இராணுவத்தின் குண்டுமழையால் இலங்கையில் உயிர்வாழ முடியாது: தமிழகம் சென்ற அகதிகள்

இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டுமழை பொழிவதால் அங்கு உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் சென்ற அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஏழு அகதிகள் கடந்த புதன்கிழமை பேசாலைக் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினர்.

அவர்களுள் அன்பரசி (வயது 26) என்பவர் கூறுகையில் இலங்கையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லும் இராணுவத்தினர் அவர்களைக் கொன்று விடுகின்றனர்.

இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டுமழை பொழிவதனால் அங்கு உயிர் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு குடும்பத்துடன் அகதியாக வந்தோம் என்றார்.

பின்னர் பாம்பன் பொலிஸார் அகதிகளை விசாரணை செய்து மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.