‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.12.08) செய்திகள்

பொலன்னறுவை கதுறுவெல ரயில்வே நிலையத்தில் வைத்து சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் செவ்வாய் இரவு 11.30 மணியளவில் கைதுசெய்துள்ளதாகப் பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்தனர்.


கதுறுவெல ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலவியதினாலேயே இவர்களை கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சிங்கள யுவதி ஒருவரும், தமிழ் இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

.
அத்துடன், குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலன்னறுவை பொலிஸார் குறிப்பிட்டனர். அதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் வெலிக்கந்தை முத்துக்கலை மற்றும் செவனப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயற்சிக்கும் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் நேற்றும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் கிளிநொச்சியை நோக்கி நான்கு முனைகளில் படையினர் முன்னேற முயற்சித்துள்ளனர். இந்த மோதலில் 130 படையினர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் வரையில் காயமடைந்ததாகவும் 24 படையினரின் சடலங்கள் மற்றும் ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதனை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துள்ளார்

.
.யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நேற்றும் தீவிரமடைந்துள்ளன. இதில் விடுதலைப் புலிகள் பெரும் இழப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் படைத்தரப்புக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்தின் கறுப்புச் சந்தை வியாபாரம் அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. பெற்றோல் விலை குறைப்பின் மூலம் உயர் நீதிமன்றம் இதனை நிரூபணம் செய்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார்

.
எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதியின் பின்னர் பெற்றோல் விலை மேலும் குறைவடைவதுடன், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளும் குறைவடையும் எனவும் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்

