ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவையில் இலங்கைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் சாத்தியம்

posted in: தமிழீழம் | 0

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத் தொடரின் போது இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உரிமையைக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு நாடுகள், இலங்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

ஒஸ்ட்ரிடியா, ஜப்பான், துருக்கி, மெக்ஸிக்கோ, உகண்டா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வருடத்தில் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தின் போது இலங்கையின் நிலவரம் குறித்து பிரதானமாக கவனம் செலுத்தப்படக்கூடும் என வெளிவிவகார அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டு மறைமுகமான முறையில் ஆதரவு திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது..

இன ஒழிப்பு மற்றும் யுத்தக் குற்றங்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு நேரடியாக தலையீடு செய்ய வேண்டுமென அமெரிக்காவின் புதிய ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத் தொடரின் போது,.

இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது..

குறிப்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பலிக்கார நாட்டின் நன்மதிப்பை அதிகரிக்கும் வகையிலான பிரசாரங்களை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் போகொல்லாகம கோரியுள்ளார்..

இதேவேளை இலங்கையில் நன்மதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த விடுமுறைக் காலத்தில் 10 12 முக்கிய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது..

எனினும் குறித்த விஜயங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பலனளிக்காதென தூதுவராலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மேற்குல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கிறிஸ்மஸ் விடுமுறையைக் கழிப்பதற்காக வேறு நாடுகளுக்குச் செல்லக் கூடும் என்பதனால் இலங்கை அமைச்சர்களின் குறித்த விஜயங்கள் பயனளிக்காதென சுட்டிக்காட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.