வன்னி நடவடிக்கைக்காக எட்டாவது படையணி உருவாக்கம்

posted in: தமிழீழம் | 0

‘நடவடிக்கை படையணி ஐந்து (TASK FORCE- V)’ எனப்படும் 65 ஆவது பிரிவினை உருவாக்கும் முயற்சிகளில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- ‘நடவடிக்கை படையணி ஐந்து (TASK FORCE- V)’ எனப்படும் 65 ஆவது பிரிவினை உருவாக்கும் முயற்சியில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.

இந்தப் படையணியானது வன்னி படை நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படும் 8ஆவது பிரிவாகும். புதிய படையணியின் கட்டளை அதிகாரியாக 56 ஆவது படையணியின் பிரதி கட்டளைத் தளபதி கேணல் அத்துல கலகமே நியமிக்கப்பட்டுள்ளார்.

65-1 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக லெப். கேணல் பிரியங்க பெர்னாண்டோவும் (இவர் 11 ஆவது கெமுனுவோச் றெஜிமென்டை சேர்ந்தவர்), 65- பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக லெப். கேணல் ரஞ்சித் அபயரட்னவும் (இவர் 7ஆவது இலகு காலாட்படை றெஜிமென்டைச் சேர்ந்தவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

58 ஆவது படையணியின் சிறப்புப் படைப் பிரிகேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் ஹரேந்திர ரணசிங்க 57- 1ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

57-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரிய, மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சானா குணதிலக்க 56ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

56 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்கோத்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பயிற்சி நெறிக்காக செல்லவுள்ளதனால் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.