.
எரிபொருள் விலைக் குறைப்பு மற்றும் ஹெஜிங் உடன்படிக்கை ஊழல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் கிளிநொச்சிக்கு வந்தவற்றில் 1,044 பொதிகள் உடைக்கப்பட்ட நிலையிலேயே வந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தால் 80 ஆயிரம் உணவு மற்றும் உடைப்பொதிகள் வழங்கப்பட்டன.
இவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் இந்திய தூதரகத்திடமிருந்து கையேற்கப்பட்டு வன்னிக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றில் முழுதாக பொதிகள் வந்து சேரவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு 32 ஆயிரத்து 783 உணவுப்பொதிகள் வந்துள்ளன. இவற்றில் 1,044 பொதிகள் உடைந்த நிலையில்தான் தம்மிடம் வந்து சேர்ந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாடாளுமன்றத்தின் ஊடாகவோ, சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லாமல் வித்தியாசமானதொரு முறையில் அரசைக் கவிழ்க்க ஐ.தே.க. சதித்திட்டம் தீட்டி வருகின்றது என்று அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அரசு மேலும் தெரிவித்தது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டளஸ் அழகப் பெரும இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:-
2007ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக அரசைக் கவிழ்க்க ஐ.தே.க. திட்டம் தீட்டியது. அம் முயற்சி தோற்றுப்போனது. அடுத்து அரசையும் இந்தியாவையும் மூட்டிவிட்டு அதனூடாக அரசைக் கவிழ்க்க முயற்சித்தது. அதுவும் வெற்றியளிக்கவில்லை.
தொடர்ந்து சர்வதேசத்தின் ஊடாக பொருளாதாரத்தை வீழ்ச்சிபெறச் செய்து அதனூடாக அரசைக் கவிழ்க்க ஐ.தே.க முயற்சி செய்தது. அதையும் நாம் தோற்கடித்தோம்.
வெளிநாட்டு வங்கிகள் எவையும் இலங்கை அரசுக்கு கடன் கொடுக்கக்கூடாது என்றும் அப்படிக் கொடுத்தால் தாம் ஆட்சிக்கு வந்து அக்கடனை அடைக்கமாட்டோம் என்றும் ரணில் சொன்னார்.
கடந்த மாகாணசபைத் தேர்தல்களில் ஊடக அரசைக் கவிழ்க்க ஐ.தே.க. முயன்று தோற்றுப்போனது. இவ்வாறு அரசைக் கவிழ்க்க பல வழிகளிலும் ஐ.தே.க. திட்டம் தீட்டியது. அவை அனைத்தையும் நாம் முறியடித்தோம்.
நாடாளுமன்றின் ஊடாகவும் அல்லாது சர்வதேசத்தின் ஊடாகவும் அல்லாது வித்தியாசமானதொரு முறையில் அரசைக் கவிழ்க்க ஐ.தே.க. முயல்கிறது. இது தொடர்பாக நாம் தற்போது ஆராய்ந்து வருகிறோம் – என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யுத்த நிறுத்தமொன்றைக் கடைப்பிடிக்குமாறு கிறிஸ்தவ மதகுருமார் அரசையும் விடுதலைப் புலிகளையும் கோரியுள்ளனர்.
கத்தோலிக்க அங்கிலிக்கன் ஆயர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையிலுள்ள இந்துத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் இரு முன்னணி இந்து மத அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.
ராஷ்டிரிய சுவாயாம் ஷேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) ஆகிய இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களின் செல்வாக்கையும் அபிமானத்தையும் பெற்றிருக்கும் இந்த இரு அமைப்புகளும் இலங்கையில் இந்து ஆலயங்கள், கலாசாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை எதிர்ப்பதாக யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தெரிவித்திருப்பதாக ஐ. ஏ.என். எஸ். செய்திகள் தெரிவித்தன.
“நீங்கள் உங்களு?டய மக்களுக்கு கூறுங்கள். நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் இந்துக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு இருக்கின்றோம். இலங்கைத் தமிழர்களில் அதிகமானவர்கள் இந்துக்களாக இருப்பதால் அவர்களை கைவிட மாட்டோம்’ என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக்சிங்கால் தனது தலைமையகத்தில் வைத்து சிவாஜிலிங்கத்திடம் உறுதியளித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மேற்படி முரண்பாடு தொடர்பான விடயத்தை ஆலய பரிபாலன சபைத் தலைவருக்கு எடுத்துக்கூறிய மேற்படி பக்தர், வழிபாட்டுக்காக மீண்டும் ஆலயத்திற்குச் சென்றார்.
இந்நிலையில் அந்த நபர் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்துவதற்கிடையில் அங்கு தயாராக நின்ற அர்ச்சகர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட ஏறக்குறைய ஐந்து பேர் மேற்படி பக்தரைத் தாக்கியுள்ளனர்.
இறைவனுக்குத் தூப,தீபம் காட்டுகின்ற உபகரணங்களைக் கொண்டே இவர் மீது தாக்கியதாகவும் இதனால் தலையில் படுகாயமடைந்த இவர் உடனடியாகக் கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பாக ஆலயப் பரிபாலன சபையினர் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து தாக்குதல் நடத்திய அர்ச்சகர்கள் மேற்படி ஆலயப் பூஜை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வேறொரு அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மேலும், காங்கேசன்துறை தொழிற்சாலையை மீளத்திறப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் பாரிய சீமெந்து தொழிற்சாலையாகவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, வடபிராந்தியத்தில் நிலவும் யுத்தம் காரணமாக கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டுள்ளது.
வடக்கில் நடைபெறும் படை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இச்சீமெந்து தொழிற்சாலை திறக்கப்படுமெனவும் அமைச்சர் வெல்கம தெரிவித்தார்.
மேலும், இத்தொழிற்சாலைக்கான இயந்திரங்களும் புதிதாக பொருத்தப்படவுள்ளதுடன், கட்டிடங்களும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இத்தொழிற்சாலையை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே அமைச்சர் குமார வெல்கமவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் நிலவும் சீமெந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும் நியாயமானதொரு விலையினை நிர்ணயிக்கும் முகமாகவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை வழங்குவதுமே இத்தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான நோக்கமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வர சர்மா தேவராஜ சர்மா என்ற இளைஞர் காவலில் வைக்கப்பட்டிந்த போது காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன இளைஞரைக் கைது செய்த இராணுவ வீரர் மீது சட்டமா அதிபர் ஆட்கடத்தல், கடத்தப்பட்டவரை ஒளித்து வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தொடர்ந்த வழக்கில் விசாரணையின் பின்னர் எதிரியை குற்றவாளியாகக் கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன், எதிரிக்கு ஏழு வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து படைவீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை காலை சாவகச்சேரி, மீசாலை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அச்சடலத்தை மீட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி பதில் நீதிமன்ற நீதிவான் எஸ். கணபதிப்பிள்ளை சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கொழும்பு நீதிமன்ற வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் குறித்த சடலம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையை கொழும்பு நீதிமன்ற வைத்தியசாலையிடம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
தென்மராட்சிப் பிரதேசத்தில் நேற்று திடீர் திடீர் என வீதிகள் மூடப்பட்டதால் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டதுடன் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு ஆளாகினர்.
கிளாலி, முகமாலை முன்னரங்க களமுனைகளில் நேற்று முன்தினமும், நேற்றும் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பாதைகள் படையினரின் போக்குவரத்துக் கருதி அடிக்கடி மூடப்பட்டன.
வீதிகள் மூடப்பட்ட வேளைகளில் இராணுவ வாகனங்கள் அங்கும் இங்குமாகத் திரிந்ததினால் மக்கள் போக்குவரத்து அடிக்கடி தடைப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ், வலிகாமம் நீர்வேலி, கோப்பாய்ப் பகுதிகளை சுற்றிவளைத்து இளைஞர்களை புகைப்படம் எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்னர். இதன்போது சிலரின் புகைப்படங்களைக் காட்டி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சில இளைஞர்களைப் புகைப்படப் பதிவிற்கும் உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற யுவதி இனம் தெரியாத ஆயுதாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் காலையில் கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்ற வேளையி்ல் காணாமல் வில்லை என யாழ் மனித உரிமை ஆணைக்குவில் அவரின் தந்தை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டவர் வெளிநாடு செல்வதற்காக யாழ் நாயன்மார்கட்டையிலிருந்து கொழும்பு வந்த 29 அகவையுடைய பேரின்பம் இன்பராணி.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பெய்த கடும் மழையை அடுத்தே இக்காவலரண்கள் கடலில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் கடலும் தொடுவாயும் ஒன்றாகத் தொடுத்துள்ளதை அடுத்து கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த 16.12.2008 செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் பன்குடாவெளி பகுதியில் தளவாய் என்னுமிடத்தில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் தம்பிராசா சின்னராசா என்ற 5 பிள்ளைகளின் தந்தையை ஆயுதமுனையில் மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இக்கடத்தல் சம்பந்தமாக விசேட அதிரடிப் படையினரிடம் அவரது உறவினர்கள் சென்று முறையிட்டபோது அவ்வாறான ஒருவரை நாங்கள் அழைத்து வரவில்லை என்றும், தமக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என்றும், இதுசம்பந்தமாக படைமுகாமிற்கு எவரும் வரவேண்டும் என்றும் மிகக்கடுமையான தொனியில் மிரட்டியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
பயங்கரவாதத்தை ஒடுக்க தேச புலனாய்வு முகமையை ஏற்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கவும் வகைசெய்யும் சட்ட திருத்தமும் நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக நிறைவேறியது

