ஆஸியில் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையரா? : அதிகாரிகள் சந்தேகம்

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கடற்கரைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 37 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இலங்கையர்களாக இருக்கக் கூடும் என அங்குள்ள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதிக்கு வடக்கே 200 கடல் மைல் தொலைவில் வைத்து நேற்றைய தினம் இவர்களைக் கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த படகில் பயணம் செய்தவர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கக் இருக்கக் கூடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரையில் இவ்வாறு 7 படகுகளில் வந்தவர்கள், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தற்காலிக பாதுகாப்பு வீஸா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலானோர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதாக எதிர்கட்சியின் நிழல் குடிவரவு பேச்சாளர் சார்மென் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தக் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் பொப் டெபியஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.