அம்பாறையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி நான்கு அதிரடிப்படையினர் பலி

posted in: தமிழீழம் | 0

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதி நோக்கி பாரிய தேடுதல் நடவடிக்கைக்காக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணியொன்று களமிறக்கப்பட்டது.

இந்த அணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:05 நிமிடமளவில் சிக்கியது.

இதில் நால்வர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து படையினர் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினையும் செறிவான எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.