.
இவ்விரு சட்ட வரைவுகளின் மீதும் 6 மணி நேரத்திற்கு நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிடும் அதே வேளையில் இயற்கை நீதி, நியாயமான விசாரணை, மனித உரிமைகள் ஆகியன எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்

.
சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய நீதிபதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர அமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும் என்று கூறிய சிதம்பரம், தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்கள் எந்த விதத்திலாவது குறையுடையதாக இருந்தால் மீண்டும் நாடாளுமன்றத்தை அரசு நாடும் என்றும் கூறினார்

.
அரசு முன்மொழிந்துள்ள இந்த திருத்தங்கள் எந்த விதத்திலும் தங்களையே மாய்த்துக்கொண்டு தாக்குதல் நடத்தவரும் பயங்கரவாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகாது என்றும், அதே வேளையில் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இது உதவும் என்று கூறினார்

.
“இந்தச் சட்டங்கள் அனைத்தும் தண்டனைக்கு வழிவகுக்கக் கூடியனவேயன்றி, பயங்கரவாதத்தை தடுக்கக் கூடியவையல்ல. தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை ஓராண்டுக் காலம் வரை சிறைப்படுத்தலாம் என்ற சட்டம்தான் தடுக்கும் திறன் கொண்டது” என்று சிதம்பரம் கூறினார்

.
“தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள், உலகளாவிய அளவில் பயங்கரவாதம் எ‌வ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வோர், பயங்கரவாத பயி‌ற்சி முகாம்களை அமைத்துத் தருவோர் இத்திருத்தத்தின் கீழ் தண்டிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிணைய விடுதலை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்த மாதிரிகள், கைரேகை போன்றவற்றை மறுக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே குற்றம் சாற்றப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ளது” என்று கூறிய அமைச்சர் சிதம்பரம், நமது நாட்டின் குற்றத்தடுப்புச் சட்டங்கள் அனைத்தும் மதச்சார்பற்றவையே என்று கூறினார்

