கிளிநொச்சியில் முறியடிப்பு : படையினர் 100 பேர் பலி, 250 பேர் காயம் – புலித்தேவன்

 

புலிக்குளம், குஞ்சுப்பரந்தன், மலையாளபுரம், முறிகண்டி ஆகிய நான்கு முனைகளில் இருந்து படையினர் முன்னேறி வல்வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் முன்னரங்க போராளிகள் மேற்கொண்ட உக்கிரமான முறியடிப்புத் தாக்குதலில் பெருமளவிலான ஆயுதங்களும், படையிரது 10 உடலங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக புலித்தேவன் கூறினார்.

இன்று காலை 5:00 மணியளவில் ஆரம்பித்த மோதல் மாலைவரை நீடித்திருப்பதாகவும், கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களுக்குள் மேற்கொண்ட மூன்றாவது முன்னகர்வு முயற்சி இதுவெனவும் அவர் தெரிவித்தார்.

ஏ.கே-எல்.எம்.ஜி – 2

பி.கே-எல்.எம்.ஜி – 1

ரி-56 துப்பாக்கிகள் – 6

உட்பட பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட 10 உடலங்களையும், கிளாலியில் இன்று காலை கைப்பற்றப்பட்ட 8 உடலங்களையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகக் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.