாவளவன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!
மு‌ம்பை‌மீது பய‌ங்கரவா‌திக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ன்போது ஹேம‌ந்‌த் கா‌ர்கரே உ‌ள்‌ளி‌ட்ட மூ‌ன்று மு‌க்‌கிய அ‌திகா‌ரிகளை‌க் கொலை செ‌ய்தது காவ‌ல்துறை‌‌க்கு‌‌‌ள் உ‌ள்ளசில ச‌க்‌திக‌ள்தா‌ன் எ‌ன்று பு‌திதாக உருவா‌‌கியு‌ள்ள ஐ‌க்‌கிய ஜனநாயக மு‌ன்ன‌‌ணி எ‌ன்ற அமை‌ப்பு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து அ‌ந்த அமை‌ப்‌பி‌ன் பே‌ச்சாளரு‌ம் மு‌ன்னா‌ள் இராணுவ அ‌திகா‌ரியுமான சு‌தி‌ர் சவ‌ன்‌‌த்,”மு‌ம்பை‌க்கு‌ள் 10 பய‌ங்கரவா‌திக‌ள் நுழை‌ந்த நாளான நவ‌ம்ப‌ர் 26 அ‌ன்று இரவு, மரா‌ட்டிய‌ பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ப்பி‌ரி‌‌வி‌ன் தலைவ‌ர் ஹேம‌ந்‌த் கா‌ர்கரே, காவ‌ல்துறை கூடுத‌ல் ஆணைய‌ர் அசோ‌க் கா‌ம்தே, எ‌ன்கவு‌ண்ட‌ர்ஸ்பெச‌லி‌ஸ்‌ட்விஜ‌ய் சலா‌ஸ்க‌ர் ஆ‌கிய 3 பேரு‌ம் 9 எ‌ம்.எ‌ம். து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இதுகு‌றி‌த்துநீ‌திவிசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம்எ‌ன்றா‌ர்.

மு‌ம்பை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த சவ‌ன்‌த்‌திட‌ம், தடய‌விய‌ல் சோதனைவிவர‌ங்க‌ள், ‌பிரேத‌ப் ப‌ரிசோதனை அ‌றி‌க்கை போ‌ன்ற, கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ற்கு‌த் தேவையான ஆதார‌ங்க‌ள் உ‌ள்ளதா எ‌ன்று யு.எ‌ன்.. செ‌ய்‌தியாள‌ர் கே‌ட்டத‌ற்கு, “த‌ற்போது எ‌ங்க‌ளிட‌ம் எ‌ந்த ஆதார‌ங்களு‌ம் இ‌ல்லை, சூ‌ழ்‌நிலையை‌த் த‌விர. அதனா‌ல்தா‌ன்நீ‌திவிசாரணை வே‌ண்டு‌ம் எ‌ன்று கோரு‌கிறோ‌ம். ‌விசாரணை‌க்கு‌ப்பிறகு உ‌‌ண்மை வெ‌ளிவரு‌ம்எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், “மாலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்புக‌ள் வழ‌க்கைவிசா‌ரி‌த்த கா‌ர்கரேதா‌ன் இ‌ந்து‌த்துவாமனுவா‌தி பய‌ங்கரவாத‌த்தை உல‌கி‌ற்கு‌க் கா‌ண்‌பி‌த்தா‌ர். இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் அனைவரு‌ம் பய‌ங்கரவா‌திக‌ள் எ‌ன்ற தோ‌ற்ற‌த்தை அவ‌ர்கி‌ழி‌த்தெ‌றி‌‌ந்தா‌ர். ஆனா‌ல், அதை முடி‌ப்பத‌ற்கு‌ள் அவரு‌ம் ம‌ற்ற இர‌ண்டு அ‌திகா‌ரிகளு‌ம் காமா மரு‌‌த்துவமனை அரு‌கி‌ல் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டுவி‌ட்டன‌ர்.” எ‌ன்று‌ம் சவ‌ன்‌த் கூ‌றினா‌ர்
!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!
world
நோபல் பரிசுத் தேர்வுக்கு குழுவின் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதியியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசைத் தேர்வு செய்யும் குழுவில் உள்ள பலர் சீன அதிகாரிகளின் நிதியுதவியுடன் சீனா சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஸ்டாக்ஹோமில் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரி நில்ஸ் எரிக் தெரிவித்தார்.