.
பயங்கரவாத நடவடிக்கைளைத் தடுக்க ஜனவரி 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் முதலமைச்சர்கள் மாநாடு கூட்டப்படும் என்று கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காரணமில்லாமல் களம் அமைத்துப் பேரணி நடத்தும் ஜெயலலிதா சிறுதாவூர் பிரச்சனையில் மட்டும், தன் வாய்க்குத் தானே பூட்டுப் போட்டுக் கொண்டு மவுனமாகிவிடுகிறார்” என்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், 16.12.2008 அன்று “புரட்சி பாரதம்” என்ற கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட எழுச்சிப் பேரணியொன்று “சிறுதாவூரில்” அமைதியான அறப்போர் ஒன்றை நடத்தி; தலித் மக்களின் நிலங்களை அபகரித்து அங்கே ஆடம்பர மாளிகை கட்டியிருப்பதாக குற்றம்சாட்டியதோடு; “இது தொடக்கம்தான்; அபகரிக்கப்பட்டுள்ள ஏழை தலித்துகளின் நிலங்களை மீட்க; எங்கள் போராட்டம் தொடரும்” என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்

.
காரணமில்லாமல் தமிழகத்தில் கண்ட கண்ட ஊர்களில் களம் அமைத்துப் பேரணி நடத்திடக் கச்சை கட்டிப் புறப்படுகின்ற ஜெயலலிதா, சிறுதாவூர் பிரச்சனை என்று வந்தால் மட்டும் தன் வாய்க்குத் தானே பூட்டுப் போட்டுக் கொண்டு மவுனமாகி விடுகிறார்.என்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் 6-வது க‌ட்டமாக 10 ச‌ட்ட‌ப்பேரவைத் தொகு‌திகளு‌க்கு நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் 63 ‌விழு‌க்காடு வா‌க்குக‌ள் ப‌திவானதாக முத‌ல்க‌ட்ட‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன

.
கடு‌ம் கு‌ளி‌ர் காரணமாக வா‌க்கு‌ப் ப‌தி‌‌வு ம‌ந்தமான ‌‌நிலை‌‌யி‌ல் தொட‌ங்‌கினாலு‌ம், ‌பி‌ன்ன‌ர் ‌விறு‌‌விறு‌ப்பாக நட‌ந்தது

.
தே‌ர்தலை‌ புற‌க்க‌ணி‌க்க‌ப் போவதாக பி‌ரி‌வினைவாத அமை‌ப்புக‌ள் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்த காரண‌த்தா‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்‌க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது. ‌பி‌ரி‌வினைவாத அமை‌ப்புக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் ‌வீ‌ட்டு‌க்காவ‌லி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்

.
இரு‌ந்தாலு‌ம் அ‌வ்வமை‌ப்புக‌ளி‌ன் அ‌றி‌வி‌ப்பு வா‌க்கு‌ப் ப‌தி‌வி‌ல் பெரு‌ம் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்த‌‌வி‌ல்லை. ம‌க்க‌ள் வழ‌க்க‌ம்போல ‌மிகு‌ந்த ஆ‌ர்வ‌த்துட‌ன் வ‌ந்து வா‌க்க‌ளி‌த்தன‌ர்

.
அன‌ந்‌த்நா‌க் தொகு‌தி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ஒரு ‌சி‌றிய ‌நிக‌ழ்வு த‌விர மொ‌த்த‌த்‌தி‌ல் தே‌ர்த‌‌ல் அமை‌தியாக நட‌ந்ததாக தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி மசூ‌த் சமூ‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றினா‌ர்

.
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ர் ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு 7 க‌ட்டமாக தே‌ர்த‌ல் நடைபெ‌ற்று வரு‌கிறது. 7-வது ம‌ற்று‌ம் இறு‌தி‌க்க‌ட்ட‌த் தே‌ர்த‌ல் வரு‌ம் 24ஆ‌ம் தே‌தி நட‌க்‌கிறது. வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை 28ஆ‌ம் தே‌தி நட‌க்‌கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இ‌ந்‌திய- வ‌ங்கதேச எ‌ல்லை‌யி‌ல் வே‌லி‌யிடு‌ம் ப‌ணி‌யி‌‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள மு‌ன்னே‌ற்ற‌ம் தன‌க்கு‌த் ‌திரு‌‌ப்‌தி தர‌வி‌ல்லை எ‌ன்று‌ம், அ‌ப்ப‌ணியை‌த் ‌தீ‌விர‌மா‌க்க நடவடி‌க்கைக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌‌ம்பர‌ம் மா‌நில‌ங்களவை‌யி‌ல் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்

.
வ‌ங்காளதேச‌த்‌தி‌ல் முகா‌மி‌ட்டு‌ள்ள பய‌ங்கரவா‌திகளா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு ஆப‌த்து உ‌ள்ளது எ‌ன்பதை ம‌த்‌திய அரசு ந‌ன்கு உண‌ர்‌ந்து‌ள்ளதாகவு‌ம், இதுகு‌றி‌த்து வ‌‌ங்காளதேச‌த்‌தி‌ல் பு‌திய ஜனநாயக அரசு அமை‌ந்தவுட‌ன் அத‌னிட‌ம் பேச‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் உறு‌திய‌ளி‌த்தா‌ர்

