‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.12.08) செய்திகள்

 நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மைய இயக்குநர் லக்ஸ்மன் குலுகல்ல கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு அரசியல் பேச்சுகளுக்குத் திரும்பினால்தான் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவது எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அப்படியான ஒரு நிலை இல்லாத நிலையில் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் கடற்பரப்பில் நாள்தோறும் 500 இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைகின்றன என்று அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடத்தல்காரர்களின் நடமாட்டத்தால் தமது நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் இதர பயங்கரவாத அமைப்புகளை விட கடத்தல்காரர்களுடன் புலிகளுக்கு நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும் மகிந்த அதில் கூறியுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து தமிழர்கள் வெளியேறி உள்ளதை நாங்கள் அறிவோம். அவர்கள் புலிகளின் ஆயுதமுனையில் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நேர்காணலில் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணை ஒன்றை கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் கருத்துரைத்துள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில், சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள், நீதித்துறைக்கு அப்பாற்பட்டு சென்றுள்ளதாகவும் அது அரசாங்கம் மேற்கொண்டு வரும் யுத்தத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு உயர் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன மற்றும் டளஸ் அளகப்பெரும ஆகியோர் ஆதரவாக கருத்துரைத்தனர். எனினும் இந்த யோசனைக்கு அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, டியு குணசேக, எச் எம் பௌசி மற்றும் ரோஹித்த போகொல்லாகம ஆகியோர் தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர். 

இந்தநிலையில் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருகமான பசில் ராஜபக்ச முன்வைத்தார். இதேவேளை தலைமை நீதியரசர் சரத் என் சில்வாக்கு புலிமுத்திரைக்குத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை டி என் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லெவெல மேதானந்த தேரர், பெற்றோல் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே யுத்தத்தை அரசாங்கம் நடத்திவருகிறது. இந்தநிலையில் இதனை தடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவே சரத் என் சில்வா செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீதிமன்றத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் எழுந்தமானவையல்ல. அவை மிகவும் நிதானமானவை என்று பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். 

இலங்கை சட்டக்கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

சட்டத்துடன் தொடர்புடைய சகல பிரிவுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே சட்டவாட்சி நீடிக்கக்கூடியதாக இருக்கும். நீதித்துறையைச் சார்ந்த நாம் அனைவரும் சட்டத்தின் பல்வேறு நிறுவனங்களுடன் செயற்பட்டு வருகிறோம். எந்த ஒரு நிறுவனம் சிறப்பாக இருக்கின்றதோ அதன் வெளிப்பாடுகளும் சிறப்பானவையாகவே இருக்கும். இதனையொத்ததே சட்டவாட்சியாகும். 

இன்றைய காலகட்டத்தில் நீதித்துறை தீர்மானங்களுக்கு எமது நாட்டில் வரவேற்பு இருக்கின்றது. பொதுவான தேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளமையே இதற்குக் காரணம். 

பல்வேறு சந்தர்ப்பங்களில் குறுகியதும் விரிவானதுமான வகையில் சட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நிதானமானவை. அதனூடான தீர்ப்புகள் எதுவும் எழுந்தமானவையல்ல. சிந்தித்து நிதானமான தீர்ப்புகளே வழங்கப்படுகின்றன. நீதித்துறை எடுக்கின்ற தீர்மானங்களை அல்லது உத்தரவுகளை நாட்டின் அதிக தரப்பினர் ஏற்றுக்கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

நீதித்துறையின் நடவடிக்கைகளை நாட்டுமக்கள் எதிர்நோக்கிக் கொண்டே இருக்கின்றனர். நீதித்துறையின் தீர்மானங்கள் தனிப்பட்டவரின் முயற்சியில் எடுக்கப்படுபவையல்ல. சட்டத்துறையில் அங்கம் வகிக்கின்ற சட்டத்தரணிகள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரினதும் ஒன்றிணைந்த வெளிப்பாடாகும்.” என்றார் பிரதம நீதியரசர்
!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டை பாதுகாப்பதற்காக அராசங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்க வரி வருமானங்க