இன்று சர்வதேச தேயிலை தினம்

தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. அந்த இனிய தேயிலையின் தினம் இன்று சர்வதேச ரீதியில் நினைவுகூரப்படுவதும் ஒரு இனிப்பான செய்திதானே?

தேயிலை கண்டுபிடிக்கப்பட்டு பல நூற்றாண்டு காலமானாலும் அதற்கென ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருப்பதென்னவோ இந்த 20ஆம் நூற்றாண்டில் தான் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். 2008 ஆம் ஆண்டு புதுடில்லியில் முதற்தடவையாக ஷசர்வதேச தேயிலை தினம்| ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளே டிசம்பர் 15 ஆம் திகதியை சர்வதேச தேயிலைத் தினமாகக் கொண்டாட திர்மானித்தன. தேயிலை தினம் தொடர்பான பல நிகழ்வுகள் இன்று நம் நாட்டின் மத்தியில் குறிப்பாக நாவலப்பிட்டியில் நடைபெறுகின்றன.

பிரிட்டி~hரின் ஆட்சிக் காலத்திலேயே தேயிலை இலங்கையில் அறிமுகமானது என வரலாறு கூறுகின்றது. தேயிலைச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர் என்பதும் கூட ஒரு பெரிய வரலாறுதான்.

ஆரம்ப காலத்தில் கொக்கோவும் கோப்பியுமே இலங்கையின் அதிகூடிய உற்பத்திப் பொருட்களாக காணப்பட்டன. இவற்றின் மூலம் ஏராளமான பண வருவாய் பெறப்பட்டிருந்தாலும் போதிய அக்கறை செலுத்தப்படாமையால் அவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னரே பிரிட்டி~hருக்குத் தேயிலை மீது நாட்டம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக தேயிலை உற்பத்தி இலங்கையில் புகழ் பெற ஆரம்பித்தது. இன்று சர்வதேச தரத்தில் ஒரு முதன்மை இடத்தை இலங்கை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றே.

தேயிலையில் பல ரகங்கள் உள. அந்தந்த ரகங்களைப் பொருத்து தேநீருக்குப் பெயரிடப்படுவதுமுண்டு. ஷப்ளெக் டீஷ (டீடயஉம வுநய)இ ஷக்ரீன் டீ| (புசநநn வுநய) என்பன அவற்றில் சில. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஷமசாலா டீ| என்று ஒரு வகையும் உள்ளது. இது மருத்துவ குணம் கொண்டது எனக் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளில் தேயிலைக்கு என்று தனியான கலாசாரம் ஒன்று உள்ளது. நம் நாட்டில் அவ்வாறு இல்லையென்றாலும் தேயிலையை விரும்பி அருந்துபவர்கள் ஏராளமாகவே உள்ளனர். நம் நாட்டின் கிராமப்புறங்களில் ஷபிளெயின் டீ| (Pடயin வுநய) நம் நாட்டில் பிரசித்தம்.

இலங்கையில் தேயிலையின் பிறப்பிடம் மலையகம் தான். உயர்ந்த பனி மலைப் பிரதேசங்களிலேயே தேயிலை செழித்து வளரக் கூடியதாக உள்ளமையே இதற்குக் காரணம். இலங்கையின் மத்தியப் பிரதேசங்களில் இன்று தேயிலையே பேராட்சி புரிந்து வருகிறதென்றால் கூட அது மிகையல்ல.

பச்சை மெத்தை விரித்தாற் போல் மலையகமெங்கும் தேயிலை மலைகள் கண்களுக்கு விருந்தளிப்பவை. நாள் முழுவதும், காலம் முழுவதும் அதன் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இவ்வருட தேயிலை தினத்தின் தொனிப் பொருள் ஷபெண்கள் தலைமைத்துவத்தை உருவாக்குவோம்| என்பதே. உண்மைதான் தேயிலைத் தளிர்களைப் பக்குவமாகக் கொய்து தருபவர்கள் பெண்கள் அல்லவா? இவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியதும் காலத்தின் தேவைதான்.

Leave a Reply

Your email address will not be published.