.
எ‌ல்லை‌யி‌ல் வே‌லி‌யிடு‌ம் ப‌‌ணியை ‌தி‌ட்ட‌மி‌ட்ட கால‌த்‌தி‌ற்கு‌ள் முடி‌க்குமாறு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வ‌‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளதாக‌த் தெ‌‌ரி‌வி‌த்த ‌சித‌ம்பர‌ம், கால‌க்கெடு‌வி‌ற்கு ஏ‌ற்ப‌ ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கான வரைபட‌ம் தயா‌ரி‌ப்‌பி‌ல் உ‌ள்ளதாக‌‌க் கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு எழுதிய கடிதத் திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்துள்ளார். .

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கடந்த மாதம் 19ந் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்

.
அந்த கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், அண்மையில் இலங்கை கடற் படையால் கடத்திச் செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்

.
அவருடைய கோரிக்கைகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்து இம்மாதம் 8ந் தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

.
அதில் அவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கை காரணமாக இம்மாதம் 4ந் தேதி 21 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி யிருக்கிறார்

.
இலங்கையுடனான தற்போதைய ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசு தனது கடலோரப் பகுதியில் வரை யறை செய்துள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் தமிழக மீனவர்கள் நுழையா மல் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானது என்றும், இந்தப் பகுதிகளில் இந்திய படகுகள் மற்றும் கப்பல்கள் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சங்கரன்கோவிலில் அருகே ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்

.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இதை வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன

.
இதற்கிடையே, ஆலய வழிபாடு நடத்த உரிமைக்கோரி, கடந்த மாதம் தலித் சமூகத்தினர் அருகேயுள்ள மலைப்பகுதியில் குடியேறினர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊர் திரும்பினர்

.
இந்நிலையில், தலித் சமூகத்தவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோயில் நுழைவு போராட்டம் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற சமூகத்தினரும் ஊரைவிட்டு வெளியேறி மலைப்பகுதிக்கு சென்றனர்

.
இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால், சமீபத்தில் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது

.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, திண்டுக்கல் எம்எல்ஏ பாலபாரதி, மதுரை கிழக்கு எம்எல்ஏ நன்மாறன் உள்பட சுமார் 350 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
!!!!!!!!!!!!!!!!
world

 

2008 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவை டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் புகழ் பெற்ற டைம் வார இதழ் ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்து தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. .

இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டைம் வார இதழின் இணையதளத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது

.
முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, ஒலிம்பிக் சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ், பிரான்ஸ் அதிபர் சர்கோசி உள்ளிட்ட பலரது பெயர்கள் இதற்காக பரிசீலிக்கப்பட்டு இறுதியில் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

.
டைம் பத்திரிகையின், ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்படுவது மிகப் பெரிய கவுரமாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் மகாத்மா காந்தி உள்ளிட்ட மகத்தான தலைவர்கள் இந்த கவுரவத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

.

!!!!!!!!!!!!!!!!!!!

பங்காளதேஷில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக அமலில் இருந்து வந்த அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது

.
வருகிற 29 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட ஏதுவாக அவசர நிலையை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது

.
இது தொடர்பாக பங்காளதேஷ் அதிபர் இயாஜுதீன் அகமத் வெளியிட்ட அறிவிக்கையில், அவசர நிலையை திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!
பிரிட்டன் இராக்கிலுள்ள தமது துருப்பினரை அடுத்த வருடத்தின் மையப்பகுதியோடு விலக்கிக்கொள்ளும் என்பதை அந்நாடு உறுதிசெய்துள்ளது.
திடீர் விஜயமாக பாக்தாத் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் பிரிட்டிஷ் யுத்த களப் படைகள் அடுத்த மேமாத இறுதியோடு தமது பணிகளை நிறைவுசெய்துகொள்வார்கள் என்றும், அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற இரண்டு மாதங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பயிற்சியும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்க சிறு எண்ணிக்கையிலானவர்களே இராக்கில் தங்கியிருப்பார்கள் என்று தெரிகிறது.
தெற்கு இராக்கின் பஸ்ரா நகரில் தங்கியுள்ள பிரிட்டனின் நான்காயிரம் படையினரின் வெளியேற்றத்துக்கு வழிவகுக்கும் சட்டம் இராக்கிய அரசால் வரையப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.