திருவள்ளூர் அருகே 2-சிறுவர்களை காரில் கடத்திய மர்ம கும்பல்

posted in: தமிழ்நாடு | 0

திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் பிரதாப் ராஜ். அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ரவிச்சந்திரன்.6-வது வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை இருவரும் பட்டரை பெரும்புதூர் ஆற்று பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.திருத்தணி சாலையில் இருவரும் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.இரவு 7.30 மணி அளவில் திடீரென்று சாலையில் சென்ற கார் சிறுவர்கள் அருகே நின்றது.அதில் இருந்து இறங்கி வந்த மர்ம நபர்கள் 2 சிறுவர் களின் கையை பிடித்து காரில் ஏற்றினர்.இதனால் சிறுவர்கள் கதறி அழுதனர்.

திருத்தணியை அடுத்த ராமஞ்சேரி கிராமத்தின் அருகே கார் வந்தது. ரோட்டில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் சிறுவர்கள் அலறல் சத்தம் கேட்டு காரை மறித்தனர்.

இதனால் அந்த மர்ம நபர்கள் காரில் இருந்து சிறுவர்களை தள்ளி விட்டு விட்டு தலைமறைவானார்கள்.இருட்டில் சிறுவர்களை கடத்தி வந்த காரின் பதிவு எண்ணை யாரும் பார்க்கவில்லை.

மாணவர்கள் கடத்தப்பட்ட செய்திபட்டரை பெரும் புதூர் கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது.கிராம மக்கள் திருத்தணி சாலைக்கு திரண்டு வந்தனர்.ராமஞ்சேரி கிராமத்தில் பாதுகாப்பாக இருந்த சிறுவர்களை பெற்றோர்கள் சென்று மீட்டு வந்தனர்.

மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிறுவர்களை கடத்திய கும்பல் யார்? எதற்காக கடத்தி சென்றனர் என்று திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.