நோபல் பரிசுக் குழுவினரை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததன் நோக்கம் குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளில் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு குற்றச்சாட்டில் ஏங்லோஸ்வீடன் மருத்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா செனிகா, இந்தாண்டின் துவக்கத்தில் நோபல் அறக்கட்டளையில் இணைந்துள்ள நோபல் வெப், நோபல் மீடியா ஆகியவற்றிற்கு நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமான ஹுமன் பப்பில்லோமா வைரஸ் கிருமியை கண்டறிந்ததற்காக ஹரால்ட் ஜுர் ஹௌஸனுக்கு இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

ஹுமன் பப்பில்லோமா வைரஸ் (human papilloma virus) நோயை குணப்படுத்த உதவும் 2 மருந்துகளும் அஸ்ட்ரா செனிகா (Astra Zeneca) நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை என்பதால், நோபல் பரிசு அறிவிப்பில் அந்நிறுவனத்தின் தலையீடு ஏதும் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி நில்ஸ் எரிக் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இஸ்லாமாபாத்: மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறிய நிலையில், நவாஸ் ஷெரீப்பின் இந்தக் கருத்து அவருக்கு சவால் விடுப்பது போல் கருதப்படுகிறது.

இதுதொடர்பாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு ஷெரீப் அளித்துள்ள பேட்டியில், அஜ்மல் கஸாப் கிராமத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில் கஸாப் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரது பெற்றோர் யாருடனும் பேச அனுமதிக்கப்படுவது இல்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. கஸாப் பெற்றோரை மக்களும், ஊடகங்களும் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை என்ன என்பது உலகிற்கு தெரியவரும் என்றார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் தலைமையாகக் கொண்டு நாட்டை ஆளும் கூட்டணி அரசு, தோல்வியுற்றதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் சர்தாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 3 தினங்களுக்கு முன் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அதிபர் சர்தாரி அளித்த பேட்டியில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், இதுவரை அதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!
மத்திய கிழக்கிலே இஸ்ரேலுக்கும் காஸா பகுதியிலுள்ள பாலஸ்தீன தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக இருந்துவந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என்றும் அது நீடிக்கப்படவில்லை என்றும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளிவந்த சிறிது நேரத்திலேயே காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலியப் பகுதிக்குள் இரண்டு ரொக்கெட்கள் வந்து விழுந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. அண்மைய வாரங்களில் இருதரப்பினரும் மோதல்களில் ஈடுபட்டுவந்த நிலையில் போர்நிறுத்தம் ஏற்கனவே சிக்கலுக்குள்ளாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 

 

 

 

 

 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எரிபொருள் விலைக்குறைப்பு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு, கட்சி மற்றும் நிறபேதங்களுக்கு அப்பாற்பட்டதாகும். எரிபொருள் பிரச்சினையை நாட்டின் தேசியப் பிரச்சினையாகக் கருதியே நீதியரசர்கள் குழு, குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காலை முதல் நீண்ட வரிசையில் நிற்கின்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை நீதிமன்ற சேவை அதிகாரிகள் சங்கத்தின் மாநாட்டில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னரும் வியாழக்கிழமை காலை முதல் அதிகளவான மக்கள் எரிபொருளுக்காக காத்து நின்றமை கவலைக்குரிய விடயமாகும். இந்நிலைமைக்கு ஒரு வகையில் நானும் பொறுப்புக் கூற வேண்டுமென உணர்கிறேன். ஆனால் நீதிமன்றத்தில் கட்சி, நிற பேதங்களை தாண்டியே அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படுகின்றது என்பதை கூற வேண்டியுள்ளது.இது தேசிய பிரச்சினை. அதனால்தான் உயர் நீதிமன்றம் நான்கு தடவைகள் உத்தரவு பிறப்பித்தது. இதøனை கட்சி அல்லது அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம் என நவம்பர் மாதம் 28ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தி கூறியிருந்தோம். நீதியரசர்கள் குழுவில் இருந்த மூன்று நீதியரசர்களும் இதில் கையொப்பமிட்டனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியல் மோதல்களுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த அரசியல் கருத்து மோதல்கள் நாட்டை ஊழல் நிலைமைக்கு தள்ளும். அனைத்து கட்சிகளையும் அரசியலையும் விட உயர்ந்த இடத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.